(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 01 - மகி

valentines

காலை 5 மணிக்கு அலாரம் அடிக்கவே... கண்விழித்தார் கௌரி..

எழுந்து குளித்து தலையில் துண்டுடன் ரூமைவிட்டு வெளியே வந்தார்.. நேராக பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்தார்....

கிட்சனுக்கு வந்தவரின் முன் காப்பி கப் நீட்டவே.. அதை ஒரு புன்னகையுடன் பெற்றுக்கொண்டவர் காப்பியை பருகினார்..

ஹ்ஹ்ஹ்ஹ்.... காலையில்ல இப்படி மணக்க மணக்க சூப்பரா காப்பி போட்டு கொடுக்கரபுள்ளைகிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்..

ம்... என் புள்ளைய கட்டிக்க யாருக்கு கொடுத்துவச்சுருக்கோ என கூறிக்கொண்டே காப்பியை பருகினார்...

ஹாஹா நீங்க எல்லாரும் காப்பி போட்டுகொடுக்கரது பொண்ணுன்னு நினைச்சீங்களா.. எவ்வளவு நாள்தான் கிட்ச்சன் பொண்ணுங்களுக்கே சொந்தமாயிருக்கரது... பசங்களும் சமையல்கட்டு அருமையை தெரிஞ்சுக்கட்டும் அதான் ஹீரோக்கு என்ரி அங்க கொடுத்தேன்.. எப்படி......

நம்ம ஹீரோ அபிஜிக்த்.. ரொம்ப சமத்து.. பாக்க செமயா இருப்பாரு.. நல்ல படிப்பாளி.. வீட்டு செல்லபிள்ளை.. இப்பத்தான் காலேஜ் முதல் வருசம்.. முதல்வருடமாயிருந்தாலும் நம்ம ஹீரோக்குன்னு தனி ரசிகர் பட்டாளமேயிருக்கு....

அண்ணா.... உன் காப்பி மணம் என்ன தூங்கவிடாம எழுப்பி இங்ககூப்பிட்டு வந்திருச்சுன்னா... என கூறிக்கொண்டே அபியின் செல்ல தங்கை ஸ்வேதா உள்ளே வந்தாள்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அண்ணா.. காப்பி...

இந்தா செல்லம் என அவளுக்கும் ஒரு கப் காப்பியை கொடுத்தான் அபி...

ஆமா பாரு பையன் காப்பி போட்டு கொடுக்கரான் கொஞ்சமாவது பொறுப்புயிருக்காடி உனக்கு என கௌரி கூற உடனே தங்கைக்கு வக்காளத்து வாங்க அபி முன் வந்தான்..

அம்மா அவ சின்னபொண்ணு இப்பத்தான் 8-வது போற அதுக்குள்ள என்னம்மா பொறுப்புன்னு எல்லாம் சொல்லி அவள சத்தம் போடறீங்க..

அதானே பாத்தேன் என்னடா இன்னும் பாசகார அண்ணனை காணம்ன்னு பாத்தேன்.. அவ சின்ன பொன்னு தான் ஆனா அவளுக்கு இப்பயிருந்தே எல்லாத்தையும் கத்துக்கனும்..

சமையல் எல்லாம் பொண்ணுங்க தான் செய்யனும்ன்னு இல்லை அது எல்லாம் எப்பவோ போச்சு இப்ப எல்லாம் பொண்ணுங்க என்ன எல்லாமோ பன்னராங்க...

ம்.. நான் ஒத்துக்கரேன் பொண்ணுங்க இப்போ எவ்வளவோ சாதிக்கராங்க நான் இல்லைன்னு சொல்லல்ல ஆனா சமையல் கட்டு மகிமை என் பொன்னுக்கு தெரியாம போயிர கூடாதுன்னு நான் நினைக்கரேன்..

என்னம்மா சமையல் கலை அது இதுன்னு இப்ப போயி..

சரிப்பா.... நான் என் பொண்ணுக்கு சமையல் கலையைபத்தி சொல்லிதரேன்... நீங்க எல்லாரும் உங்க புதுமையை சொல்லி கொடுங்க...

இந்த டீல் நல்லாயிருக்கே.... சரிம்மா நான் என்னோட செல்ல தங்கைக்கு உலக நடப்பை சொல்லி கொடுக்கரேன்.. டீல்-ம்மா

ஹாலோ  ஹாலோ நீங்க என்னபத்தி தான் பேசரீங்க.. ஆனா என்ன யாரும் இங்க ஒரு பொறுட்டாவே மதிக்கல்ல...

ஆமா நீ குள்ள கத்தரிகா மாதிரியிருந்தா யாரு தான் உன்ன கண்டுக்குவா.. என ஸ்வேதாவை கலாயித்துக்கொண்டே காப்பியை குடிக்கலானான் கார்த்திக்.. அபியின் தம்பி 10-வது படித்துக்கொண்டுயிருக்கும் அவன் நைட் முழுக்க படிச்சிட்டு இப்பத்தான் எழுந்து வந்தான்...

அவன் குள்ளகத்திரிக்கா என சொல்லவும் அவள் தன் அபி அண்ணாவை துணைக்கு அழைத்தாள்..

அபிண்னா இவன பாரேன் என்ன குள்ளகத்தரிக்கான்னு சொல்லரா என அழுவதை போல சொல்லவும்..

அபி அவன் குடித்துக்கொண்டுயிருந்த காப்பியை பிடிங்கினான்..

அண்ணா காப்பிய கொடுங்க அண்ணா..

முடியாதுடா.. எப்படி டா நீ ஸ்வேகுட்டிய கிண்டல் பன்னாலாம்...

ம்... நல்லாகேளுங்க அண்ணா....

இதோ கேட்கரேன்ம்மா.. அவ அப்படியே இருந்தாலும் நீ எப்படி டா அப்படி சொல்லலாம்...

ம்.. இன்னும் நல்லாகேளுங்க...

கத்தரிக்காய்க்கு கை,கால் முளைச்ச மாதிரி கூட ஸ்வேகுட்டி இருப்பா அதுக்குன்னு நீ அப்படி சொல்லுவீயாடா....

ஆமா ஆமா கேளுண்ணா என சொன்னவள் அபி சொன்னதை யோசித்தவள்.. கார்த்தியை விட அபி தான் அவளை கிண்டல் செய்து கொண்டுயிருக்குறான் என தாமதாமாகத்தான் அவளுக்கு தெரிஞ்சிருக்கு... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.