(Reading time: 15 - 29 minutes)

எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்குடா.. போ.. போயி கிளம்பு காலேஜ் முதல்நாள் இல்லியா சந்தோஷமா கிளம்பு..

சரிப்பா என அபி கிளம்ப சென்றுவிட்டான்..

கோகுல இல்லம்.......

 பூஜை அறையில் இருந்து பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார் கமலா..

நேராக சமையல் அறைக்கு சென்று மணக்க மணக்க காப்பி போட்டுக்கொண்டு வந்தார்.. தோட்டத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டுயிருந்த தன் கணவன் கண்ணனுக்காக எடுத்து வந்தார்..

ஏங்க காப்பி..

அதை வாங்கி அருந்தியவர்.. கமலா உன்னோட காப்பி மாதிரி உலகத்துல யாராலும் காப்பி போட முடியாதும்மா..

அது சரி தினமும் இதுதான் சொல்லரீங்க..

அப்படியா சரி இப்போ வேற சொல்லரேன்.. நீ ரொம்ப அழகா இருக்க கமலா என அவர் காதலோடு கூறவே வெட்கத்தில் மலர்ந்து போனார் அவர்..

என்ன தான் வீட்டுல்ல பார்த்து கல்யாணம் பன்னியிருந்தாலும் அவங்களுக்குள்ள இருக்கர அந்த காதல் அவ்வளவு அழகானது.. கூடவே ஆழமானதும் தான்..

உன்னோட இந்த வெட்கமும் ரொம்ப அழகாயிருக்கு செல்லம்..

போதும்... போதும்... நமக்கு ஒன்னும் நேத்து தான் கல்யாணம் ஆகலை.. ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க ஞாபகம் இருக்கு தானே..

எப்படி மறப்பேன் செல்லம்.. அவங்க நம்ம காதலோட அடையாளம் ஆச்சே.. அதுவும் என்னோட மனுகுட்டி நம்ம காதலின் தேவதை ஆச்சே.. அப்பரம் என அவர் கூறும்போதே.. அவரை இருகரம் வந்து அணைத்தது..

அப்போ நான்..

அவர் புன்னகைத்துக்கொண்டே நீ எங்க அன்போட அடையாளம்டாம்மா.. என அவரின் இரண்டாவது பொண் காவியாவை செல்லம் கொஞ்சினார்..

என்னடா கிளம்பிட்டீயா ஸ்கூல் போக.. நான் ரெடி தான் ப்பா.. ஆனா உங்க மனுகுட்டி தான் இன்னும் கட்டிலவிட்டே இறங்கல இன்னைக்கு காலேஜ் முதல் நாள்..

அச்சோ அவளை என்னதான் பன்னரது இன்னும் குழந்தையாவே இருக்கரா..

பின்ன எல்லாரும் சேர்ந்து இப்படி செல்லம் கொடுத்தா வேற எப்படி இருப்பா...

இங்க பாருங்க இவ அவளுக்கு தங்கையா இல்ல அவ இவளுக்கு தங்கையான்னு தெரியல்ல...

சரிவிடு செல்லம் நம்ம வீட்டுள்ள இருக்கரவரைக்கும் தானே...

நீ போ காவி மனுவை எழுப்பி கிளம்ப வை...

ம்.. சரிம்மா என மாடி நோக்கி சென்றாள் காவியா..

காலை சூரியன் சுள் என சுட்டேரிக்க.. 8.30 மணிக்கும் இழுத்து போர்த்தி உறங்கிக்கொண்டு இருந்தாள்.. கோகுல இல்லத்தின் இளவரசி மணிகர்னிகா...

மனு என்று அழைக்கப்படும் மணிகர்னிகா.. கமலா,கண்ணன் தம்பதியின் முதல் புதல்வி.. முதல் பொண்ணுங்கரதால தன்னோட காதலின் முதல்அடையாளமான மனுவை ரொம்ப அதிகமா நேசிக்கரதுல்ல தப்பில்லையே... என்ன தான் தேவைக்கு அதிகமா பணம் இருந்தாலும் அதை தேவைக்கு அதிகமா பயன்படுத்தமாட்டாள்.. உயிர்யில்லா காகிதத்தை விட உயிர் உள்ள மனுஷங்களை அதிகமா நேசிக்கர பொண்ணு.. வீட்டுக்கு ரொம்ப செல்லம் அதனால சேட்டை கேக்கவே வேண்டாம்.. வால் இல்லைங்கர குறைமட்டும் தான் மத்தபடி சகலமும் உண்டு... அதே நேரம் தன்னோட கவளையை அவள் யாருகிட்டையும் பகிர்ந்துக்கமாட்டாள்.. அவமணசுல என்ன இருக்குன்னு சொல்லரது அவ்வளவு சுலபம்யில்லை.. அவளுக்கு நட்புவட்டம் எப்பவும் பெருசு..இப்போ ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போகபோரா...

மனு... எழுந்திரு எழும்பு மனு காலேஜ் போகனும்... என காவியா அவள் போர்வையை இழுத்தாள்..

எனக்கு தூக்கம் வருது காவி... இன்னும் கொஞ்சநேரம் மட்டும் என மீண்டும் போர்வையை தேடினாள்..

மனு மணி 8.30 ஆச்சு எழும்புடி.... முதல்நாளே காலேஜ் லேட்டா போனா விளங்கிரும்.. எழுந்து போ...

அச்சோ மணி 8.30-ஆ என சடானா எழுந்து அமர்ந்தாள்..

ஏன் மனு எப்படியும் காலேஜ் தொடங்க நேரம் ஆகும்.. அதுவும் இன்னைக்கு முதல் நாள் எப்டியும் லேட் தான் ஆகும்..

இப்போ காலங்காத்தால எதுக்கு இந்த மொக்கை..

அது இல்ல மனு உனக்கும் சீக்கரமா போரதுக்கும் சத்தியமா சம்மந்தம்யில்லை.. அப்படியிருக்கர நீ எதுக்கு சீக்கரம் போகனும்ன்னு நினைக்கர...

ம்... உன்னோட மாமா யாருன்னு தேடவேண்டாம்மா.. அதான் சீக்கரமா போரேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.