(Reading time: 15 - 29 minutes)

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ராகுல் அவளுக்கு காப்பி கொண்டுவந்து கொடுத்தான்.. வேரயாரும்யில்லைங்க மனுவோட செல்ல நாய்குட்டி தான் ராகுல்... ராகுல் மனுமேல ரொம்ப பாசம்... மனுவுக்கு மட்டும் தான் இப்படி ஸ்பெஷல் கவனிப்பு எல்லாம்..

ராகுல் கொண்டு வந்த காப்பியை வாங்கி அவனுக்கு சில முத்தங்களை வழங்கனாள்..

ஆமா இந்த வீட்டுல்ல இருக்கரவங்க பத்தாதுன்னு இவன்வேர... சீக்கரம் மனு போய் கிளம்பு..

ஆமா.. ஆமா.. நான் போய் குளிக்கர என எழுந்து குளியல் அரைக்குள் ஓடினாள்..

அவள் குளித்து வருவதற்க்குள் அவளுக்கு தேவையான காலேஜ் பையை எடுத்து வைத்தாள்..

குளித்து வந்தவள் வேகமாக கிளம்பி கீழே சென்றாள்..

நேராக வந்தவள் டைனிங் டேபிள்ளில் உட்காந்து கொண்டு மிசஸ்.கேகே சீக்கரம் சோறு போடுங்க... சோறு போடுங்க.. சோறு.. சோறு... என கத்தியவளின் காதை திருகினார் கண்ணன்..

ஆ....மிஸ்டர்.கேகே வழிக்குதுவிடுங்க என சிணுங்கினாள்..

காலையில்ல ஏ இப்படி கத்தி என்னோட செல்லத்த தொந்தரவு பன்னர..

போதும் போதும் நீங்க எனக்கு வக்காளத்து வாங்கினது.. இப்போ பேசமா சாப்பிடுங்க ரொண்டு பேரும்..

மிசஸ்.கேகே நீங்க இப்படி எல்லாம் பேசுனா எப்படி...

அடிபடுவ எத்தன தடவை சொல்லரது இப்படி கூப்பிடாதன்னு கேக்கவேமாட்டியா..

நான் என்ன தப்பா சொன்னேன் உங்க ரெண்டு பேரோட பேர் கண்ணன்,கமலா அதை தான் நான் கேகே-ன்னு மாத்துன உங்கள மிசஸ் அப்பாவ மிஸ்டர்

மிசஸ்.கேகே.... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்......

மனுவின் காதை திருகிக்கொண்டே வாலு.... என்றார் கமலா...

அம்மா வழிக்குது.... விடும்மா என வழிக்காத காதுக்காக அழுகாச்சி நாடகம் நடத்தினாள

மிஸ்டர்.கேகே சொல்லுங்க.... எனக்கு வழிக்குது... என அப்பாவை துணைக்கு அழைத்தாள்

விடும்மா.. அவளுக்கு வழிக்க போகுது..

நீங்க சும்மாயிருங்க.... இவளுக்கு ரொம்ப செல்லம் அதிகமாகிருச்சு....

கமலா செல்லம்.. மிஸ்டர் அன் மிசஸ்.கேகே எவ்ளோ நல்லாயிருக்கு.. விடேன்..

போச்சு.... அப்பா அம்மாவ இப்படி கவுத்துட்டீங்களே.... கவுத்துட்டீங்களே.....

சும்மாயிரு காவி.... என தன் வெட்கத்தை மறைக்க முயன்றார் கமலா

எவ்வளவு வயசு ஆனாலும் இந்த காதலுக்கு மட்டும் வயசும்யில்லை,தடையும்யில்லை.... எந்த வயசானாலும் காதல் எப்பவும் தனி அழகு தான்... மனுக்கு இவங்க காதல் ரொம்ப பிடிக்கும்... அதை அவ எப்பவும் ரசிக்கர ஒன்னு... அதனாயே இவ இவங்களுக்கு வச்ச செல்லபேர் தான் மிஸ்டர் அன் மிசஸ்.கேகே....

மிஸ்டர் அன் மிசஸ்.கேகே உங்க காதல் ரொம்ப அழகா இருக்கு.... என ஆழமாக கூறினாள்...

போடி... எல்லா உங்களால தான் பசங்க இருக்காங்கன்னு நினைப்புயிருக்கா...

கமலா.. நம்ம காதல் நம்ம பசங்க கெட்டுபோகவிடாது.... அது மட்டும் இல்ல என் பொண்டாட்டிய நான் கொஞ்சரேன்... என்ன யாரு கேட்பா... என தன் மனையாளை பார்த்து கண்ணடித்தார்....

கரேக்ட் மிஸ்டர்.கேகே... எனக்கு உங்க போலத்தான் மாப்பிள்ளை வேணும்... என்மேல எப்பவும் ரொம்ப காதல் வைக்கணும்.... என்ன பத்திரமா பாத்துகணும்... அப்பரம்...

போதும்.. போதும்... காலேஜ் போக வேண்டாமா..... சீக்கரம் என அமைதியாக்கினார்-கமலா

மனுகுட்டி எதாவது உன் மனசுல இருக்காடா.. என பொறுப்பான அப்பாவாக கேட்டார்..

ப்பா.... எனக்கு தெரியும் என்னோட கடமை,பொறுப்பு எல்லாம் இருக்கு... எனக்கு இப்போ படிக்கனும்... என் வாழ்க்கைய சந்தோஷமா வாழணும்... நிறைய ஆசை இருக்கு அதை எல்லாம் நிறைவேத்தனும்.. அப்பரம் தான் கல்யாணம்... மத்தது எல்லாம்...

அப்பரம் கல்யாணம் சரி... காதல்....

ப்பா.... அது எல்லாம் தனிபட்ட விஷயம்...

அப்போ இருக்குன்னு சொல்லர...

காதல் தப்பா ப்பா..

சரியில்லாத காதல் தப்புடா...

ஆனா எனக்கு உன்மேல ரொம்ப நம்பிக்கையிருக்குடா...

ம்....... ரொம்ப தேங்க்யூ மிஸ்டர்.கேகே என அப்பாவை அணைத்துக்கொண்டாள்...

அப்பாவும்,பொன்னும் கொஞ்சுனது போதும் இப்போ கிளம்பலாம்... காவியா சொல்லவும் தான் இருவரும் நேரத்தை உணர்ந்தனர்..

டைம் ஆச்சு சீக்கிம் கிளம்புங்க.... மனுகுட்டி ஸ்கூட்டி எடுத்துட்டு போடா....

ஸ்கூட்டியா.... இது எப்போ வாங்குனது மிஸ்டர்.கேகே என அவள் வானத்துக்கும்,பூமிக்கும் குதித்தாள்.. ஐய்யா..... ஜாலி.. ஜாலி...

அவள் குதிப்பதையே சிறு புன்னகையோடு பார்த்தனர் மிஸ்டர் அன் மிசஸ்.கேகே..

இன்னும் எப்படி குதிக்கராபாருங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.