(Reading time: 16 - 31 minutes)

ன்னடா உளர்ற?”

“மகிக்கு உன்மேல காதல்னு சொல்றேன், அது மகி கண்ணுல நல்லாவே தெரியுது.. அதுமட்டுமா உனக்கும் மகியை ரொம்ப பிடிக்கும் தானே..”

“பிடிக்கும் தான், ஆனா எங்களுக்குள்ள காதலெல்லாம் இல்ல, மகியும் ஜஸ்ட் உன்னை போல எனக்கு நல்ல ப்ரண்ட் தான்”

“அப்படி நீ சொல்லிக்கிட்டாலும் மகியை நீ காதலிக்கிற,, மகிக்கும் உன்மேல ரொம்ப காதல் இருக்கு, அதான் நீ என் கூட பேசறது மகிக்கு பிடிக்கறதேயில்ல, அதே போல நீ அதிகம் என்க்கிட்ட  பேசறது  மகியைப் பத்தி தான், அப்போ இது காதல் இல்லாம என்னவாம்..” என்று அவன் கேட்ட போது உண்மையிலேயே அவள் மனதில் மகி மேல் இருக்கும் அன்புக்கு என்ன பெயர் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

“இங்கப்பாரு, மகியால மட்டும் தான் உன்னை ரொம்ப சந்தோஷமா வச்சிக்க முடியும்,  இங்க வந்த கொஞ்ச நாளில் எனக்கு அது நல்லாவே தெரிஞ்சுது, மகி மூலமா உனக்கு ஒரு அழகான குடும்பம் கிடைக்கும், ஏன் நீயும் மகியும் கல்யாணம் செஞ்சுக்கிட்டா உன்னோட அப்பாவோட உறவு உனக்கு நிரந்தரமா கிடைக்கும்..” என்று அவன் சொல்ல சொல்ல அவளுக்கு கேட்க மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் சார்லி சொல்வது போல் அவள் மகியை காதலிக்கிறேனா? என்று  குழம்பினாள்.

“எனக்கு என்ன சொல்லன்னே தெரியல சார்லி, எனக்கு மகியையும் அவனுடைய குடும்பத்தையும் பிடிக்கும் தான், ஆனா இது காதலான்னு தெரியல” என்று அவள் கூறவும்,

“சரி ரொம்ப உன்னை குழப்பிக்காத, எப்படியோ கொஞ்ச நாளில் மகியே உன் கிட்ட காதலை சொல்வான், நீயும் வீட்டுக்கு போனதும் நல்லா யோசிச்சு பாரு, உன்னோட மனசு நல்லாவே புரியும்..” என்றான்.

அவளுக்கு இத்தனை சொல்பவன், தன் மனதை பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருந்தால், அடுத்து அவன் இங்கு வரும்போது தான் செய்யவிருக்கும் குளருபடிகளை தவிர்த்திருக்கலாம், ஆனால் அவனுமே தன் மனதை ஆராயாமல் சில தவறுகளை செய்ய காத்திருக்கிறான்.

அடுத்து அமுதன் இருவரிடமும் விடைப்பெற்று விமானம் ஏற, பின் இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தார்கள்.

“ஆமாம் அமுதன் உன்னை தனியா கூட்டிக்கிட்டு போய் என்ன சொன்னான்..” என்று திடிரென்று மகி கேட்கவும், அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தாள்.

“ஏன்ன முழிக்குற, நீங்க ரெண்டுப்பேரும் தனியா போய் என்னைப்பத்தி தானே பேசினீங்க.. அவன் என்னைப் பார்த்துட்டு உன் கிட்ட  ஏதோ சொல்றான், நீ அதுக்கு என்னை ஒருமுறை பார்த்துட்டு அவன் கிட்ட ஏதோ பேசற, அப்படி என்னைப்பத்தி ரெண்டுப்பேரும் என்ன பேசிக்கிட்டீங்க?” என்று தெரிந்து ஆக வேண்டும் என்ற தோணியில் கேட்கவும், அமுதன்  சொன்ன காதல் விஷயத்தை பற்றி எப்படி கூறுவது என்று யோசித்து, பின் அதை மட்டும் விட்டுவிட்டு,

“அது நீ நேத்துல இருந்து அவனை ஒரு மாதிரி பார்க்கிறீயாம், அதாவது அவன் என்கூட பேசினா உனக்கு பிடிக்கலையாம், பொறாமை படுறியாம், ஆனா நான் அப்படியெல்லாம் இருக்காது, உன்னை போலத் தான் மகிழும் எனக்கு நல்ல ப்ரண்ட், உன்கூட நான் எவ்வளவு க்ளோஸ்னு அவனுக்கு தெரியும், உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்கேன்.. அப்புறம் ஏன் மகிழ் பொறாமைப்படணும்னு கேட்டேன்.. அவனும் அப்படின்னா ஓகே தான்னு சொல்லிட்டு போயிட்டான்..” என்று மற்ற விஷயங்களை அப்படியே கூறியவள்,

“நான் சொன்னது கரெக்டா தானே மகிழ்..” என்றுக் கேட்கவும், அமுதன் சொன்ன உண்மையை நினைத்து சில நொடிகள் அமைதியானவன், பின் பொறாமையை தவிர, இருவரையும் தவறாக நினைக்காத காரணத்தால்,

“ம்ம் உண்மை தான், எனக்கு ஏன் பொறாமை வரணும்..” என்றவனுக்கு வார்த்தைகள் தடுமாற தான் செய்தது.

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர்  என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னதன்பே

காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த

பேர் என்னவென கேட்டேன்

என் தீவில் ஒரு கால் வந்தது அந்த

ஆள் எங்கு என கேட்டேன்

கண்டுபிடி உள்ளம் சொன்னது

உன்னிடத்தில் உருகி நின்றது

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

அமுதன் சொல்லிவிட்டு சென்றதிலிருந்து ஒரு வாரமாக சுடரொளிக்கு இதே சிந்தனை தான், “உண்மையிலேயே சார்லி சொன்னது போல் மகிழ் தன்னை  காதலிக்கிறானா? அப்படியில்லை என்றால், அவன் ஏன் அன்று தடுமாற்றத்தோடு பேச வேண்டும். அப்படியானால் மகிழ்க்கு அவள் மேல் காதல் இருப்பது உண்மையா? சார்லி சொன்னது போல் அவளுக்கும் மகிழ் மேல் காதல் இருக்கிறதா?

மகிழ்.. நான் போதையில உளர்றேன்னு நினைக்கிறியா..?? இது என்னோட மனசுல இருந்து வர்ற வார்த்தைங்க.. நான் உன்னையும் சித்தியையும் எவ்வளவு லவ் பண்றேன்னு வார்த்தையால சொல்ல முடியாது.. லவ் யூ மகிழ்.. லவ் யூ சித்தி..”

அன்று போதையில் கூட அவனிடம் ஐ லவ் யூ என்று உளறியிருக்கிறாள். ஆனால் அது ஆழ் மனதில் சொன்ன வார்த்தை தானே, அப்படியானால் அவள் மகிழை காதலிக்கிறாள் தானே, நினைத்த போதே அது இனிமையாக இருந்தது.

மகிழ் நண்பன் என்பதை தாண்டி காதலனாய் கணவனாய் அவனை நினைத்துப் பார்க்கும்போது மனதிற்கு இதமாக இருந்தது. இதுவரை படித்து முடித்ததும் தந்தையை பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாளே தவிர, காதல், திருமணம், கணவன், எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? இப்படியெல்லாம் எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை, ஆனால் இப்போது மகியை அந்த இடத்தில் நினைத்துப் பார்த்து மகிழ்ந்தாள்.

அவனுடன் திருமணம் என்றால், உண்மையிலேயே அவள் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும், சார்லி சொன்னது போல் அவன் மூலமாக அன்பான ஒரு குடும்பம் கிடைக்கும், சிறிது காலம் மட்டும் தன் தந்தை மற்றும் குடும்பத்தோடு இருக்கலாம் என்று வந்தவளுக்கு நிரந்தரமாக அவர்கள் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும், மகிக்கும் அவள் மீது காதல் இருக்கும் பட்சத்தில் அவள் ஆசையும் நியாயமானது தானே, என்று நினைத்த போது, இதெல்லாம் நிஜம் தானா? இல்லை நான் கனவு காண்கிறேனா? என்று புரியாமல் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.