(Reading time: 13 - 25 minutes)

ஹோட்டலை அடைந்து காரை வெலட் பார்க்கிங்கிற்கு கொடுத்துவிட்டு இருவருமாய் தங்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஹாலிற்குச் செல்ல எந்த விளக்குகளுமின்றி அறை முழுவதும் இருட்டாய் இருந்தது.

திவ்யாந்த் தன் மொபைல் டார்ச்சை கொண்டு விளக்குகளுக்கான ஸ்விட்சை போட பாப்பர்ஸ் ஒலிகளோடு ஹே என்ற ஆரவாரத்தில் வெண்பா ஒரு நொடி திகைத்து மீண்டாள்.

அறை மொத்தமும் பலூன்களால் நிறைந்திருக்க நடுவிலே போடப்பட்டிருந்த டேபிளில் அவர்களுக்கான கேக் இருந்தது அனைவரும் கைதட்டி அவர்களை வரவேற்க திவ்யாந்தே இத்தகைய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை.

முதன்முறையாய் லேசாய் ஒரு நாணம் கலந்த புன்னகை குடிகொண்டது அவன் முகத்தில்.ஒவ்வொருவராய் வந்து இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை கூற ஆரம்பித்தனர்

அனைவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்தியவன் அவள் தோள் பற்றிய கரத்தை மட்டும் விடவேயில்லை. வெண்பாவிற்கு மனம் மொத்தமும் மகிழ்ச்சியும் பூரிப்புமே..அதிலும் அனைவரும் திவ்யாந்தை பற்றி அத்தனை நல்லவிதமாய் கூறக் கேட்டவளுக்கு தன்னவன் மீதான காதல் இன்னமும் அதிகரித்தது.

“மிஸ் வெண்பா திவ்யாந்த் மாதிரி ஒரு பெர்சன் மை காட் நீங்க பாத்துருக்கவே முடியாது.எவ்ளோ கூல் கய் தெரியுமா..அத்தனை பொறுமை அவருக்கு..பேஷண்ட்ஸ் கிட்டேயும் சரி ஸ்டாஃப் கிட்டேயும் சரி அவரு கோபமா பேசி இதுவரை நாங்க யாருமே பார்த்ததில்லை.

அது எத்தனை மோசமான சூழ்நிலையா இருந்தாலும் சரி..அந்த நேரத்திற்கு மன்னிக்கவே முடியாத தப்பை பண்ணியிருந்தாலும் சரி அவரு குரல் உயர்த்தி கூட பேசி நாங்க கேட்டதில்ல.

எப்பவுமே சொல்லுவோம் நாங்க ,சீக்கிரம் கல்யாணம் பண்ணிகோங்க டாக்டர் அந்த லக்கி கேர்ள் யாருனு பார்க்க நாங்க ரொம்ப ஆவலா இருக்கோம்னு..அதுக்கும் அவரோட பதில் இந்த ட்ரேட்மார்க் ஸ்மைல் தான்.

ரொம்ப ஓவர் பில்டெப் எல்லாம் கண்டிப்பா கொடுக்கல நிஜமாவே எங்க எல்லாருக்குமே பிடிச்ச ஒரு நல்ல ப்ரெண்ட் நல்ல ஹியூமன் பீயிங் நிச்சயமா திவ்யாந்த் தான்.”

இப்படியான பாராட்டுகளை தவிர அவனைப் பற்றி வேறு எதுவும் கேட்கவில்லை வெண்பாவிற்கு.எல்லாருக்கும் நல்லவனாய் ஒருவரால் இருந்திட முடியுமா அப்படிபட்ட ஒருவன் வாழ்வு முழுவதும் தனக்கே தனக்கானவனாய் இருந்திட போகிறான் என நினைக்க நினைக்க அவன் மீதான காதல் கரைகடந்து கொண்டேயிருந்தது.

அதன்பின் இரவு உணவு முடிந்து பேச்சும் சிரிப்புமாய் இருந்தவர்கள் ஒலிக்க ஆரம்பித்திருந்த இசைக்கு தங்கள் துணையோடு ஆட ஆரம்பித்தனர்.சில நிமிடங்களில் திவ்யாந்த் வெண்பாவையும் அழைத்து நடுவே நிறுத்த திவ்யாந்த் தன்னவளை நோக்கி கை நீட்டினான்.

நாணத்தையும் மீறிய ஆச்சரிய பார்வையை அளித்தவள் தன் இடக் கரத்தை நீட்ட அதைப் பற்றி அவளை சுற்றி தன்புறம் இழுத்தான்.அவளது வலக்கையை தன் இடக்கையில் கோர்த்தவன் மற்றொரு கையை தன் தோள்மீது வைத்து அவளின் இடையை மென்மையாய் பற்றி ஆட ஆரம்பித்திருந்தான்.

கண்கள் கூறும் பாஷை புரிய வேண்டுமெனில் காதலில் முங்கி முத்தெடுக்க வேண்டுமோ!இருவரின் கண்களும் விடாமல் பல செய்திகளை பரிமாறிக் கொண்டேயிருந்தன.

ஆட்டம் பாட்டம் அனைத்தும் முடிந்து ஒரு வழியாய் அனைவரும் கிளம்பத் தயாராக அனைவரையும் வழியனுப்பிவிட்டு இறுதியாய் வெண்பாவோடு கிளம்பினான் திவ்யாந்த்.

பற்றிய அவள் கையை விடாமல் அப்படியே நடக்க ஆரம்பித்திருந்தான்.வெளியே வந்தவர்களை கண்டு டிரைவர் காரை எடுத்து வருவதற்காக செல்ல எத்தனிக்க அவரை தடுத்தவன் தானே எடுத்துக் கொள்வதாய் கூறி பேஸ்மெண்டிற்குச் சென்றான்.

நேரம் பதினொன்றை தாண்டியிருந்ததால் அவ்வளவாக கார்கள் இல்லாமல் இருக்க அமைதியாகவே காரை ரிமோர்ட் கொண்டு ரிலீஸ் செய்தவன் அவளுக்கான கதவை திறந்துவிட்டு அருகில் நிற்க அவனை பார்த்தவாறே உள்ளே அமர எத்தனித்தவளை சட்டென கைப்பற்றி தன்புறம் திருப்பி நிறுத்தியிருந்தான்.

திறந்திருந்த கதவில் ஒரு கையும் அவள் இடைப்பற்றியவாறு இன்னொரு கையுமிருக்க அவளை கிட்டதட்ட அணைத்தவாறு நெருங்கி நின்றிருந்தான்.

இந்த திவ்யாந்த் வெண்பாவிற்கு மிகவும் புதியவன் கண்கள் முழுதும் காதலில் திளைத்திருக்க தன்னவளை கண்கொட்டாமல் பார்த்திருந்தான்.

அவன் விழி வீச்சை தாங்க முடியாதவளோ தலை குனிந்தவாறே,”திவா!!போலாம்..”,என மென்மையாய் உரைத்தாள்.

“போலாம் கண்ணம்மா..அதுக்கு முன்னாடி..”,என்றவன் சட்டென அவளை தன்புறம் இழுத்து நெற்றியில் அழுந்த இதழ்பதித்தான்.

பிடிமானத்திற்காய் அவனை கையை பற்றியவள் இறுக்கமாய் பற்ற சற்று இடைவெளிவிட்டு அவள் விழிகளுக்குள் நோக்கியவன் அவள் இதழ்களை விரலால் வருடியவாறே,”ஷல் ஐ?”,என வார்த்தைகளுக்கு வலிக்காமல் கேட்டு அவள் பதிலுக்கு காத்திருந்தான்.

சாதாரணமாகவே அவன் பேச்சில் உருகுபவள் இப்போது அவன் கேட்ட விதத்தில் மொத்தமாய் குழைந்து தான் போனாள்.சம்மதமாய் விழிமுடி அவனைப் பற்றியிருந்த கையை லேசாய் இறுக்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.