(Reading time: 13 - 25 minutes)

தன்னை ஒதுக்கத்துடன் பார்ப்பவர்களுக்கு மத்தியில் தன்னை சக தோழியாய் பார்த்தவனை மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு..

எதுவாக இருந்தாலும் தன்னை மதித்து தன்னிடம் கேட்டு அவன் செய்ய..

ஐ ஆம் ஸ்பெஷல் டூ ஹிம் என்ற எண்ணம் தானாக வளரத்துவங்க.. திகைத்துத்தான் போனாள் சமூ..

இது தவறல்லவா..??

எப்படி சாத்தியம் இது..??

அந்நிமிடம் குழம்பினாள் அவள்..

இது உணர்வு.. இந்த எண்ணம் எதுவரை தன்னை இட்டுச்செல்லுமோ என்ற பயம் இருந்தபோதிலும்..

மிகவும் பிடித்திருந்தது அவனை அவளுக்கு..

சுதந்திர பட்டமாய் அவள் வானில் சிறகடித்து பறந்துகொண்டிருந்தாள் அவள்..

தன்னைக் கண்டதும் நின்றுவிட்டவளைக் கண்டு, “சமூ.. கிளாஸ் போகலையா..??”, என்று அவளது சமுத்திரராஜன் கேள்வி எழுப்ப..

அவன் சமூ என்று அழைத்ததில் கூச்சம் வந்து தொலைக்க.. திண்டாடியவள், “ச..சி.. அ..து.. போகனும்..”, திணறலாக பதில் அளித்தாள் அவனுக்கு..

புதிதாக இருந்த அவளது திணறல்கள் கண்டு, “உடம்பு சரியில்லையா உனக்கு..??”, என்று கேட்க வைக்க..

இல்லை என்பதாய் தலையசைத்தவள், “லைட்டா கோல்ட்..”, என்று சமாளித்துவிட்டு, “நான் கிளாசுக்குப் போறேன்..”, என்றுவிட்டு ஓடியிருந்தாள்..

அவனிடமிருந்து தப்பிக்க..

அவளது தடுமாற்றத்தை அவனிடமிருந்து மறைக்க..

“சசி.. புது ப்ரெண்ட் கிடைச்சாச்சு போல..”, உடன் பயிலும் மாணவன் சமுத்திராவிடம் சசி பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு கேட்க..

“புது பிரெண்டா..?? யாரு..??”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஏதான் அந்த ட்ரான்ஸ்..”

“அது பிரென்ட் எல்லாம் இல்லடா..”, அசைட்டையாக இவன் சொல்ல.. அதிர்ந்தான் மற்றவன்..

“என்னடா சொல்ற..?? பிரெண்ட் இல்லையா..?? அப்புறம் ஏன் அவக்கூட க்ளோஸ்ஸா பேசற..??”, புரியாமல் மற்றவன் கேட்க..

“எனக்கு அஸைன்மென்ட் எல்லாம் நீ எழுதித்தரேன்னு சொல்லு.. உன்கூடையும் நான் பிரண்டா இருக்கேன்..”, அதிரவைத்தான் சசி..

“பாவம்டா அந்த பொண்ணு.. அதுகூட யாரும் பேசறத்திலைன்னு ஆல்ரெடி பீல் பண்ணிட்டு இருக்காம்.. அவங்க கிளாஸ் மேட்ஸ் சொன்னாங்க.. இதுல நீ அவள யூஸ் பண்றன்னு தெரிஞ்சா.. அவங்க மனசு எவ்ளோ கஷ்ட்டப்படும்.. யோசிச்சுப்பாரு..”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது.. அதுக்கூட நான் பிரென்ட்டா இருக்கேன்.. எனக்கு வேணுங்கற அஸைன்மென்ட்ஸ் நோட்ஸ் ப்ராஜெக்ட் எல்லாம் அது பண்ணிக்கொடுக்குது.. இட்ஸ் ஜஸ்ட் அ மியூட்சுவல் ஹெல்ப்ஸ்.. தட்ஸ் ஆல்..”, தோள் குலுக்கலுடன் சசி கூற..

அதிர்ந்தது மற்றவன் மட்டும் அல்ல..

சசியின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்த சமுவும்தான்..

அவனது அஸைன்மென்ட்டுகளை கொடுக்க திரும்பி வந்தவள் எத்தேச்சையாக அவனது பேச்சுக்களைக் கேட்க..

மனம் உடைந்துதான் போனாள்..

தனது எண்ணங்கள் கானல் நீர் என்று ஏற்கனவே உணர்ந்திருந்தபோதிலும்.. இவனே கானல் நீர்தான் என்று தெரியவில்லை..

தன்னை இவன் யூஸ் செய்துகொள்கிறான் என்று அறிந்தவுடன்.. சசி என்பவன் பொய்த்துவிட்டான் அவளுக்கு..

அவன் மீது வெறுப்பு தோன்றுவதற்கு பதில் தன் மீதே அவளுக்கு வெறுப்பு தோன்றியது..

எப்படி ஒருவரைப் பற்றி தன்னால் சரியாக கணிக்க முடியாமல் போயிற்று என்ற வெறுப்பு..

அதில் சசியின் மீதிருக்கும் அன்பும் பின்னால் சென்றுவிட்டது போன்று மாயை..

இனி அவனுடன் பேசக்கூடாதென்ற வைராக்கியம்..

அவன் முன் நிமிர்ந்து நிற்கவேண்டும் என்ற எண்ணம்..

யாரையும் எதிர்பார்த்து நிற்கக்கூடதென்ற உறுதி..

தனக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றிருந்தவனை அதுவரை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றிருந்தவள்..

“சசி..”, என்று அழுத்தமாக அழைக்க..

திகைத்தபடி அவளை நோக்கினான் சசி..

உள்ளூர ஒரு வெறுப்பு எழுந்தபோதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாதவள் அவனின் கைகளில் தான் கொண்டவந்த அஸைன்மென்ட்களைத் திணித்துவிட்டு, “இனி அஸைன்மென்ட் எழுத வேறொருவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்..”, என்றவள்..

அவன் முகம் காணவே பிடிக்காது நடக்கத்துவங்கினாள்.. சமூ.. சமுத்திரா என்று சசி கத்துவதை காதில் ஏற்றிக்கொள்ளாமல்..

ஒருவிதமான நிமிர்வுடனும்.. தேனாவெட்டுடனும்..

உருவெடுப்பாள்..

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.