Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

இப்படியாக தீபாவளி பலகாரங்கள் கடையில் வாங்கி சிறை வைத்து கரண்-புவன் தயாரிப்பாக வெளிவந்தன.

தீபாவளி அன்று காலையில் எழுந்ததும் குளித்து… புது உடை உடுத்து… பளிச்சென்று நால்வரும் தயாராகினர்.

பெரிய குத்து விளக்கை சாருவும் சதாவும் ஏற்ற, இரண்டு பக்கமும் இலைகள் போடப்பட்டு பட்சணங்கள் குவிக்கப்பட்டு போட்டி ஆரம்பித்தது. அந்த ஜட்ஜ்….!

“ஜட்ஜு இல்லை. ஜட்ஜுக்கள். அதோ வந்திட்டாங்க” என்று கரண் கையை சுட்டிக் காட்ட, அங்கே விஸ்வநாதன், மதிமாறன், பானுமதி . ரகுமாமா அனைவரும் நின்றனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஹாப்பி தீபாவளி!

“வாங்க… வாங்க உள்ளே வாங்க” என்று புவன் வரவேற்க, அத்தை சதாவை ஒரு மாதிரியாக பார்க்க, அவளும் “வாங்க அத்தை” என்றாள்.

“ம்…” என்றபடி உள்ளே வந்தார்.

“இப்போதான் பூஜை செய்ய தயார் செய்தோம்” கரண் கூறினான். “அம்மா வரலையாப்பா?”

“இல்லைப்பா?” என்று சொன்ன மதிமாறன், “நாம செலிபரேட் பண்ணலாம்” என்று முடித்தார்.

பூஜை முடித்து… போட்டி பற்றி குறிப்பு தந்தனர். சமையல் போட்டி நிகழ்ச்சிகளில் வருவதுபோல யார் எதை செய்த்து என்று சஸ்பென்ஸ் வைத்து ரிசல்டிற்காக காத்திருந்தனர்.

டுடடங்…டுடடங்… டுடடங்..!  இதுதாங்க முக்கிய செய்தியின் இசையின் வரிவடிவம்! (எத்தனையோ முறை ராத்திரி தூக்கம் கலைத்து நம்மை எழுப்பிய இசையை நினைவில் கொள்ளுங்கள்)

ரிசல்ட் வந்துடுச்சு! மெல்டிங் அதிரஸ் குக்கிதான் முதல் பரிசை வென்றது.

“கியேட்டிவா… நம்மூர் மூலப்பொருட்கள் சேர்த்து செய்து… வெளியே க்ரிஸ்பியாக… உள்ளே மெதுக் மெதுக் என்று… தி பெஸ்ட்!” என்று விஸ்வநாதன் சொன்னார்.

“உள்ளேயிருந்த கண்டெண்ட் மாவிலக்கு மாதிரி இருந்துச்சு. எனக்கு நம்ம கோயில் திருவிழா நினைவு வந்துடுச்சு” மதிமாறன் சொன்னார்.

வீ வொன்…! கரண் வெற்றி சிரிப்பு சிரித்தான். புவனால் நம்பவே முடியவில்லை.  யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்தபோதுகூட இவ்வளவு உவகை கொள்ளவில்லை! மானம் காத்த மச்சான்!

அப்புறம் என்ன… முயல் தோற்று ஆமை ஜெயித்த மேலாண்மை தத்துவம் இங்கேயும் வென்றது.

சதாவும் சாருவும் எப்படி தோல்வியுற்றோம் எண்று அதிர்ச்சியடைந்தனர். அது  குரு பெயர்ச்சி சாதகமாக இல்லையெனில்  செய்யும் சமையல் சிறக்காது.” என்று அத்தை சமாளித்தார்.

“உன் அண்ணி ஜாதகத்தில் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது” மதிமாறன் அலுத்துக் கொண்டார். அவர் மனைவி பூரணியின் சமையல் வடக்கத்தி முறையில் இருக்கும்.

மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் எனில் ஓட்டு வித்தியாசம் சாதகமாக வரும் அல்லவா? ஜெயித்த டீமிற்கு சாதகமாக பேசுவது நடுவர்களின் சமாளிப்பு திறன் சார்ந்த்து. அதைத்தான் விஸ்வாவும் மதியும் செய்தனர்.

சிரிப்பும் களிப்புமாக அந்த நாள் கழிந்தபோது, மீண்டும் கரண் கேட்டான்.

“அம்மாவிற்கு இன்னும் கோபம் தீரவில்லையா?’ என்று,

“அப்படித்தானேடா இருக்கும்.  ஒரு பேரக் குழந்தை பெற்று கொடுத்தால் சரியாகி விடுவாள்” என்று சொல்ல, சாரு குலுங்கி அழுதபடி அவ்விடம் விட்டு தன்னறைக்குள் சென்று விட்டாள்.

“என்னாச்சு?” என்று அனைவரும் முழிக்க, “சாரு” என்று அழைத்தபடி கரண் அவளை தொடர்ந்து ஓடினான்.

ஏன்? ப்ச் அதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்… நல்ல நாளும் அதுவுமாக சோகத்தை சொல்லி வைக்க வேண்டாம்.

டியர் ரீடர்ஸ்,

தீபாவளி இருள் அகற்றி வெளிச்சம் தர வந்து விட்டது. நல்ல விஷயங்கள் நடக்க இல்லத்தில் விளக்கின் ஒளி வீசட்டும்.  நல்ல எண்ணங்கள் மலர உள்ளத்தில் மகிழ்ச்சியின் ஒளி பரவட்டும். இனிய செய்திகள் கிடைக்க இனிப்பை சாப்பிட்டு இறைவனிடம் விஷ் மேக்கிங் செய்யுங்கள். விரைவிலேயே அவை பலிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 

அன்புடன்

சாகம்பரி 

Episode # 09

Episode # 11

தொடரும்

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-11-10 22:40
Super Deepavali :clap: :lol: Karan innovative athirasam maathiriyana onnu jeyitha mathiritha innaikku nadakkura cookery show results varutho :Q: athu ennava iruntha namakkenna... Deepavali super :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-11-08 11:45
கலகலப்பா தீபாவளி போச்சு.... :clap: :clap:
அந்த ஜாம்மின்ரி பாக்ஸ்க்கும் சதாவுக்கும் இணைப்பு இருக்குமோ.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்saaru 2018-11-07 20:31
Ha ha Semma sagambari
Judges sarilapa
Yanaipal kulicha kurukuvali yopipaainga pola Karan pada Aluya nee
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2018-11-07 13:23
Wowwwwwww (y) Sooper update.... Diwali sweets lam Sooper :clap:.... Andha geometry box Sadha kuduthatha irukkumo :Q:... Wait pannuvom... facepalm.... Thanku mam for the nice and hilarious update.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்SAJU 2018-11-07 12:04
WOWWWWWW SUPERRRRRRRR
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-11-06 21:23
Nice cute ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்AdharvJo 2018-11-06 20:34
Guys don't u know nogamal nombu kumbiduvadhu :grin: anyway adhirasam murukku ellam.oil.bath eduthadhil arogathyuokku naladhey illai :no: :D Deepawali andru Vali ah?? so no senti & mentals :P that was hilarious update and of course unga Diwali treat yummy yummy :dance: :clap: :clap: Sri Etta edathil karnan ah :o
enjoyed reading every scene.
geometry box ragasiyathukk pinadi sadha irupangalo nah no filmy imagination 😂 but Ena drama plan panuraru Mr buvan? Oru flower accident ala oru action scene-a miss panitome ms sagampari :lol: thank you for such an entertaining update. Keep rocking.

Wish you happy and prosperous Diwali.
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 19 Feb 2019 19:13
கண்மூடி உறங்கும் புவனை பார்த்தபடி மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்த சதாக்ஷிக்கும் உறக்கம் வர ஆரம்பித்தது. உறக்கம் போலொரு தொற்று வியாதி உண்டா என்ன?

கண்களை நித்திரா தேவி தழுவிக் கொண்ட கடைசி நொடியில் சதாவிற்கு திடுமென ஒரு நினைவு வந்தது. அவளுடை காதல் கணவன் புவன் துயில் கொள்ளும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த நினைவு வந்த்து.

அவளுடைய குட்டி கிருஷ்ணர் போலவே இவனும் இருக்கிறானே. சிறு வயதில் அவளிடம் ஒரு கிருஷ்ணர் சிலை இருந்தது. மதுராவில் இருந்து அப்பா வாங்கி வந்தது. குழலூதும் கண்ணன் ஒற்றை காலை மடித்து நின்று கள்ள சிரிப்பு சிரிக்கும் நிலை!

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 12 Feb 2019 20:50
ஆயுஸ் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டாலும் இன்னும் கண்விழிக்கவில்லை. அதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறியிருந்தார். மிகவும் சிக்கலான சிகிச்சை என்பதால் இதற்கென மருத்துவ குழு அமைக்கப்பட்டது. க்ளௌட் இணைப்பின் மூலம் வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் புவன் அங்கிருப்பது நல்லது என்று நினைத்தான். அவனுக்கும் சில வெளி நாட்டு மருத்துவர்களை தெரியும். அவர்களிடமும் ஆலோசனை பெற முடியும் என்று எண்ணினான்.

*******************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 06 Feb 2019 06:24
புவன் தேடலுடன்….தொலைதூரத்தில் மரங்களுக்கிடையே தெரிந்த வெளிச்ச குகையை நோக்கி அடியெடுத்து வைத்தான்… திடீரென்று பெரும் சப்தத்துடன் ஒரு புகைவண்டி புகையை கக்கிக் கொண்டு காலதேசவர்தமானங்களை கடந்து வருவதுபோல அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது…

உண்மையில் அது அவனை நோக்கித்தான் வருகிறதா..?

அதன் பாதையில் அவன் நிற்கிறானா?

இல்லை…. அவன் சற்று உயரமான இடத்தில் நின்று கொண்டிருந்தான். நிம்மதியுடன் திரும்பினால்… கோபக்கனல் தெறிக்க சதா நின்றாள்…

**********************

படிக்கத் தவறாதீர்கள்!!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-23
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 30 Jan 2019 03:19
தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தபோதுதான் புவன் அதனை கவனித்தான். அந்த தங்கவண்ண ரோஜா பூத்திருந்தது. சதா ஆசையாக நட்டு வைத்த செடி… இன்று பூத்திருந்தது.

ஒவ்வொருவரும் இப்படித்தான் மனதிற்குள் அழகிய கனவுகளை விதைத்து காத்திருக்கிருக்கின்றனர். அது முளை விட்டு கிளைத்து எழுந்து பூத்து குலுங்கும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஏனோ தெரியவில்லை சில செடிகள் மட்டுமே காலத்தின் கட்டளைக்கு ஏற்ப புவியீர்ப்பு விசையை எதிர்த்து எழுந்து பூத்து குலுங்குகின்றன. சில மண்ணிற்குள்ளேயே புதைந்து போகின்றன.

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 23 Jan 2019 06:45
கரணை இழுத்துக் கொண்டு புவனின் அறையை விட்டு வெளியே வந்த ஆயுஷ், நேராக ஹாலிற்கு சென்று சோபாவில் அமர்ந்தான்.

“உஸ்…. அப்பாடி… புவன் சார் மரண பயத்தை காட்டிட்டார்… அம்புட்டுதான்… இத்தோட நான் க்ளோஸ்னு நினைச்சேன்” என்று சொல்ல,

“ம்… ஆனால் அவனே எண்ட்ல ஸ்டாப் ஆயிட்டான். ஒருவேளை நம்மை பயமுறுத்த இதை செய்திருப்பானோ… “

“இனிமே நாம் அவர் வழிக்கு போகவே கூடாது. கூடவே இருந்து எல்லாம் தெரிஞ்சிகிட்டு நம்மை கவுத்திட்டார்”

“என்ன ஆயுஷ்… பயந்துட்டியா?”

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-21

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top