(Reading time: 15 - 29 minutes)

அபி அண்ணா நீங்களும் என்ன கிண்டல் பன்னறீங்களா.. போங்க நான் யார் கூடவும் பேசமாட்டேன் கோவமா போரேன்.. சொல்லீட்டு அவள் சென்றுவிட்டாள்..

கோவத்தப்பாரு அபி அண்ணா எதுக்கு எடுத்தாலும் இப்படித்தான் கோவமாபடரா...

அவ உண்மையாவே கோவமாயிருந்திருந்தா சும்மா போயிருப்பாளா.. சாமியாடியிருப்பா..

குள்ளகத்தரிக்கா மாதிரி இருந்துகிட்டு எவ்வளவு பன்னரா...

போதும் டா.. சும்மா என் பொண்ண கிண்டல் பன்னிகிட்டேயிருக்கீங்க போங்க டா கிளம்பர வழியை பாருங்க நான் வேளை செய்யனும்

பாருண்ணா இவ்வோ நேரம் பாப்புவ திட்டிட்டு இப்போ சப்போட்டபாரு...

அவங்க அப்படித்தான் ஆயிரம் தான் இருந்தாலும் அம்மா பொண்ணாச்சே அப்படித்தான் இருப்பாங்க.. எனக்கும் அபியோட ஸ்பெஷல் காப்பி கிடைக்கும்மா என அங்கே வந்தார் நாராயணன்..

என்னங்க நீங்க எழுதிட்டீங்களா.. இந்த பசங்களாள தான் சாரிங்க.. இதோ காப்பி தரேன்..

எந்த அவசரமும் இல்லம்மா நான் இங்க என்ன நடக்குதுன்னு பாக்கத்தான் வந்தேன்..

இந்த ரெண்டு வாண்டுகளால பாப்பு கோச்சிட்டு பேயிட்டா..

என்னாடா பன்னீங்க என் பொன்ன..

நான் இல்லப்பா அண்ணா தான்.. என்ன விடுக்கப்பா என நலுவிக்கொண்டான் கார்த்திக்..

அடப்பாவி என்ன மட்டும் மாட்டிவிட்டு நீ எஸ்சாயிட்டீயே.. சரி சமாளிப்போம்..

வா அபி அப்படி உட்காந்து பேசலாம் என தன்மனைவியிடம் காப்பியை வாங்கிக்கொண்டு அபியுன் நடந்தார்..

அப்பா நான் சும்மா தான் பாப்புகிட்ட விளையாடினேன்ப்பா.. என சரண்டர் ஆனான்...

நாராயணன் சிறுபுன்னகையுடன் காப்பியை அருந்திக்கொண்டே பேசலானார்.. அது உங்க பிரச்சனை.. பாப்புவ சாமாதானம் பன்ன வேண்டிய பொறுப்பு உங்களோடது..

இப்போ நீ காலேஜ் போக போர... அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட இதை சொல்லீரேன்.. உனக்கு அட்வைஷ், அப்படி இப்படின்னு நான் எதுவும் உனக்கு பன்னல சரியா.... என்ன சொல்ல போரேன்னு பாக்கரியா....

ப்பா... நீங்க எனக்கு ஒரு நல்ல நண்பன்ப்பா.. என்னோட சிறந்த வழிகாட்டி.. நீங்க எது சொன்னாலும் அது எனக்கு நல்லததான் இருக்கும்..

ம்.... அபி இப்போ நீ காலேஜ் போகபோர.. இது என்னோட வாழ்க்கையை எப்படி மாத்தினதுன்னு நான் உனக்கு சொல்லர.. அது மூலமா உனக்கு தேவையானதை நீ எடுத்துக்க.. ஏன்னா எனக்கு அப்பரம் நீதான் உன்னோட தம்பி,தங்கையை என்னோட ஸ்தானத்துல இருந்து பார்த்துக்கனும்..

அப்பா என்ன சொல்லரீங்க...

அபி நான் தப்பா சொல்லல.. நீ எப்படி என்ன பார்த்து வளர்ந்தியோ.. அதே போல அவங்க உன்ன பார்த்து வளர்ராங்க..

நீ அவங்களுக்கு சிறந்த உதாரணமா இருக்கனும்..

கண்டிப்பா ப்பா.. நான் தப்புபன்னமாட்டேன் ப்பா..

உன்மேல எனக்கு முழுநம்பிக்கையிருக்கு அபி அதனால தான் உனக்கு நான் பொறுப்பை கொடுக்கரேன்..

உண்மைதான் குடும்பத்துல மூத்த பையனோ.. இல்ல பொண்ணோ.. பிறந்தாலே ரொம்ப சுலபமா அவங்க தலையில்ல எல்லா பொறுப்பையும் சுமத்தியிரோம்.. இதனால அவங்க வாழ்க்கையில்ல அவங்க என்ன எல்லாம் இழக்கராங்கன்னு தெரியாமையே போயிருது இதனால அபி அவன் வாழ்க்கையில்ல என்ன எல்லாம் இழக்க போரானோ.. இல்ல அவன் வாழ்க்கையே இழக்க போரானோ... பொறுத்து தான் பாக்கனும்....

அபி என்னோட காலேஜ் லைப்வை என்னால மறக்கவே முடியாது.....

நான் ரொம்ப அமைதி எல்லாம்யில்லை.. கொஞ்சம் சேட்டைபன்ற பையன் தான் .. ஆமா இப்ப அனுபவிக்காமா எப்போ அனுபவிக்க போரோம்ன்னு நல்லா என்ஜாய் பன்னுன .. கொஞ்சம் ரவுடி போல தான் இருந்தேன்.. ஆனா உண்மையா நான் அப்படி இல்ல நல்ல பையன் தான் ஆனா கூடயிருந்த பசங்க எல்லாரும் என்னை ஏத்திவிட்டு ஏத்திவிட்டு நான் கொஞ்ச கொஞ்சமா தப்பான வழிக்கு போனேன்.. அப்போதான் எனக்கு உங்க அம்மா மேல ஈர்ப்பு வந்தது.. நான் அவள காதலிச்சதும் கூட என்கூடயிருந்த பசங்களால தான் அவங்க பன்ன ஒரே நல்லவிஷயம் அதுமட்டும் தான் எனக்கு தெரிஞ்சு.. அவ என்னோட வாழ்க்கையில வந்த அப்பரம் என்னோட திசை மாறிபோன வாழ்க்கை நல்லபடியா அமைந்தது.. இப்போ உனக்கு ஹீரோவா நான்யிருக்கன்னா அதுக்கு கௌரி என் வாழ்க்கையில்ல வந்தது தான் காரணம்...

இப்போ நீ காலேஜ் போர உனக்கும் இது எல்லாம் நடக்கும்.. அதுல எல்லாம் எப்படி சமாலிக்கனும்ன்னு உனக்கு நல்லா தெரியும் இருந்தாலும் உன்னோட நண்பனா நான் எப்பவும் உன்கூடவே இருப்பேன்.. காலேஜ் வாழ்க்கை ஒரு சொர்க்கம்.. அதை நீ முழுசா அனுபவி.. சந்தோசமாயிரு.. ஏன்னா இது போயிட்டா திரும்ப உனக்கு கிடைக்காது நான் சொன்னது புரிஞ்சதா..

ம்... உங்களோட நட்பு எப்பவும் எனக்கு சிறந்த வழிகாட்டியா இருக்கர வரைக்கும் நான் தப்பு பன்னமாட்டேன்ப்பா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.