(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 16 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

என் இனிய நட்பூக்களே அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இப்படிக்கு உங்கள் தீபாஸ்

தீரன் யாழிசையிடம், அவளால் பழைய வாழ்க்கைக்கு இனிமேல் திரும்பி போக முடியாது என்று சொல்லிவிட்டு அவனுக்கு வந்த போன்அழைப்பை அட்டன் செய்ய வெளியேறிவிட்டான்.

அவன் கூறியதை கேட்டும், அதற்கு முன் அவளின் நிலையை பற்றி அறிந்ததையும் இணைத்து  பார்த்தவள் உள்ளம் சூழ்நிலையை ஓரளவு புரிந்துகொண்டது. எனவே  தனக்காகவே வாழும் தனது தந்தையும் தன்னையே உயிராக நினைக்கும் ருக்கு பாட்டியையும் நினைத்து அவளின் மனம் வெதும்பியது.

எப்படியாவது தீரனிடமிருந்து தப்பித்து தன் வீட்டிற்கு போய்விடமாட்டோமா என்ற தவிப்பு உருவானது மேலும் இப்பொழுது தீரனை நேரடியாக எதிர்த்தால் தன்னை ரூமிற்குள்ளேயே அடைத்து வைத்துவிடுவான். ஆதலால் தப்பிக்கும் மார்க்கம் கிட்டாமல் போய்விடுமோ என அஞ்சினாள்.

எனவே அவனின் சொல் கேட்பதுபோல் அவனின் முன் நடிக்க வேண்டும் அப்பொழுதுதான் தன்னால் இந்த அறையைவிட்டு வெளியேறி தப்பிக்கும் மார்க்கம் கண்டறியமுடியும் என முடிவெடுத்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தான் தப்பித்துப் போகும் வரை தனது அப்பாவையும் பாட்டியையும் வானவராயர் அய்யா குடும்பம், உடன் இருந்து அவர்களின் மனம் உடைந்துபோகாமல் பார்த்துக்கொள்வார்கள் என்றும் நினைத்தாள்.

அவ்வாறு வானவராயரை பற்றி நினைக்கும் போதே அய்யாவின் மகனாக இந்த தீரமிகுந்தன் இருந்துமா! இப்படி பட்ட காரியத்தை செய்யமுடிகிறது என்ற கேள்வி எழுந்தது.

மேலும் அன்று தீரன் தன்னை வானவராயரின் மகன் என்று கூறியதை வைத்து இரவு பாட்டியிடம் கேட்டாள்.

பாட்டி.. அய்யா வீட்டில் நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது ஒரு பாட்டி இருந்தார்களே அவங்கதானே அய்யாவின் தங்கச்சி.   அவங்க கல்யாணம் செய்தது நம் பெருமாள் கோவில் பட்டரோட உறவுக்காரர்  என்று பேச்சு கேள்விபட்டிருக்கிறேனே!  அப்போ அவங்களோடது காதல் கல்யாணமா? என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும். ருக்கு பாட்டி கூறினாள், இப்போ உனக்கு எதுக்கு பாப்பா  இந்த தேவையில்லாத ஆராய்ச்சி  என்று கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டதும், இல்ல... அந்த பாட்டியோட புருசனோ பிராமின் அந்த பாட்டியும் நல்லா பிராமினாட்டம் கலராத்தான் இருந்தாங்க பிறகு என்ன அவங்க மகளான நம்ம பெரியவீட்டு அம்மா (வானவராயரின் மனைவி வெள்ளையம்மளைதான் கேட்கிறாள்) மட்டும் ஏன் கலாரா இல்லாம புதுநிறமா இருக்காங்க என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் ருக்கு பாட்டி கூறினாள்  பாப்பா, வெள்ளையம்மா ஒன்றும் அய்யாவின் தங்கை மகள் கிடையாது.

அய்யாவோட தங்கச்சி மகபேரு பத்மினி. அந்த பத்மினி தான் அய்யாவின் மூத்த சம்சாரம்.

 பத்மினியை பார்த்த யாரும் அவளை ஆயுசுக்கும் மறக்க மாட்டங்க அப்படி ஒரு கலரு அழகு ஆனா என்ன அம்புட்டு அழகா அவளை படைத்த ஆண்டவன் அவளோட வாழ்கையை கோணலா எழுதிபுட்டான் என்று கூறினார்.

அவர் அவ்வாறு கூறியதும் இவங்களுக்கு என்னபாட்டி ஆச்சு என்று யாழிசை கேள்விகேட்டாள்.

ம்...அதுதான் முடிச்சு போன கதையாச்சே.... அதை இனிமே பேசி என்ன ஆகப்போகுது. என்னதான் இருந்தாலும் வெள்ளையம்மாளின் குணத்துக்கு முன்னால அந்த பத்மினியோட அழகு ஒன்னும் பெருசு இல்லை என்றாள்.

அதை  இப்பொழுது நினைவு கூர்ந்த யாழிசை, எனது அய்யாவின் மகனான தீரனை, என் மண்ணுக்கு  எதிரான துரோகத்தை செய்யவிடக்கூடாது என்ற பலபல சிந்தனைகளுடன் அவள் மனதுடன்  யுத்தம் செய்தாலும், தீரனுடன் அவன் சொல்பேச்சு கேட்பதுபோல் நடிக்க வேண்டும் என்ற முடிவினால் பாத்ரூம்சென்று குளித்து அவள் போட்டிருந்த உடையையே திரும்ப உடுத்திக்கொண்டு வெளிவருவதற்கும் தீரனும் கதவை திறந்து கைநிறைய பைகளுடன் உள்ளே வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

உள்ளே வந்தவன்..., யாழிசை அவனை பார்த்து செயற்கையாக புன்னகை புரிவதை கண்டு ஒருநிமிடம் புருவம் சுருக்கி யோசித்தான் பின் அவள் தன்னிடம் வேசமிடுகிறாள் என புரிந்துகொண்டு  என்கிட்டேயேவா? என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, அவனும் அவளை பார்த்து அர்த்தமுள்ள சிரிப்பை கொடுத்தான்.

பின் அவன் உன் பெர்பார்மன்சை நீ காட்டிட இப்போ என் பெர்பார்மன்சை பாரு என்று மனதினுள் கூறிக்கொண்டே .

ஹேய் பேபி கம்மான். திஸ் இஸ் ஆல் பார் யூ என்று கை நிறைய வைத்திருந்த பைகளை தூக்கி காண்பித்தான்.

டுமாரோ மார்னிங்  நம்மளுடைய மேரேஜ் உடனே ரெஜிஸ்டர் பண்றதுக்கும் எல்லா ஏற்படும் செய்துவிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.