(Reading time: 16 - 32 minutes)

தங்களை தனியே விட்டுவிட்டுச் செல்லும் நிஷாவை கவினும் பிரஜித்தும் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருக்க..

“அவங்களுக்கு கொஞ்சம் வெளிவேலை.. வந்திருவாங்க இப்போ..”, என்ற செல்வி.. இருவரையும் தன் எதிரே இருக்கும் சோபாவில் அமரச்சொல்ல..

தயக்கத்துடன் அமர்ந்தனர் இருவரும்..

“எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் கேள்வி கேட்க தெரியாது.. ஸ்ட்ரைட்டாவே கேட்கிறேன்..”, என்று சிறு இடைவெளிவிட்டவள், “உங்களுக்கு அந்த ட்ரக்ஸ் எப்படி அறிமுகம்..?? நிஷாக்கு சொன்ன அதே பதில் எனக்கு வேண்டாம்.. உண்மை வேண்டும்..”, கறாராக அவள் சொல்ல அதிருந்து போயினர் இருவரும்..

யாருக்கும் தங்கள் செயல்கள் தெரியாதென்று நினைத்திட.. இவள் கேள்வியில் இருவரும் திகைத்து அதிர..

“சொல்லுங்க.. ஐ நீட டூ நோ..”, அழுத்தமாக.. நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டளையுடன் அவள் சொல்ல..

இளைஞர்கள் இருவருக்கும் எச்சில் விழுங்க..

“சொல்லுங்க..”

“நீங்க நிஷாவோட அக்காங்கறதுக்காக எல்லாம் நாங்க உங்ககிட்ட எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று அவசியம் இல்லை..”, என்று கவின் அழுத்தமாக உரைக்க..

“நிஷாவோட அக்காங்கறதுக்காக எல்லாம் நீங்க இரண்டு பேரும் சொல்ல வேண்டாம்.. பட்.. இந்த டிஸ்ட்ரிக்ட்டோட கலெக்ட்டர்ன்னா சொல்லலாம் இல்லையா..??”, உள்ளறையில் இருந்த வெளியே வந்த சக்திவேல் இருவரிடமும் கேள்வி எழுப்ப..

“என்னது..?? கலெக்ட்டரா..??”, அதிர்ந்துவிட்டனர் இருவரும்..

“எஸ் கலெக்ட்டரேதான்..”, சக்திவேல் சொல்ல..

“அப்போ செல்வி..??”, குழப்பாமக பிரஜித் கேட்க..

“வீட்டில் செல்வி.. வெளியில் செந்தாரிகை..”, என்றிருந்தாள் நிஷாவின் தமக்கை..

எஸ்.. செந்தாரிகை அலைஸ் செல்வி..

கொஞ்சம்கூட இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை இருவரும்..

“இப்போ சொல்லலாம் இல்லையா..??”, செந்தாரிகை கேட்டு வைக்க..

பிரஜின் கவினைப் பார்க்க.. சொல்லிவிடலாம் என்பதாய் தலையசைத்தான் அவன்..

“நாங்கள் நிஷாவிடம் சில பொய்கள் கலந்துதான் சொன்னோம்..”, கவின் உண்மையை சொல்லத்துவங்க..

தெரியும் என்பதாய் பார்த்திருந்தாள் தாரிகை..

“எங்க கிளாஸ் பிரெண்ட்ஸ் கிட்ட இந்த போதை பழக்கம் உண்டு.. எங்கள் இருவருக்கும் அதில் பெரிதாக இன்ட்ரெஸ்ட் இல்லாததால் முதலில் அதைக் கண்டுகொள்ளவில்லை.. பட் டூ த்ரீ மந்த்ஸ் பேக் எனக்கு சின்ன ஆக்ஸிடென்ட்..

அப்போ எனக்கு ஹேர் லைன் பிராக்ச்சர்.. வலி டாலரேட் பண்ண முடிஞ்சாலும்.. நைட் எல்லாம் ஸ்லீப்லெஸ் தான்.. எக்ஸாம் நெருங்க நெருங்க ஸ்ட்ரஸ் அதிகமாக முதல் முறை பிரிண்ட்ஸ் கிட்ட ட்ரக் வாங்கி யூஸ் பண்ணேன்..

பிராக்ச்சர் சரியாகற வரைக்கும் அதை யூஸ் பண்ணிட்டு ஸ்டாப் பண்ணிடலாம்னு ப்ளான் எனக்கு.. பட் என்னால் அது முடியல.. நான் யூஸ் பண்றதைப் பார்த்துட்டு இவனும் யூஸ் பண்ணத் துவங்க.. வீ பெக்கேம் அடிக்டட்..

அதை சாப்பிடாம்மா இருக்க முடியல.. காலேஜ் டைம் அதை யூஸ் பண்ற அளவுக்கு அது எங்களை இழுத்துட்டுப்போச்சு..

பர்ஸ்ட் டைம் நாங்க காலேஜில் யூஸ் பண்ணோம் அதை.. அப்போத் தான் நிஷா எங்களைப் பார்த்துவிட்டாள்..

ரொம்ப கில்ட்டி பீல் அப்போ.. அந்த நிமிஷம்.. சொல்லத் தெரியல.. எப்படி பீல் பண்ணோம்னு.. விட்டுடலாம்னு முடிவு பண்ணோம்.. பட் அது முடியல எங்களால்..

அந்த ஸ்மெல்.. எங்களை அதிலிருந்து மீள தடையா இருந்துச்சு..

அதை யூஸ் பண்றப்போ சில சமயம் கில்ட்டியா இருக்கும்.. இனி யூஸ் பண்ணவே மாட்டோம்னு சொல்லிட்டு யூஸ் பண்றது குற்றவுணர்வை உண்டுசெய்யும்..

ஆனால் அதை ஒன்ஸ் யூஸ் பண்ணிட்டா அந்த குற்றவுணர்வு காணாமல் போய்விடும்.. பட்.. இன்னைக்கு அந்தச் சின்னப் பையனை அப்படிப் பார்த்ததும்.. டைஜஸ்ட் பண்ணிக்க முடியலை.. ரொம்பவே கஷ்டமா இருக்கு..”, தவறு செய்த குழந்தையாய் அனைத்தையும் ஒப்பித்திருந்தான் கவின்..

“உங்கள் தவறுகள் உங்களுக்கு புரிந்தால் போதும் கவின்.. திஸ் இஸ் ஹவ் அடிக்ஷன் ஸ்டார்ட்ஸ்னு அந்த நுனி புரிஞ்சு.. அதிலிருந்து மீளனும் நம்பிக்கை போதும்..”, என்ற தாரிகை, “உங்களுக்கு இந்த ட்ரக்ஸ் எப்படி கிடைக்குது..?? எப்படி பர்ச்சேஸ் பண்றீங்க..??”, என்று கேட்டாள்..

“பிரஸ்ட் என் பிரெண்ட்ஸ் கிட்ட இருந்து வாங்குவோம்.. அதுக்குப்புறம்..”, தயக்கமாக இழுத்தான் கவின்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.