(Reading time: 16 - 32 minutes)

“தைரியமா சொல்லுங்கப்பா.. நீங்க ஸ்டூடன்ஸ்ஸை இதிலிருந்து மீட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று நிஷா சொன்னாள்.. நீங்கள் உண்மையைச் சொன்னால் தான் என்னால் ஸ்டெப்ஸ் எடுக்க முடியும்.. இட்ஸ் பார் குட் ஆப் தி யூத் அண்ட் இன்னைக்கு நீங்க பார்த்த அந்த ஸ்கூல் பையனையும் சேர்த்துத்தான்..”, என்று சக்திவேல் இருவரையும் ஊக்கப்படுத்த..

“எங்க காலேஜ் ப்ரொபசர்.. அவர் மூலமா அந்த ப்ரோக்கர்..”, தயக்கமாக பிரஜித் சொல்ல..

நினைத்தோம் என்பதுபோல் சக்திவேலும் செந்தாரிகையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள..

முள் மேல் அமர்ந்திருந்தனர் இளைன்கர்கள் இருவரும்..

“அந்த ப்ரொபசர் யாரு..??”, தாரிகை கேட்க..

“சிவராஜ் ஆத்ரேயா.. பிசியாலஜி ப்ரொபசர்..”

மேலும் இருவரிடமும் சில கேள்விகள் கேட்டு தெளிந்துகொண்ட இருவருக்கும் புரிந்துவிட்டது தாங்கள் இருவரும் ஹனுமனின் வாலைப் பிடித்திருக்கிறோம் என்று..

அடுத்த அடி கவனமாக் எடுத்துவைக்கவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும்..

“நாங்கள் கிளம்பவாக்கா..??”, பிரஜித் தயக்கமாகக் கேட்க..

சரி என்பதாய் தலையசைத்த தாரிகை, “நிஷா மெஸ்ல இருப்பா.. பார்த்துட்டுப் போங்க..”, என்று சொல்ல..

“பார்த்துட்டுப் போறோம்..”, என்ற கவின், “ஏதவாது ஹெல்ப் வேண்டும் என்றால் கூப்பிடுங்கள்..”, என்றுவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினர்..

அவர்கள் வெளியே செல்ல.. சில நொடி இடைவெளியில் அவ்வீட்டிற்குள் இருவர் நுழைய..

அவர்களைப் பார்த்த தாரிகைக்கு சற்றே பாவமாய் தோன்ற.. அவர்களை அமர வைத்தாள் அவள்..

“எங்க பையன்..??”, பதற்றமாக ஒன்றுபோல் வினோதனின் பெற்றோர்கள் கேட்க..

இருவரின் பதற்றமும் இவள் மனதை இளகச் செய்ய, “உங்க பையன் இங்கதான் இருக்கான்.. பத்திராமாக..”, என்றாள் இருவரையும் சமாதனப்படுத்துவதுபோல்..

இருவருக்கும் அப்பொழுதுதான் போன உயிர் திரும்பி வந்ததுபோல் இருக்க.. தங்களை சமன்ப்படுத்திக்கொண்டனர்..

“வினோதை எதுக்கு இங்க கூட்டிக்கொண்டு வந்திருக்கீங்க..??”, இருள் சூழ்ந்தும் பையன் வீடு வந்து சேராத பையனை நினைத்து கவலைகொள்ளத் துவங்கிய பெற்றோருக்கு அழைப்பு விடுத்திருந்தாள் தாரிகை..

கலெக்ட்டருடன் தங்கள் மகன் இருக்கிறான் என்று அறிந்தவுடன் பெற்றோர்களுக்கு பதற்றம்..

அவசரமாக வந்திருந்தனர் தங்கள் மகனைத் தேடி..

“உங்கள் பையனை நீங்க கவனிக்கிறீர்களா இல்லையா..??”, சக்திவேல் கடுமையாக கேட்க..

“அவன் ஏதாவது தப்பு செஞ்சான்னா..??”, வினோத்தின் தாய் கேட்டிருந்தார்..

“உங்க பையன் ட்ரக்ஸ் சப்பளை பண்ணிருக்கான்..”, என்றிருந்தாள் தாரிகை பெற்றோர்களை அதிரவைத்து..

எதிர்பார்க்கவே இல்லை இருவரும்.. தங்களது மகனா இப்படி என்ற அதிர்ச்சியும் கூடவே சேர்ந்துகொண்டது..

“என்ன சொல்றீங்க நீங்க..?? பொய்தானே சொல்றீங்க..??”, தாயானவள் பொய் என்று சொல்லிவிடுங்கள் என்று கேட்க..

“இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகாம ட்ரக்ஸ் சப்ளை பண்ண போயிருக்கான்..”, அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் சக்திவேல்..

“என் பையன் அப்படி பண்ணிருக்கமாட்டான்.. சின்ன பையன் அவன்.. ஒன்னும் தெரியாது அவனுக்கு.. யாரோ செஞ்ச வேலையாக இருக்கும்.. அது என் பையன் அப்படி இல்லை..”, திரும்பத் திரும்ப சொன்ன வினோதனின் தாயைக்கண்டு பாவமாக இருந்தது..

“கொஞ்சம் அமைதியா நான் சொல்றதை கேளுங்க..”, தாரிகை அவரிடம் பொறுமையாக எடுத்துச் சொல்ல முயல..

அவள் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை அவர்.. தான் சொன்னதையையே திரும்பத் திரும்பச் சொன்னவர்.. ஒருகட்டத்தில் எல்லாம் தாரிகையால் தான் என்பதுபோல் பேசத்துவங்க.. இறுகிப்போனது அவளின் முகம்..

கோபத்தில் இவள் அடித்தாலும் அடித்திவிடுவாள் என்று தோன்றவே சக்திவேல் வினோத்தின் அன்னையைப் பார்த்து கொஞ்சம் சத்தமாக சத்தமிட நின்றுபோனது அவரது குரல்..

குழந்தைபோல் அவர் முழிக்கத் துவங்க கடினமான அதே முகத்துடன் பேசத்துவங்கினாள் தாரிகை..

“நான் சொல்றதை பொறுமையா கேட்டுட்டு எதுவாக இருந்தாலும் பேசுங்க..”, என்று நிறுத்தி நிதானமாக உரைத்தவள், “உங்க பையனுக்கு எப்படியோ இந்த ட்ரக் எடுக்கற பழக்கம் வந்திருக்கு.. இன்னைக்கு காசில்லாம்மா அது வேணும்கறதுக்காக ட்ரக் சப்ளை பண்ற லெவலுக்கு போயிருக்கான்.. நீங்க எங்களை நம்பமாட்டீங்கன்னு தெரியும்.. சோ இந்த வீடியோவைப் பாருங்க..”, என்றவள் அன்று காலையில் வினோதிற்கும் அந்த ட்ரக் சப்ளை செய்பவனுக்கும் நடந்த உரையாடலை வீடியோவில் இருவருக்கும் காண்பிக்க.. அதில் அவர்கள் இருவரின் பேச்சுக்கள் புரியாவிட்டாலும் வினோத் கெஞ்சுவது.. மற்றவன் வினோத்திடம் ட்ரக் பார்சல் கொடுப்பது என எல்லாம் பதிந்திருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.