Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 8 - 16 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

ன்று மாலை, இளம் மஞ்சள் வெயிலில் மலைப் பாதையில் சதா நடைபயின்று கொண்டிருந்தாள். அவள் சிந்தனை வயப்பட்டிருந்தாள். ‘திருட்டுத்தனம்’ இந்த வார்த்தையே அவளுடைய தலைக்குள் ஆட்டம் போட்டு குடைசலை கிளப்பிக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணிடம் இப்படி பேசுவார்களா என்ன? அவளுடைய ரேஞ்ச் தெரியாமல் வார்த்தைகளை வாரி இறைத்து விட்டானே? அந்த வார்த்தைகள் அவள் தகுதிக்கானதா இல்லை அவனுடைய தகுதிக்கானதா?

‘இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது… அதுவும் மனைவியிடம் பேசுவது…. குலக்கேடாகி விடாதா? அப்புறம் அடித்தாள்… துவைத்தாள்… என்று ஒப்பாரி வைப்பார்களாக்கும்.’ சதாவிற்கு வந்த கோபத்தில் அவளுடைய கொள்கையை தளர்த்திக் கொண்டு--- புவன் விஷயத்தில் மட்டும்தான்- சாப்பாட்டில் உப்பை அள்ளி போட்டுவிடலாமா என்றும் யோசித்தாள். இரவு உணவு இல்லாமல் பட்டினியுடன் உறங்கட்டும்!.

சாதாரணமாகக்கூட இது போன்ற வசைபாடல்களை அவள் கேட்டதில்லை. அதிலும் அவள் போலீஸ்காரரின் பெண்… கொஞ்சம் பவ்வியமாகதான் அவளிடம் பேசுவார்கள். அத்தையிடம்கூட மாமா பவ்வியமாகத்தான் பேசுவார். அவர்கள் வீட்டில் யாரும் உரத்து பேசுவதில்லை.

இந்த புவன்.. யாரிவன்? அவளை பழிச்சொல் கூறிவிட்டான். உள்ளே சென்ற பாம்பு அவனை கொத்தி பிடுங்கி வைத்திருக்க வேண்டும். ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்று பதறிக் கொண்டு அறைக்குள் சென்றது தவறாகி விட்டது.

‘இரு… இரு… உனக்கு ஒரு பாடம் சொல்லித் தருவேன். அந்த அறைக்குள் நீ வைத்திருக்கும் அந்த ‘ஏதோ ஒரு பொக்கிஷத்தை’  எடுத்து ஒளித்து வைப்பேன். ஆமாம்.. அது என்ன பொருளாக இருக்கும்?. கதையில் வருவதுபோல்  புவனின் உயிரை ஒளித்து வைத்திருக்கும் மாயக்கிளியாக இருக்குமோ?  ஓ…  நோ… நாட் தட் ஃபேண்டஸி…!’

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹலோ சதா!” குரல் கேட்டு திரும்பினாள். ஐயோ அந்த வைபவ்…! பேயை நினைத்துக் கொண்டிருந்தால்… பிசாசு வருகிறது!

“என்ன அப்படி முழிக்கிறாய்? எங்க வீடு இங்கே அருகில்தான் இருக்கிறது. அதோ அந்த மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த வீடு. உனக்குத் தெரியாதா?” என்றான்.

அடப்பாவி! அது ஒரு காததூரத்தில் இருக்கிறது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தாள். உலகத்தில் உள்ள எல்லா சைத்தான்களும் இங்கேதான் ஒன்றாக குடியிருக்கின்றனவா?

“ஓ… நான் இங்கே வாக்கிங் வந்தேன். ஏதோ யோசனையில் கொஞ்சம் கூடவே  நடந்துட்டேன் போலிருக்கிறது” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவளுடனேயே தொடர்ந்து வந்தவன், “பழைய காதலின் நினைவு வந்தாலே எனக்கும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. என்னை மறந்து விடுகிறேன்” என்றான்.

காதலா? அந்த கோமாளித்தனத்தின் மீது அவளுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கிறானா? லூசு… லூசு…..

“என்ன சொல்றீங்க வைபவ்” எரிச்சலாக கேட்டாள்.

“ம்… நீயும் நானும் திருமணம் முடித்து வாழ்க்கையை ஆரம்பித்திருப்போம்…. ஆனால் உன் அத்தை குறுக்கிட்டு உன்னை பலவந்தமாக புவனுக்கு கட்டி வைத்து விட்டார். இப்பவும் ஒன்னும் கெட்டுபோகலை டார்லிங், நீ வந்தால் உன்னை கூட்டிச் சென்று விடுகிறேன்”

ஓ… கதை அப்படி போகுதா?  வைபவ் என்ற பித்தளை தன் குணம் காட்டி பல்லிளித்துபோனது இன்னும் அவனுக்குத் தெரியவில்லை போலிருக்கிறதே? அதுசரி எப்படி தெரியும்… அவள்தான் அதுபற்றி வெளியே யாரிடமும் சொல்லவில்லையே!

“உன்னுடன் நான் வருவதா? நீ நினைப்பதுபோல் இல்லை வைபவ்! உறவு என்ற வார்த்தைக்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும் அல்லவா? நமக்கு இடையே காதல் என்ற ஒன்று இல்லை என்று எனக்கு புரிந்து விட்டது. உன்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டாமென்றுதான் திருமணத்தை மறுத்து விட்டேன்”

“காதல் இல்லையா?“ அதிர்ச்சிபோல கேட்டான்.

“ஆமாம் அது வெறும் கருணை மட்டும்தான். தம்பி இறந்த கோகத்தில் நீ இருந்ததால் நான் கொஞ்சம் இரக்கப்பட்டேன் அவ்வளவுதான்”

“அவ்வளவுதானா…? சதா உனக்கு இதே வேலையாகி விட்டதா? காதல் என்ற பெயரில் எத்தனை பேரை ஏமாற்றுவாய்?” என்று குரலை உயர்த்தினான்.

“யார் யாரை ஏமாற்றியது வைபவ்…?”

“முதலில் என் தம்பியை… இப்போது என்னை…”

“வாயை மூடு… தட்ஸ் த லிமிட்” அவள் புலிபோல சீறினாள்.

“அடிப்பாவி விருப்பமில்லாத கல்யாணத்தில் நீ சிக்கிக் கொண்டாயோ என்று கவலைப்பட்டேன். ஆனால் நீ என்னை ஏமாற்றிவிட்டு அவனை மணந்திருக்கிறாய்? ஏன் என்னைவிட உயரமா பணக்காரனாக இருக்கிறான் என்றா? பிளடி பிட்ச்”

பிட்ச்சா! அவளுக்கு ஐயோவென்றிருந்தது…. இதென்ன இப்படி வசைபட வாழ்ந்து கொண்டிருக்கிறாளே? கொஞ்சமும் சுயமரியாதை இல்லாதவள் என்று நினைத்து விட்டானோ? கண்கள் சிவக்க,

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-11-10 22:40
Super Deepavali :clap: :lol: Karan innovative athirasam maathiriyana onnu jeyitha mathiritha innaikku nadakkura cookery show results varutho :Q: athu ennava iruntha namakkenna... Deepavali super :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-11-08 11:45
கலகலப்பா தீபாவளி போச்சு.... :clap: :clap:
அந்த ஜாம்மின்ரி பாக்ஸ்க்கும் சதாவுக்கும் இணைப்பு இருக்குமோ.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்saaru 2018-11-07 20:31
Ha ha Semma sagambari
Judges sarilapa
Yanaipal kulicha kurukuvali yopipaainga pola Karan pada Aluya nee
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2018-11-07 13:23
Wowwwwwww (y) Sooper update.... Diwali sweets lam Sooper :clap:.... Andha geometry box Sadha kuduthatha irukkumo :Q:... Wait pannuvom... facepalm.... Thanku mam for the nice and hilarious update.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்SAJU 2018-11-07 12:04
WOWWWWWW SUPERRRRRRRR
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-11-06 21:23
Nice cute ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்AdharvJo 2018-11-06 20:34
Guys don't u know nogamal nombu kumbiduvadhu :grin: anyway adhirasam murukku ellam.oil.bath eduthadhil arogathyuokku naladhey illai :no: :D Deepawali andru Vali ah?? so no senti & mentals :P that was hilarious update and of course unga Diwali treat yummy yummy :dance: :clap: :clap: Sri Etta edathil karnan ah :o
enjoyed reading every scene.
geometry box ragasiyathukk pinadi sadha irupangalo nah no filmy imagination 😂 but Ena drama plan panuraru Mr buvan? Oru flower accident ala oru action scene-a miss panitome ms sagampari :lol: thank you for such an entertaining update. Keep rocking.

Wish you happy and prosperous Diwali.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Ithaya siraiyil aayul kaithi

Padithathil pidithathu

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
05
EVUT

PVOVN

NiNi
06
MINN

PPPP

MAMN
07
VD

EMPM

MUN
08
EEU01

KaNe

KPY
09
-

UVME

Enn
10
VVUK

NKU

Tha
11
KI

-

-


Mor

AN

Eve
12
EVUT

ST

NiNi
13
MMSV

PPPP

MAMN
14
GM

EMPM

KIEN
15
ISAK

KaNe

KPY
16
EU

Ame

-
17
VVUK

NKU

Tha
18
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top