(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - தாரிகை - 10 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2004..

துக்கம் ஒன்றும் புதிதல்ல அவளுக்கு..

கடந்த சில ஆண்டுகளாக அவள் அதை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் தான்..

இருந்தும் இன்றைய அவனின் ஒதுக்கம் அவளின் நெஞ்சை கூறுபோடுவதாய்..

சில ஆண்டுகளுக்குப் பிறகு கண்கள் தாமாக கலங்கிவிட்டதடு பெண்ணுக்கு..

“சமுத்திரா.. ரூம்க்குள்ள இவ்ளோ நேரம் என்ன பண்ற..??”, தாய் அதட்டலாக கத்தியும் பதில் இல்லை அவளிடம்..

அவன்தான் அவளுடன் பயனித்துக்கொண்டிருக்கிறானே..

தன் நினைப்பெல்லாம் கானல் நீரென்று தெரிந்திருந்தபோதிலும்.. அவளால் அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை..

கதவு இப்பொழுது பலமாக தட்டப்பட..

தூக்கிவாரிப்போட்டவளாக திறந்திருந்தாள் சமூ..

அழத்து வீங்கிய முகம் எதுவோ சரியில்லையென தெரிவிக்க..

“என்னடாம்மா..??”, ஆதரவாக தாய் கேட்க..

இவரிடம் என்ன சொல்ல.. கலங்கித்தான் போனாள் அவள்..

அவரிடம் மறைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை அவளுக்கு.. ஆனால் இவ்விஷயத்தை எப்படிச் சொல்வதாம்..??

“என்னடா ஆச்சு..??”, பதற்றமாய் மீண்டும் தாய் கேட்க..

அவர் முகம் காண முடியா அவஸ்த்தை தோன்ற நிலம் நோக்கி நின்றுவிட்டாள் அவள்..

அவள் குழந்தைத்தனமான செயல்கள் எல்லாம் சிரிப்பை உண்டுசெய்ய இம்முறை சிரிப்புடன் அவளது தோளைத் தட்டினார் அவர்..

இனி தான் பதில் சொல்லித்தானாகவேண்டும் என்று உணர.. வாய்க்கு வந்த பொய்யை அவரிடம் சொன்னவள்.. வேலை இருக்கு என்று முணுமுணுத்துவிட்டு அறைக்குள் முடங்கிப்போனாள்..

அவள் முகமும் உடல் மொழியும் அவளது தடுமாற்றத்தை பிரதிபலித்துட.. தன் பெண் பொய் உரைத்துவிட்டுச் செல்கிறாள் என்று நன்கு புரிந்தது தாய்க்கு..

ஆனால் அவளிடம் மேலும் துருவிக்கேட்க மனமில்லை அவருக்கு..

மூடியிருந்த அறையைக் கண்டு பெருமூச்சு விட்டவர் தனது வேளைகளில் அவரும் மூழ்கிப்போனார்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரண்யனும் லாவண்யாவும் அன்று மாணவர்களை க்ரூப் க்ரூப்பாகப் பிரிக்க ஆசிரியர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தனர்..

இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய.. அதைப் பார்த்துக்கொண்டிருந்த நிதினுக்கு பொறுக்கவில்லை அது..

அனைத்து மாணவர்களும் அண்ணா அக்கா என்று அவர்களை சுற்றிவர உள்ளுக்குள் புகைந்து போனான் அவன்..

எப்பொழுதும் இவன் எல்லாவற்றிலும் ஜெய்த்துவிடுகிறான்.. இவனை ஏதாவது செய்துவிடவேண்டும்..

மனது பரபரத்துக்கொண்டிருந்தது நிதினுக்கு..

காத்திருக்கத் துவங்கினான் அவன்..

சந்தர்ப்பம் விரைவில் அமையும் என்று உணராமலே.. அது தரணை அக்கினியில் இருந்து தோன்றும் பீனிக்ஸாக மாற்றும் என்று புரியாமலே..

தானே அறியாமல் அவனை தான் செதுக்கப்போவது தெரியாமலே..

“நிதின்.. யூ ஆர் இன் மெஜந்தா க்ரூப்..”, ஆசிரியர் சொல்ல.. அதுவரை தரணையும் லாவண்யாவையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவன் தனது க்ரூப்புடன் சேர்ந்து நின்றுகொண்டான்..

ஆனால் பார்வையெல்லாம் இருவரின் மீதும்..

“லாவி.. செவன்த்துக்கு மட்டும் க்ரூப் பிரிக்கணும் அவ்வளது தானே..??”, தரண்யன் கேட்க..

பேப்பரை எடுத்து செக் செய்த லாவண்யா, “நயன்த்தில் ஒரு செக்ஷனும் பாக்கி இருக்கு தரண்யா..”, என்றவள்.. அவன் சோர்ந்த குரல் அறிந்து ஆறுதலாக கையை தட்டிக்கொடுத்தவள், “இன்னும் ஒரு ஹால்ப் அன் ஆர்.. அவ்ளோதான்..”, என்க..

புன்னகைத்தான் அவன் அவள் கைகளில் லேசாக அழுத்தம் கொடுத்து..

அவன் அதை இயல்பாக செய்தான் தான்.. ஆன் இன்ஸ்டன்ட் ரியாக்ஷன்..

நமக்கு யாராவது கையைப்பிடித்து ஆறுதல் சொல்லும்பொழுது நாம் கொடுக்கும் ரியாக்ஷன்..

ஆனால் தரணின் இந்த செயல் நிதினின் மனதில் விதைகளை விதைக்க துவங்கியிருந்தது.. தேவையில்லாத அழுகிய விதைகளை அவை.. எல்லாம் குப்பைக்குச் செல்லவேண்டியவை என்று தெரியவில்லை நிதினுக்கு..

அது நட்பென புரியவில்லை அவனுக்கு.. கொளுத்திப்போட காத்திருந்தவனாய் இருவரது செயல்களையும் தன்னருகில் நின்றிருந்தவனிடம் சொல்ல..

அந்தி சாயும் வேலைக்குள் அனைவரிடமும் பரவியிருந்தது அந்தச் செய்தி..

எங்கு சென்றாலும் அனைவரும் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க.. ஒரு குரூர நிம்மதி நிதினுக்குள் பரவுவதாய்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.