உதடுகளை நெருங்கியவன் தன் இதழ்களால் மலரிதழ் கொண்டு ஒற்றியெடுத்தது போன்று ஒற்றியெடுத்தான்.
மென்மையோ வன்மையோ முதல் இதழ் முத்தம் என்பது உணர்வுபூர்வமான ஒன்றாய் வாழ்வு முழுவதுக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒன்றுதான் நிச்சயமாய்.
வெண்பா அதை உணர்ந்தாள் அவன் அவள் அதரங்களை விடுவித்த அடுத்த நொடி அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.ஆதரவாய் அவள் முதுகைப் பற்றியவன் அவள் செவிகளில்,
“லவ் யூ சோ மச் டா கண்ணம்மா..என் மனசு எந்தளவு சந்தோஷத்துல இருக்குனு என்னால வார்த்தையால சொல்ல முடியுமானு தெரில அதனால தான் இப்படி சொல்லிட்டேன்.எனக்கே எனக்கான ஒரு உறவு வாழ்க்கை முழுவதுக்கும்.. நமக்கு குழந்தைங்க அவங்களுக்கு குடும்பம், இப்படி யாருமே இல்லாம வளர்ந்த என்னோட எதிர்காலத்தை எத்தனை அழகா மாத்திருக்க தெரியுமா..
சிந்தாம்மா என் அம்மா மாதிரி தான் இருந்தாலும் சில நேரங்களில் நா தூங்கிட்டேன்னு நினைச்சு அவங்க குடும்பத்து போட்டோ பார்த்து அழுவாங்க.இப்படி எல்லாருக்குமே அவங்களுக்கான ஒரு உறவுகள் இருக்காங்க ஆனா இதுவரை எனக்கு அப்படி யாருமே இல்லை.என் சொந்தம்னு யாரையும் தேடி போகணும்னு கூட நா நினைச்சதில்ல.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
அவ்ளோ ஏன் எந்த உறவையும் நா எதிர்பார்த்ததும் கிடையாது ஆனா இப்போ இந்த செகண்ட் நீ இல்லாத ஒரு லைஃப் நினைக்க கூட விரும்பாத ஒரு சிந்தனையா தான் நா நினைக்குறேன் கண்ணம்மா.
இனி நீ தான் என் வாழ்க்கை.நீ தான் என் எல்லாமும் எந்த சூழ்நிலையிலேயும் என்னை தனியா விட்டுற மாட்ட தான?”
ஆயிரம் ஆயிரம் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவன் குழந்தையாய் தான் பெறாத பிள்ளையாய் அவள் கண்ணுக்குத் தெரிந்தான்.
அவனை தன்னிடமிருந்து விலக்கி அவன் முகத்தை கையில் ஏந்தியவள்,”திவா இப்படிபட்ட அன்பை விட்டுட்டு எனக்கு வாழ்க்கைல என்ன இருக்கும் சொல்லுங்க.நீங்களே என்னை உங்க வாழ்க்கையில் இருந்து தள்ளி வச்சாலும் நா போகமாட்டேன்.”,என்றவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
ஆனால் விதியின் வலிமையை யார் அறிவார் அவனே அவளை போகாமல் இருக்க கெஞ்சியும் அவள் அவனைப் பிரிந்துவிடுவாள் என்பதை அப்போது இருவருமே அறிந்திருக்கவில்லை.
தொடரும்
{kunena_discuss:1221}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.