(Reading time: 13 - 25 minutes)

எத்தேச்சையாக நிதின் அங்கே வர.. அவனைப் பார்த்த தரணுக்கு எல்லாவற்றிற்கும் இவன்தான் காரணம் என்றே தோன்றியது..

கட்டுக்கடங்கா கோபத்தில் இருந்தவன் நிதினைக் கண்டதும் உணர்வுகள் மேலும் தூண்டப்பட.. அவனை அடிக்கச் சென்றிருந்தான்..

அதற்குள் அங்கு வந்த லாவண்யா அவனைத்தடுக்க..

“விடு லாவண்யா என்னை..”, மூர்க்கமாய் அவன் திமிர.. அவனை தடுக்க முடியாமல் அவனை விட்டவள் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்..

“லா..வ..ண்யா..”, திகைப்பாய் இவன் அவளை அழைக்க..

“பேசாம போய் உட்காரு..”, ஆணையிடுவதுபோல் உரைக்க.. அமைதியாக இவனும் அவள் பேச்சைக் கேட்டிருந்தான்..

தங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் இவள் அமரச் செய்தபின் கிளாஸ் ரூமிலிருக்கும் டையசில் ஏறியவள்..

“இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்..??”, பாவனையாக கேட்க.. இப்பொழுது இவளைக்கண்டு அனைவருக்கும் பயம் தோன்றியது..

அவர்களின் அமைதியில் எரிச்சலானவளாக, “என்ன தெரியனும் உங்களுக்கு..??”, ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து மீண்டும் அக்கேள்வியை கேட்டிருந்தாள்..

காலையில் தரணிடம் கேட்ட கேள்வியை லாவண்யாவிடம் கேட்டிருந்தான் காலையில் அடிவாங்கியவன்..

அவர்கள் இருவரையும் அவமானப்படுத்தும் நோக்குடன்.. கொஞ்சம் கொச்சையாக..

சில பெண் குழந்தைகள் அதை சஹிக்காது காதைப் பொத்திக்கொள்ள..

அவனை மீண்டும் அடிக்க தரண்யன் எழ.. அவனைத் தடுத்த லாவண்யா..

தவறாக பேசியவனை அவ்வளவுதான் உன் தராதரம் என்பதாய் பார்த்துவைத்தாள்..

அவனிடத்தில் யார் இருந்தாலும் அந்தப் பார்வையில் கூனிக்குறுகித்தான் போக வேண்டும்.. அப்படியொரு பார்வை அது..

“ஏன் உனக்குத் தெரியாதா எங்க ரிலேஷன் பத்தி..??”, மற்றவனை எரிப்பதுபோல் லாவண்யா கேட்க..

“எனக்கெப்படித் தெரியும்.. நீ சொன்னாத் தெரிஞ்சுக்கறோம் நாங்க..”, நக்கலாய் அவன் பதில் தர..

பொறுமை எல்லை கடக்கத் துவங்கியது லாவண்யாவிற்கும்..

“லாவண்யா இவனுக்கெல்லாம் நீ எதுக்கு பதில் சொல்ற..??”, தரண்யன் கோபமாக..

“சரிதான்.. பதில் சொல்லத்தேவையில்லைதான்.. ஆனால் பாரு.. நம்ம இரெண்டு பேரைப் பற்றி எப்படியொரு பிம்பம் இவர்களுக்கு.. அதை நாம் மாற்ற வேண்டாம்மா..??”

“நாம் விளக்கம் கொடுத்தால் மட்டும் இவர்கள் அதைப் புரிந்துகொள்வார்களா..??”

“அப்போ எல்லாத்தையும் அப்படியே கடந்துபோக சொல்றியாடா நீ..??”

“நான் அப்படி சொல்லல.. பட் இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் எழும்.. சோ வேண்டாம் இது..”

“எது..??”

“இவர்களுடன் பிரச்சனை செய்வதுதான்..”

“நான் பிரச்னையை ஆரம்பிக்கவில்லையே..??”, நீ தான் ஆரம்பித்தாய் என்று லாவண்யா சுட்டுக்காட்ட.. புரிந்தது அவனுக்கு..

தான் யாரையும் ஹர்ட் செய்யக்கூடாதென்று இவள் இடையில் புகுந்திருக்கிறாள் என்று..

நிதானித்துவிட்டான் அவன்..

விளக்கம் சொல்வதாலோ தாங்கள் இவருவரும் பேசாமல் இருப்பதாலோ பிரச்சனை தீராதேன்று புரிந்தே இருந்தது இருவருக்கும்..

இவர்களுகளுக்கு தாங்கள் விளக்கம் சொல்லித்தான் இவர்கள் தங்களை புரிந்துகொள்ளவேண்டும் என்றால்.. அப்படி ஒரு புரிதல் தேவையில்லை என்ற எண்ணம் லாவண்யாவிற்குள்..

அதை தரண்யனிடம் மறைமுகமாக உணர்த்த.. கோபத்தில் புரிந்துகொள்ளாமல் இருந்தவன்.. நிதானத்தில் புரிந்துகொள்ள..

தன்னை அவன் புரிந்துகொண்டதில் ஒருவித நிம்மதி அவளுள்..

இருவரின் வாக்குவாதமும் அனைவரின் முன் நடக்க.. எரிச்சலானான் நிதின்..

தான் மீண்டும் தோற்றிவிட்டதாய் தோற்றம் ஏற்பட.. பெஞ்சில் ஓங்கி குத்தியவன்..

அடுத்ததைப் பற்றி தீவிரமாக யோசிக்கத்துவங்கினான்..

அவனைக் கண்டதும் மனம் லேசாக படபடக்க.. நடையில் தடுமாற்றம் எழ அங்கேயே நின்றுவிட்டாள் சமுத்திரா..

சமுத்திர ராணிக்கு சமுத்திரனனின் மீது காதல்..

பிஜியில் சேர்ந்திருக்கும் மாணவன் அவன்.. சமுத்திராவும் அவனும் ஒரே டிப்பார்ட்மென்ட்..

இருவரையும் ஒருதடவை ஒரே அஸைன்மென்ட் க்ரூப்பிலிட.. இருவருக்கும் நல்ல அறிமுகம் உண்டு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.