Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

“ராஸ்கல்… இனி ஒரு வார்த்தை பேசினாலும் பல்லைதட்டி கையில் கொடுத்து விடுவேன். உன் லட்சணம் தெரிந்துதானே உன்னை விட்டு விலகினேன். ஏமாற்று வேலை செய்ய பார்த்தது நீ… ரொம்பவும் நல்லவன்போல பேசுகிறாயாக்கும்” அவனிடம் பேசிக் கொண்டே சுற்றுபுறத்தையும் அளவிட்டாள்.  ஆள் அரவமற்ற மலைப்பாதை… அவளுக்கு எச்சரிக்கை தந்தது.

அவள் எதிர்பார்த்ததுபோலவே வைபவ் ஒரு வேகத்துடன் அவள் அருகில் வர எத்தனிக்க, அவள் வேகமாக பின்னடைந்தாள். இயல்பாகவே அவளுடைய கைமுஷ்டி இறுகியது. கால்களை ஒரு ஸ்டெப் முன்னும் பின்னும் வைத்து உறுதியுடன்  நிமிர்ந்தாள். அவள் கற்று வைத்திருந்த தற்காப்புக் கலை அனிச்சையாக உடல்மொழியில் வெளிப்பட்டது.

அவள் நின்ற விதம் வைபவிற்கு எச்சரிக்கை செய்தது. புலி பாயும்முன் இப்படித்தான் நிற்கும்!. ஒரு அடி பின்வாங்கினான். அவளுக்கு பின் பார்த்தவாறே…

“புவன்…. நீ எப்படி இங்கே? சதாவை தேடி வந்தாயா?” என்றான்

ஆமாம், அவளைக் காணாமல் தேடி ஓடி வரும் நிலையில்தான் அவள் கணவனும் இருக்கிறான். எல்லாம்  நாடகமாகி விட்டது!. இல்லை…. இல்லை… இந்த வைபவ் அவள் கவனத்தை திசைதிருப்பப் பார்க்கிறான். அவள் திரும்பி பார்க்கவேயில்லை!

“இப்போது என்ன சொல்லி விட்டேன் என்று கோபப்படுகிறாய்? பழசை மறந்துவிட்டு புவனுடன் சந்தோசமாக இரு என்றுதானே சொன்னேன்… பாரப்பா உன் மனைவிக்கு என் மீது எவ்வளவு கோபம் என்று…” என்று வைபவ் இயல்பாக பேசினான். இன்னும் நடித்து அவளை ஏமாற்றப் பார்க்கிறானா?

“ஆங்… உன்னிடம் அறிவுரை கேட்கத்தான் காத்துகிட்டு இருந்தேன் வைபவ்… நல்லவேளையாக சொல்லிவிட்டாய். இல்லையெனில் நான் உன் மீது காதலாகி கசிந்துருகி இப்படியே இருந்திருப்பேன். ரொம்ப நன்றிப்பா… இனிமே நான் புவன்கிட்டே  நல்லபடியா வாழப்பார்க்கிறேன்…” என்று கோபமாக கூறிக் கொண்டே திரும்பியவள் எதன்மீதோ… இல்லை… எவன்மீதோ மோதினாள். நிமிர்ந்து பார்த்தால்,

புவன்!

அவளுக்கு திடுக்கிட்டது! இவன் எப்போது வந்தான்…. வைபவ் உண்மையைத்தான் சொன்னானா? திரும்பி வைபவை பார்த்தால் அவன் திரும்பி அந்த பக்கமாக நடந்துபோய் கொண்டிருந்தான். மறுபடியும் புவனை பார்த்தால் அவனும் வந்த பாதையில் திரும்பி நடந்துபோய் கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் நிதானித்தாள். இதென்ன அந்த வைபவ் எருமை ட்விஸ்ட் பண்ணிட்டானே? இந்த முன்கோப முசுடு என்ன நினைத்தானோ..? அவளை விட்டு விட்டு போய்க் கொண்டிருக்கிறான்!. சுற்றிலும் ஆளரவமற்ற தனிமை பயமுறுத்த… புவனுடன் ஓடிப்போய் சேர்ந்து கொண்டாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் விரைவாக நடந்து கொண்டிருந்தான். அவனுடைய விரைவான நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக தொடர்ந்தாள். வீட்டிற்குள் வந்தபின் அவன் தன் அறைக்குள் சென்றுவிட, சோபாவில் அமர்ந்தவள் ஓடிவந்த களைப்பில் மூச்சு வாங்கினாள்.

இவன் என்ன  நினைத்துக் கொண்டான் என்றே தெரியவில்லையே? சும்மாவே பேய் ஆடும் புவனை…  புளியம் விளாறை வைத்து ஓட்டி அந்த வைபவ் ஆட்டமாக ஆட வைத்து விட்டானே!.

சற்று  நேரம் அங்கேயே காத்திருந்தாள். புவன் அவளிடம் விளக்கம் கேட்கலாம் அல்லவா? பசிக்க வேறு செய்தது… அவன் சாப்பிட வருவானா? நிராசையுடன் அறைக் கதவை பார்த்துக் கொண்டிருந்தாள்.  நேரமாகியும் கதவு திறக்கவேயில்லை.

‘இதென்ன துவாபர யுகமா… சுவாமி நீங்கள் உணவருந்திய பின்தான் நான் உண்பேன் என்று காத்திருப்பதற்கு…’, ஏமாற்றமும் கோபமுமாக எழுந்து சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

கேசரால் மூடியை திறந்த உடனேயே வத்தகுழம்பின் வாசம் அங்கு பரவியது. இந்த குளிருக்கு வத்தகுழம்பின் மணமும் காரமும் இதமாக இருந்தது. அத்துடன் சிம்பிளாக முட்டை பொரியல். செம பசி… தட்டில் எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். 

அப்போது அங்கு வந்த புவன் அவளை முறைத்தபடி தட்டை எடுத்து வைத்து சாதம்,குழம்பு, பொரியலை போட்டுக் கொண்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அதாவது டைனிங் டேபிளின் மறுகோடியில்…

சத்யஜித்ரே படத்தில் கதாநாயகனும் நாயகியும்  இப்படித்தான் மௌனமாக தொலைவில் அமர்ந்து இருப்பார்கள். சும்மாவே இங்கு என்ன நடக்கறது என்று விளங்காது… இதில் அவார்ட் மூவி ரேஞ்ஜிற்கு அலப்பறை வேறு…  சதாவிற்கு கடுப்பாக வந்தது.

‘நீயும் பேச வேண்டாம் நானும் பேச வேண்டாம்’ என்று தலையை குனிந்து கொண்டு உண்ண ஆரம்பித்தாள். அதையே அவனும் கடைபிடித்து நடந்தான்.

மறுநாள் காலையிலும் இதே நாடகம்தான்! புவன் கிளம்பி அலுவலகம் சென்று விட்டான். என்ன ஒரு திமிர்… ஒரு வார்த்தைகூட அவளிடம் பேசவில்லை… பொறாமை பிசாசு! அவள் பொருமினாள்.

வெயிட்… வெயிட்… எதற்கு பொறாமைப்பட வேண்டும்? அவளை விரும்பி கல்யாணம் செய்து கொண்டதுபோல இந்த ஆட்டியூட் எதற்கு? அவள் ஒரு பழி போட்டு கோடு போட்டாள். அவன் அந்த கோட்டை வளைந்து ‘யூ’ டர்ன் போட்டு நிரபராதியாக காட்டிக் கொண்டான். அதுவும் அத்தையிடம் நன்மதிப்பை பெற வேண்டிதான்…

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-11-10 22:40
Super Deepavali :clap: :lol: Karan innovative athirasam maathiriyana onnu jeyitha mathiritha innaikku nadakkura cookery show results varutho :Q: athu ennava iruntha namakkenna... Deepavali super :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-11-08 11:45
கலகலப்பா தீபாவளி போச்சு.... :clap: :clap:
அந்த ஜாம்மின்ரி பாக்ஸ்க்கும் சதாவுக்கும் இணைப்பு இருக்குமோ.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்saaru 2018-11-07 20:31
Ha ha Semma sagambari
Judges sarilapa
Yanaipal kulicha kurukuvali yopipaainga pola Karan pada Aluya nee
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2018-11-07 13:23
Wowwwwwww (y) Sooper update.... Diwali sweets lam Sooper :clap:.... Andha geometry box Sadha kuduthatha irukkumo :Q:... Wait pannuvom... facepalm.... Thanku mam for the nice and hilarious update.....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்SAJU 2018-11-07 12:04
WOWWWWWW SUPERRRRRRRR
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-11-06 21:23
Nice cute ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்AdharvJo 2018-11-06 20:34
Guys don't u know nogamal nombu kumbiduvadhu :grin: anyway adhirasam murukku ellam.oil.bath eduthadhil arogathyuokku naladhey illai :no: :D Deepawali andru Vali ah?? so no senti & mentals :P that was hilarious update and of course unga Diwali treat yummy yummy :dance: :clap: :clap: Sri Etta edathil karnan ah :o
enjoyed reading every scene.
geometry box ragasiyathukk pinadi sadha irupangalo nah no filmy imagination 😂 but Ena drama plan panuraru Mr buvan? Oru flower accident ala oru action scene-a miss panitome ms sagampari :lol: thank you for such an entertaining update. Keep rocking.

Wish you happy and prosperous Diwali.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top