(Reading time: 16 - 32 minutes)

"அதெல்லாம் ஒன்னும் அவன் டிஸ்டப் ஆக மாட்டான் மித்ரா பிரணவ் எப்பவும் நல்லா ஆழ்ந்த தூக்கம் தூங்குவான்.  அதுனால அவனுக்கு யார் வந்தா யார் போனன்னு எல்லாம் ஒன்னும் தெரியாது.  நீ வாம்மா" என்று கார்த்திகா மித்ராவை பிரணவ்வின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே பிரணவ் கார்த்திகா சொன்ன மாதிரி நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.  காய்ச்சலின் சோர்வினால் எப்பொழுதும் பிரஸ்ஆக இருக்கும் அவன் முகம் அசந்து தெரிந்தது. 

கார்த்திகா பிரணவ்வின் படுக்கையில் அமர்ந்து அவன் தலையை கோதிக்கொடுத்தார்.

அவன் தூக்கத்திலேயே அவர் கையை தன் இருகைகளாலும் மார்போடு வைத்துப் பிடித்துக் கொண்டான்.

அதைப் பார்த்ததும் கார்த்திகா தாய்மை பொங்க புன்னகைத்துக் கொண்டே இன்னோரு கையால் அவன் தலையை கோதிக்கொடுத்தார்.

மித்ராவின்

...
This story is now available on Chillzee KiMo.
...

"ஹூம் போறதுனு முடிவு பண்ணிட்டீங்க நா சொன்னாக் கேட்கவா போறீங்க.  சரி நகருங்க இவ்வளோ மெல்ல பேக் பண்ணா நாளைக்குத்தான் பண்ணி முடிப்பீங்க.  நா பண்றேன்" என்று கௌவுதமிற்கு தேவையானதை பேக் பண்ணி முடித்தாள்.

"டேப்லட் எல்லாம் இந்த பாக்ல வச்சிருக்கேன் மறக்காம வேள வேளைக்கு சாப்டிருங்க.  சரியா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.