(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - தாரிகை - 11 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2017..

றை முழுவதும் இருளில் சூழ்ந்திருக்க திகிலுடன் இருட்டையே வெறித்தபடி நின்றிருந்தது ஒரு உருவம்..

அந்த உருவம் பயத்தில் சற்றே நடுங்க... சட்டென ஒளிர்ந்தது அந்த அறையில் ட்யூப்லைட்..

சில நிமிடங்களாய் இருளில் மூழ்கியிருந்த அறை ஒளிர்விட்டு எரியத்துவங்கியதும் கண்களை சீராக்கிக்கொள்ள சில நொடிகள் பிடித்தது அவ்வுருவத்திற்கு..

சாத்திருந்த கதவும் திறந்துகொள்ள.. உள்ளே நுழைந்தனர் இருவர்..

ஐம்பது வயதின் தொடக்கத்தில் இருந்தவர் இறுக்கை ஒன்றில் அமர்ந்துகொள்ள.. மற்றொருவர் அந்த உருவத்திற்கு அருகில் நகர..

பின்னடைந்தது அவ்வுரவம்..

“எதுக்கு பயப்படற வினோதன்.. அவ உன்னை எதுவும் பண்ணமாட்டா..”, இறுக்கையில் அமர்ந்தவர் கூற..

தன் முன்னே நின்றிருந்தவளை இன்னும் பயத்துடன் பார்த்தான் வினோதன்..

அவனையே சில நொடிகள் கூறுபோடுவதுபோல் மற்றவள் பார்த்துவைக்க.. நடுக்கம் கண்டது வினோதனின் உடல்..

“வி..னோ..த..ன்..”, ஒவ்வொரு எழுத்திற்கும் அவள் அழுத்தம் கொடுத்து அவன் பெயரை உச்சரிக்க.. அதில் என்னிடம் நீ எதையும் மறைக்க முடியாதென்ற அர்த்தம் மறைமுகமாய்.. ஆனால் அதனைப் புரிந்துகொள்ள இயலா சிறுவனுக்கு அவள் தன்னை அழைத்தவிதம் நெஞ்சில் ஒருவகை குளிர்ச்சியை ஏற்படுத்த.. ஈரடி கால்களைப் பின் நகர்த்தியிருந்தான்..

அவன் செயல்களை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவளிடம் அழகாய் ஒரு மென்னகை பூக்க..

தன் எதிரில் இருந்த இறுக்கையைக் காட்டி, “இப்படி உட்காரு வினோத்..”, என்றான் தாரிகை.. செந்தாரிகை..

தயக்கமும் பயமும் மனதை வியாபித்திருக்க.. தயங்கியபடி அவன் இறுக்கையில் அமர.. அவன் முன்னே நீட்டப்பட்டது ஒரு புகைப்படம்..

“இந்த போட்டோவில் இருக்கறவனை உனக்குத் தெரியுமா வினோத்..??”, சுற்றிவளைக்காமல் நேரடியாக இவள் கேட்க..

அதை வாங்கிப்பார்த்தவனுக்கோ அதிர்ச்சி..

நா வறண்டுபோக.. போட்டோவை தவற விட்டிருந்தான் அவன்..

அதை எதிர்பார்த்தவளாக கீழே விழ காத்திருந்த போட்டோவை கைபற்றியவள், “தெரியுமா யாருன்னு..??”, மீண்டும் கேள்வி கேட்க..

இல்லை என்று எங்கோ பார்த்து தலையசைத்தான் சிறுவன்..

தனது இறுக்கையில் இன்னும் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்தவள், “யாருன்னு தெரியாத ஒருத்தன் கிட்ட எதுக்கு வினோத் காலையில ரொம்ப நேரமா பேசிட்டு இருந்த..??”, நெற்றிப்பொட்டில் அறைவதுபோல் கேள்வி எழுப்ப..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதிர்ச்சியாக அவளை ஏறிட்டான் வினோதன்..

“பதில் சொல்லு வினோத்.. பதில் சொல்லாம நீ இங்கிருந்து போக முடியாது..”

“இல்..லை.. எ..னக்..கு ஒன்னும் தெரி..யாது..”, தந்தியடித்தது சிறுவனுக்கு..

“அவன் யாருன்னு வெளியே சொன்னால் உன்னை கொன்னுடுவேன்னு மிரட்டினானோ..??”, அவன் கண்களைப் பார்த்தபடி இவள் கேள்விக்கனையைத் தொடுக்க..

வெளிப்படையாகவே நடுங்கி சீரானது வினோதனின் உடல்..

வாய் திறக்கவில்லை அவன்..

யாரின் முகமும் காண பயந்து இவன் தலைகுனிந்து அமர்ந்திருக்க..

அவன் உடல்மொழியே காட்டிக்கொடுத்திருந்தது அவனை.. அவன் மிரட்டப்பட்டிருக்கும் விதத்தை..

அவனின் ஒவ்வொரு அசைவின் மூலமும் அதை புரிந்துகொள்ள முடிந்தது தாரிகையால்..

“தாரிகை.. லெட் அஸ் லீவ் ஹிம் ஹியர் பார் சம் டைம்.. யோசிக்கட்டும் இவன்.. நிதானமா பொறுமையா யோசிக்க நேரம் கொடுப்போம் இவனுக்கு.. கண்டிப்பா பதில் சொல்லிடுவான்..”, அதுவரை அமைதியாக இருவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சக்திவேல் அழுத்தமாக உரைக்க..

அவர் குரலில் இயற்கையாகவே குடியிருந்த கடுமையும் அழுத்தமும் கிலியைப் பரப்பியது சிறுவனுக்கு..

அவரை அரைக்கண்ணால் அவன் பார்க்க.. மனதிற்குள் மெல்ல சிரித்துக்கொண்டவர், “யோசி வினோத்.. நல்லா யோசி.. ஒன்னும் அவசரம் இல்லை.. பத்து நாள் ஆனாலும் பரவாயில்லை.. யோசிச்சு உண்மையான பதில் சொல்லு.. என்ன..??”, என்றவர் தாடையை தடவிக்கொண்டு அவன் முகவாயை அழுத்தமாகப் பற்றி தன்னைப் பார்க்கவைத்தவர், “ஆனால் ஒன்றை மட்டும் நியாபகம் வைத்துக்கொள்.. நீ பதில் சொல்லும் வரை எங்களுடன் தான் உன் வாசம்.. இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காதே.. அது உன்னால் முடியவே முடியாது.. நியாபகம் வைத்துக்கொள்..”, அவனை எச்சரித்தவர் தாரிகைக்கு சைகை காட்ட..

எல்லாம் இழந்ததுபோல் அமர்ந்திருந்தவனைப் பார்வையிட்டபடி சக்திவேலுடன் அந்த அறையைவிட்டு வெளியேறியிருந்தாள் தாரிகை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.