(Reading time: 16 - 31 minutes)

ந்த நேரம் வீட்டிற்கு வந்த மகி, “ஹேய் சுடர் எப்போ வந்த? நீ இன்னைக்கு ரெஸ்ட்டாரண்ட்க்கு வருவன்னு பார்த்தேன்” என்றப்படி அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

“அது அத்தையை பார்க்கலாம்னு வந்தேன்” என்று அவள் சொல்லவும்,

“என்னது அத்தையா அது யாரு..” என்று அவன் ஆச்சர்யமாக கேட்க,

“என்னைத்தான் அப்படி கூப்பிட்றா மகி..” என்று சொல்லியப்படியே பூங்கொடி கையில்  காபியோடு வந்தவர் அதை சுடரிடம் கொடுத்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அம்மா இன்னொரு இடத்துல ப்ரான்ச் ஆரம்பிக்க ஒரு ஹோட்டல் விலை பேசினோமே, அது நமக்கே கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கும்மா.. அப்படியே பேங்க் லோனும் கிடைச்சிடும்..” என்று அவன் நல்ல செய்தி கூறியதும்,

“ரொம்ப சந்தோஷம் மகி.. கடவுள் அருள் நமக்கு எப்போதும் இருக்கும்.. அப்பா வந்தா சொல்லு சந்தோஷப்படுவார்..” என்று சொல்லிவிட்டு அவர் காபி எடுத்து வர  சமையலறைக்குச் சென்றார்.

“கங்கிராட்ஸ் மகிழ்..” என்று சுடரொளி கைகுலுக்கி வாழ்த்துக்கள் கூறினாள்.

“அப்புறம் ட்ரீட் எங்கே?” என்று அவள் கேட்கவும்,

“என்ன அன்னைக்கு மாதிரி பியர் ஓகே வா” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி அவன் சொல்ல,

“அய்யோ இனி அதெல்லாம் நான் குடிக்கப் போறதில்ல.. தப்பு” என்றாள்.

“ஹேய் இது எப்போதிலிருந்து.. சரி நமக்கு ஒரு பார்டனர் கிடைச்சிருக்காங்க.. ஒருமுறை தைரியமா தண்ணி அடிப்போம்னு பார்த்தா.. நீ இப்படி பேசறீயே நியாயமா..”

“இதெல்லாம் மாமாக்கு பிடிக்காதுல்ல.. அதான் குடிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்..”

“ஆமா அது யாரு மாமா?”

“உங்கப்பா தான்..’

“ ஆமாம் என்ன திடிர்னு அப்பா, அம்மாவை அத்தை மாமான்னு கூப்பிட்ற..” என்று கேட்டதும், அவள் என்ன சொல்லவென்று தெரியாமல் விழிக்க, அந்த கண்களில் தொலைந்திட தோன்றிய ஆசையை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

“ஏன் மகிழ் அப்படி கூப்பிடக் கூடாதா? மணி அக்கா, அருள், தமிழ், புவில்லாம் அப்படித்தானே கூப்பிட்றாங்க.. அதான் நானும் அப்படி கூப்பிட்டேன்.. தப்பா?” என்றுக் கேட்க,

“நீ இப்படி கூப்பிட்றது தான் எனக்கு பிடிச்சிருக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று அவன் சொல்லவும் அவள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் அதற்கு ஆயுட்காலம் குறைவு என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

உறவு வளரும்...

Episode # 31

Episode # 33

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.