(Reading time: 13 - 25 minutes)

மிகவும் இரசித்தான் அதை..

செய்தி அனைவரிடமும் பரவிவிட்ட பொழுதும் தெரியவேண்டியவர்களுக்குத் தெரியவில்லை என்று கொஞ்சம் வருத்தம் நிதினுக்குத் தோன்ற..

தனது அடுத்த காயை நகர்த்தியிருந்தான்..

அதன் பலனாய் தரணின் தங்கை தமையனைத் தேடி வந்திருந்தாள் மற்ற நாள் விடியலிலே.. அதுவும் அவன் வீட்டிற்கே..

அவள் வருகையில் வழக்கம்போல் மனம் மகிழ..

“நித்தீ..”, பாசமாக அவள் தலையை இவன் வருடிக்கொடுக்க..

தட்டிவிட்டிருந்தாள் அவள் கோபத்துடன்..

“நித்தீ..”, அதிர்வாய் அவன் விழித்து நிற்க..

“அந்த லாவண்யாவை நீ லவ் பண்றியா அண்ணா..??”, எதையும் சுற்றி வளைக்காமல் நித்தி கேட்க..

என்ன உளருகிறாள் இவள் என்பதாய் இவன் பார்த்துவைக்க.. அவன் அமைதி இவளை கோபமூட்ட..

“இரு பெரியம்மாட்ட சொல்றேன்..”, என்றிருந்தாள் நித்தி..

“என்ன சொல்லப்போற அம்மாகிட்ட..??”, மீளாமல் அவன் கேட்க..

“உன்னையும் லாவண்யாவையும் பத்தித்தான்..”, கோபமாக அவள் சொல்ல..

“லூசா பாப்பா நீ..??”, கோபமாக இவன் கேட்டிருக்க..

பண்றதெல்லாம் இவன் பண்ணிட்டு.. என்ன சொல்றான்.. எண்ணங்கள் தோன்ற..

“நீயும் அந்த நிதின் மாதிரி பண்றண்ணா..”, காட்டமாக இவள் அவனை குற்றம்சாட்ட.. புடிபடவே இல்லை அவனுக்கு..

“நித்யா.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்ல.. புரியல எனக்கு..”, அவளுள் இருந்த காட்டம் இவனுள்ளும் கொஞ்சம் பரவியிருக்க.. நித்தியைப் போலவே இவனும் சாடினான்..

“ஹ்ம்.. எல்லாம் நீயும் லாவண்யாவும் லவ் பண்றதைத்தான்..”

“ஹே.. அவ என் பிரன்ட் நித்திம்மா.. தப்பா பேசாதே..”, ஆதங்கமாய் தரண் சொல்ல..

நிதானத்திற்கு வந்திருந்தாள் நித்யா..

“ஸ்கூல்ல எல்லாரும் அப்படித்தான் பேசறாங்க..”, அவன் முகம் பார்க்காது சொன்னவள், “நீ நேத்து சீக்கிரம் கிளம்பிட்டீள்ள வீட்டுக்கு.. அப்போ நீங்க இரண்டு பேரும் லவ் பண்றீங்களான்னு லாவண்யாட்ட ஒருத்தவங்க கேட்க.. லாவண்யா முகமே சரியில்லை.. பாவம் அவங்க..”, என்றிருந்தாள் நித்தி..

“என்ன நித்தி சொல்ற..?? அவ என் பிரென்ட் நித்து.. எப்படி எல்லாரும் இப்படி நினைக்கலாம்..??”, தடுமாற்றமாகவும் கோபமாகவும் இவன் கேட்க..

“அண்ணா.. எனக்கு என்னவோ யாரோ இப்படி பரப்பிவிட்டிருக்காங்கன்னு தோனுது..”, சந்தேகமாக சொன்னவள்.. அவன் முகம் பார்க்காது, “சாரி அண்ணா.. நான் உன்னை தப்பா நினச்சுட்டேன்.. எங்கே நீயும் நிதின் மாதிரி லாவ..ண்யாவை.. லாவ..ண்யா..வை..”, அதற்கு மேல் பேசமுடியாது கலங்கியது அவள் குரல்..

புரிந்தும் புரியாத வயதில் தன்னை ஒருவன் டார்ச்சர் செய்ததுபோல் தன் தமையனும் செய்கிறானோ என்ற சந்தேகம் அவளுக்குள்..

அண்ணன் அவனைப் போன்று செய்யமாட்டான் என்ற நம்பிக்கை உண்டுதான்.. பட்.. ஒருவேளை அவனே அறியாமல் செய்திருந்தால்..??

அதனால்தான் காலையே தரணின் வீட்டிற்கு அவள் வருகையே..

தன் மீது தங்கை நம்பிக்கை வைக்காதது ஒருபுறம் வருத்தத்தை அளித்தாலும்.. அதை வெளிபடுத்தவில்லை அவன்..

அவளின் உணர்வுகள் புரிந்தது அவனுக்கு..

இதை எப்படி சரிசெய்வதென யோசனையில் ஆழ்ந்தவனுக்குத் தெரியவில்லை ஏற்கனவவே இந்தப் பிரச்சனையை ஒருத்தி சரிசெய்துவிட்டாள் என்று..

ஒருமுடிவுடன் தான் அன்று பள்ளியை அடைந்திருந்தான் தரண்யன்..

“என்னடா.. ஒரு ஆளைப் பிடிச்சிட்ட போல..??”, களாசிற்குள் நுழைந்தும் நுழையாமல் இருந்தவனிடம் ஒருவன் கேட்க..

அடுத்த நொடி தரையில் கிடந்தான் மற்றவன்..

அதைக்கண்டு மற்றவர்கள் திகைக்க.. அதை கண்டுகொள்ளாமல் தன் இருக்கையில் தெனாவெட்டாக அமர்ந்துவிட்டான் தரண்யன்..

அவனிடம் யாராலும் எந்த கேள்வியும் கேட்க இயலவில்லை..

அவன் உடல் மொழி என்னை நெருங்கினால் நீங்கள் உயிருடன் இருக்கமாட்டீர்கள் என்பதுபோல் இருக்க.. அவனை நெருங்கவோ அவனிடம் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கவோ யாருக்கும் தைரியமில்லை..

அத்தனை ஆக்ரோஷம் அவனுக்கு..

தனது நட்பை கொச்சைபடுத்தி பேசுபவர்களையும் கேள்விகேட்பவர்களையும் சுத்தமாக பிடிக்கவில்லை அவனுக்கு..

முழு ருத்ரமூர்த்தியே அவன் அன்று..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.