Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு

handsTogether

சிவரஞ்சனிக்கு உறக்கமே வரவில்லை.

புரண்டு புரண்டு படுத்தாள்.

அவளது செயல் மனோரஞ்சனிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

எப்போதும் படுத்ததுமே உறங்கிவிடுபவள் சிவரஞ்சனி.

அவளது அந்த செயலால் அதிகம் பாதிக்கப்பட்டவளும் அவள்தான்.

உறங்கும்போது இருவரும் ஒரே அறையில் தான் படுப்பார்கள்.

அப்போது இரவு நேரத்தில் ஏதாவது பேச ஆரம்பித்து வளவளத்துக்கொண்டேதான் தூங்க ஆரம்பிப்பர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தனது தமக்கை உறங்க ஆரம்பித்துவிட்டாள் என்று தெரிந்ததுமே அவள் மீது பயங்கர கோபம் வரும்.

பேசிக்கொண்டிருக்கும்போதே எப்படி உறக்கம் வரும்?

இன்று வரை அவளுக்கு இது புரியாத புதிர்.

எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அப்படியே தரையில் சாய்ந்து உறங்கிவிடுவாள்.

படுப்பதற்கு வசதியான இடமாக இருக்கிறதா? என்றெல்லாம் பார்க்க மாட்டாள்.

அவளைப் பார்க்கும்போது கொடுத்து வைத்த பிறவி என்று மற்றவர்களுக்குத் தோன்றும்.

அப்படிப்பட்டவள் இப்போது உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறாள் என்றால் என்ன காரணமாக இருக்கும்?

என்னவாக இருக்கும்? மாமாவைப் பார்த்ததனால் வந்த பிரச்சினையாக இருக்கும்.

தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்.

மாமாவைப் பார்த்த பிறகு சரியாக உறங்கினால்தான் ஆச்சர்யம்.

என்ன ஒரு களையாக இருந்தார்?

“அக்கா.”

அவளது அழைப்பிற்கு சிவரஞ்சனியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“அக்கா.” மீண்டும் அழுத்திக் கூப்பிட்டாள்.

“என்னடி?”

சலிப்பாய் கேட்டாள்.

“உனக்கு இன்னிக்கு என்னாச்சு? எப்பவும் என்னை லூசு மாதிரி தனியா பேச விட்டுட்டு தூங்கிடுவே. இன்னிக்கு புரண்டு புரண்டு படுக்கிறியே. ஏன்?”

“ப்ச்ச். தொணதொணக்காம சும்மா தூங்குடி.”

சுள்ளென்று விழுந்தாள்.

“இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்படி கத்தறே? என்ன மாமாவோட கனவில் டூயட் பாடும்போது நான் தொந்தரவு பண்ணிட்டேனா?”

கேலிக்குரலில் கேட்டாள்.

‘ஆமா! அப்படியே பாடிட்டாலும்.’

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தனக்குள்ளேயே முணுமுணுத்தாள்.

“என்னக்கா. பதிலே பேசாம இருக்கே? உண்மையிலேயே டூயட்தான் பாடிக்கிட்டிருந்தியா?”

“சும்மா தூங்குடி. இல்லைன்னா அம்மாக்கிட்ட சொல்லுவேன்.”

“பயமுறுத்தாதே. நானும் அம்மாக்கிட்ட சொல்லுவேன்.”

“என்ன சொல்லுவே?”

“நீ டூயட் பாடினதைத்தான்.”

அவளைப் பார்த்து கண்களை சிமிட்டினாள்.

“போயேன். போய் சொல்லேன். அம்மா உன்னைத்தான் திட்டுவாங்க. வயசுக்கேத்த பேச்சு பேசுன்னு சொல்வாங்க. நல்லா காது குளிர கேட்டுக்க. எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்கப்போறேன்.”

சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் சொல்வதில் இருந்த உண்மையால் மனோரஞ்சனியும் தாயிடம் கோள் மூட்டச் செல்லவில்லை. அவளுக்கும் தங்கள் தாயைப் பற்றி நன்றாகத் தெரியும். கண்டிப்பாக சிவரஞ்சனி சொல்வது போல் அவளுக்குத்தான் திட்டு விழும்.

அவளுக்குத் தாயிடம் சொல்லுவதாக உத்தேசமே இல்லை.

தன் சகோதரியிடம் வம்பிழுக்க வேண்டும் என்றுதான் அப்படிப் பேசினாள்.

சிவரஞ்சனி கண்களை மூடிக்கொண்டதால் அவளும் பேசாமல் இருக்க வேண்டியதாகிவிட்டது.

சிவரஞ்சனி மீண்டும் தனக்குள் ஆழ்ந்தாள்.

அவனுடன் சேர்த்துப் பேசுவதே அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே.

எப்படி அவனுடன் வாழப்போகிறாள்.

இதோ இன்று அந்த கருப்பையாவுடன் நிச்சயம் முடிந்துவிட்டது.

அன்று மாலை அவன் நடந்து கொண்டதே மனக்கண்ணில் வந்து நின்றது.

அவனுடைய நிச்சயதார்த்தத்திற்கு வந்த மாதிரியே அவன் நடந்துகொள்ளவில்லை.

அவ்வப்போது நிமிர்ந்து அவன் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்று பார்க்கத்தான் செய்தாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்த மாதிரி அங்கே எந்த மாற்றமும் தெரியவில்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# நீயிருந்தால் நானிருப்பேன்Anjana 2018-09-27 12:40
Nice update.. ena ithu puthu twist...
Reply | Reply with quote | Quote
# RE: நீயிருந்தால் நானிருப்பேன்Raasu 2019-03-05 22:33
Thank you Anjana.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுmahinagaraj 2018-09-25 10:52
பயங்கரமான எபிமேம்.... :clap: :clap:
நான் கூட அந்த கனவை நிஜம்ன்னு நம்பிட்டேன்... :yes:
என்ன நடக்க போகுதோ.... :Q: :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுRaasu 2018-09-25 16:42
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுsaaru 2018-09-24 21:28
Ssssssss hhhpa Ipa ve kanna katude
Sivaaaaaaa ha ha
Semma ah yosikreengapa :hatsoff:
Nice and cute raasu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுRaasu 2018-09-24 22:46
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுmadhumathi9 2018-09-24 19:44
:Q: oh my god ippadi aaguthe? Nice epi.but idhil maatram varuma ena thodarnthu padithu therinthu kolvom.aduthu ennavaaga irukkum endru paraparappa irukku. :thnkx: :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுRaasu 2018-09-24 22:46
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுSrivi 2018-09-24 18:32
Ha ..mam.enna idhu twist.. nice update.. interesting.. Thx for this episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுRaasu 2018-09-24 22:45
Thank you Srivi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுrspreethi 2018-09-24 17:59
Super update... Oh ho idhu yenna pudhu thirupam... Yenna aaga pogudho :Q: Monday vara innum 6 naal irukea...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசுRaasu 2018-09-24 22:44
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top