(Reading time: 15 - 30 minutes)

அண்ணா கெஸ்ட் ஹவுஸ்சிற்கு மிதுணனை இழுத்துட்டு போறாங்க அப்பாட்ட சொல்லி அவனை விடச்சொல்லுங்க என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதும் தன்னைச் சுற்றிப் பார்வையை ஓட விட்ட அவளின் அண்ணன் அவள் பேசியது யாரின் காதிலும் விழுந்திருக்காது என்பதை புரிந்து கொண்டவன், அவளின் கன்னத்தில் பளீர் என்று ஓர் அரை கொடுத்தான்.

இங்க பாரு... நீ பார்த்தது மிதுணன் கிடையாது .அது வேரு ஒருவன் நம் அப்பாவுக்கு எதிரி .இப்போ இங்க யாரையும் பார்க்கல நீ. சரியா? இங்கு நடப்பது எதுவும் வெளிய மூச்சு விடக்கூடாது  புரியுதா? அப்பாவுக்கு நீ இப்படி பேசுனேன்னு தெரிஞ்சது அவ்வளவுதான். உன்னால் வீட்டு வாசல்படி தாண்ட முடியாது. உடனே உன்னை கல்யாணம் செய்து

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பேக்கப் செஞ்சு அனுப்பிடுவார். போ! போய் காலேஜ் போகிற வழியை பாரு என்று கூறிவிட்டான்.

அவன் அண்ணன் அவளை முறைத்தவாறு கூறிக்கொண்டு அங்கேயே நிற்பதை பார்த்தவள், இப்பொழுது தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிதர்சனம் அறிந்து காலேஜுக்கு புறப்பட்டுவிட்டாள்.

ஒருவேளை தான் தவறுதலாக பார்த்திருப்பேனோ! அண்ணன் சொன்னதுபோல் அது மிதுணன் கிடையாதோ? என்று எண்ணியபடி காலேஜுக்கு வந்தவளுக்கு மிதுணன் காலேஜில் இல்லை என்றதுமே புரிந்துகொண்டாள். தான் காலையில் தனது வீட்டில்  பார்த்தது மிதுனனைத்தான் என்று.

மேலும் அவனை தப்பிக்க வைக்கவேண்டுமானால் பொறுமையாகத் தான் காத்துகொண்டு இருந்தால்தான் சாதிக்கமுடியும் என்றும்  எப்படியாவது மிதுணனை தன் அப்பாவிடம் இருந்து தப்பிக்க வைத்துவிடவேண்டும் என்றும் முடிவெடுத்தாள்.

மிதுணனை விட்டுவிடக்ககூறி தனது அப்பாவிடம் கூறினால் கண்டிப்பாக தன்னுடைய தந்தை அதற்கு செவிசாய்க்கப் போவதில்லை என்பதனை புரிந்துவைதிருந்தாள்.

மேலும் அவ்வாறு கேட்டுவிட்டால், தான் அவனை விடுவிக்க முயலலாம் என்ற சந்தேகம் வந்து தனது அப்பா ஜாக்கிரதையாக இருக்க ஆரம்பித்துவிடுவார். எனவே மிதுணனை தப்புவிக்க முடியாது என்றதால் சந்தர்பத்திற்காக அமைதியாக காத்துக் கொண்டிருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று இயல்பாக இருப்பதுபோல் பாவனை காண்பித்து வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்தாள்.

இரவு வீட்டில் சமையல் காரம்மா டீ போட்டுகொண்டிருப்பதை, அங்கு  ஜக்கில் குடிக்க தண்ணீர் பிடித்து தன்னுடைய ரூமிற்கு எடுக்க வந்தபோது பார்த்த சந்தியா, இந்த நேரம் யாருக்கு டீ போடுறீங்க முனியம்மா என்று கேட்டாள்.

அதற்கு அவள், நம்ம வீட்டுபின்னாடி உள்ள ஊட்டுல இருக்கற மாரிதான் அவன் கூட  இருக்குற ஏழுபேருக்கு காபிபோட்டு கொடுக்கச்சொன்னான். அதுக்குதான் போட்டுட்டு இருக்கேன் சின்னம்மா என்றாள்.

அவள் சொன்னதும் அப்படியா!  சரி. என்று சொன்னவள் வெளியேறி நேராக அவளின் அம்மா வைத்திருந்த தூக்க மாத்திரை சிலதை கையில் எடுத்துகொண்டு அடுப்படிக்குள் வந்தவள் முனியம்மா போறவழியில் தண்ணீர்  கொட்டிடுச்சு. போ முதலில் அதை தொடச்சுவிடு. அப்பா வரும் நேரம் அவருக்கு வழுக்கிடப்போகுது என்றதும், செய்துகொண்டிருந்த வேலையைவிட்டு அதை துடைபதற்கு விரைந்தாள் முனியம்மாள்.

அவள் போவதை பார்த்துக்கொண்டே அம்மாத்திரைகளை அங்கிருந்த  பூண்டு தட்டும் குட்டி உரலில் போட்டு இடித்து பொடிசெய்து முனியம்மாள் அடுப்பைவிட்டு இறகியிருந்த டீயில் போட்டு அருகில் இருந்த கரண்டியில் கலக்கிவிட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டாள்.

தான் மாத்திரை கலக்கிய டீயை மிதுனனுக்கு காவல் இருந்த மாரியும், அவன் கூட இருந்த தன அப்பாவின் மற்ற அடியாட்களும்  குடித்திருப்பார்களா? என்ற யோசனையுடன் தூங்காமல் விளித்துக் கொண்டிருந்தாள்.

நேரம், இரவு ஒன்றை தாண்டி இருந்தது. தனது அப்பா இரவு பன்னிரெண்டு மணிக்கு பின்னேயே அவரது அறைக்கு போனதை அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

இப்பொழுது எல்லோரும் தூங்கியிருப்பார்கள் என்ற எண்ணத்தில் மெதுவாக தனது அறையில் இருந்து வெளியில் வந்தவள் பதுங்கி பதுங்கி கையில் சிறு கத்தியுடன் மிதுணனை வைத்திருந்த கெஸ்ட் ஹவுசிற்கு அருகில் சென்றுவிட்டாள் சந்தியா.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.