(Reading time: 17 - 33 minutes)

அவள் இவ்வாறுதான் கூறுவாள் என்பதை ஓரளவு அவன் எதிர்பார்த்துதான் இருந்தான். இருந்தபோதிலும் ஒவ்வொருமுறையும் அவள் தன்னை மறுக்கும் போதும் அவனுக்கு மனம் ஏனோ மிகவும் ரணவேதனையடைந்தது.

சந்தியா  கெஸ்ட்ஹவுஸின் வாசல் படியில் கால்வைத்ததும் லேசாக உறுமிக்கொண்டே அந்த கம்பீரமான டைகர் சந்தியாவிடம் முன்  வந்தது.

அச்சோ! இந்த டைகர் காவலுக்கு இருக்கும் போது எப்படி மிதுணனை உள்ளிருந்து வெளியே கொண்டுவர முடியும்? என நினைத்தவள்  அதன் கழுத்து பெல்டினை  கைகளில் பற்றி இழுத்துச்சென்று கெஸ்ட் ஹெவுசின் சைடில் இருந்த அதன் இடத்தில் கட்டிப்போட்டாள்.

பின் சந்தியா வீட்டில் காவல் இருக்கும் வாட்ச்மேன் மற்றும் அவளின் தந்தையின் அடியாட்கள் மற்றும் ஜன்னல்வழியே அவள் குடும்பத்தினர் யாரும் தன்னை கவனிக்காத வகையில் பதுங்கி பதுங்கி கெஸ்ட் ஹவுஸின் அருகில் சென்றவள் அதன் கதவை தள்ளி திறக்க முயன்றாள் ஆனால் கதவு உட்புறமாக லாக் செய்யப்பட்டு இருந்தது.

உடனே அந்த கெஸ்ட் ஹவுசின் பின்னால் இருந்த சமையல் அறையோடு பின் வாசலுக்கு வர ஒரு கதவு இருந்தது அது திறந்துள்ளதா? என்று பார்க்க பின்னாள் சென்றாள்

அந்த கதவில் கை வைக்கவும் அது திறந்திருப்பதை பார்த்து நிம்மதியடைந்தாள்.

அந்த வீட்டின் ஒவ்வொரு அடியும் அவளுக்கு தெரியும் என்பதால் விளக்கை எரியவிடாமலேயே வீட்டின் இருளுக்கு கண்கள் பழகியதும் கிடைத்த சிறு ஒளியிலேயே ஹாலில் எறிந்துகொண்டிருந்த நைட் லேம்ப் மூலம் கிடைத்த சிறு வெளிச்சத்தில்  முன்னேறினாள்.

அந்த வீட்டின் ஹாலில் அலங்கோலமாக படுத்து உறங்கிகொண்டிருன்தனர் மிதுனனுக்கு காவல் இருந்த தடியர்கள் அவர்கள் குடித்த டீயில் கலந்திருந்த தூக்க மாத்திரையுடன்  இரவு அருந்திய மதுவின் போதையும் சேர்ந்து ஜடம்போல் உணர்வின்றி கிடந்தனர்.

இருந்தும் தன்னுடைய அரவம் அவர்கள் அறியாதவகையில் உள்சென்றாள் அங்கிருந்த மூன்று அரை கதவுகளையும் திறந்து பார்த்தாள்.

எதிலும் மிதுணன் இல்லாததால் கலவரமடைந்த சத்தியா! ஒருவேளை ஸ்டோரூமில் அடைத்துவத்திருக்கிறார்களோ என்று அதனை திறந்து பார்த்தாள்.

ஜன்னல்கள் ஏதும் இல்லாத அந்த அறையில் இருட்டு அப்பிக்கிடந்தது எனவே உள்வந்து கதவை அடைத்தவள் சுவற்றை தடவி விளக்கை எரியவிட்டால்

அவளின்  கண்ணில் விழுந்த மிதுனனின் நிலை கண்டவள் நெஞ்சம்  அவனின் வேதனையில் துடித்தது.

அரை மயக்க நிலையில் உடலில் அங்காங்கே கிடைத்த அடிகளினால் ரத்தம் கன்றியநிலையில் நாள் முழுவதும் உணவின்றி தலை தொய்ந்து நாற்காலியில் கட்டிவைத்த நிலையில் இருந்தான் மிதுனன்.

பதட்டத்துடன் அவனில் அருகில் சென்றவள் மிதுனன்,,,மிதுனன்...கண் முளிச்சுபாருங்க! என்று அவனை மயக்கத்தில் இருந்து தெளியவைப்பதற்காக அவனது கன்னத்தை தட்டினாள்.

அப்பொழுது உண்டான வலியினால் ஸ்....கட்டிபோட்டு அடிக்கிற நீங்கல்லாம் சரியான பொட்டபயல்கடா என்று அவனை அடித்த அடியாட்கள் என்று நினைத்து புலம்பினான்.

அய்யோ மிதுனா மெதுவா பேசுங்க நான் சந்தியா... உங்களை இங்கிருந்து தப்பிக்க உதவ வந்திருக்கிறேன் என்று அவனின் காதுக்கருகில் சென்று மெதுவாக கூறினாள்.

சந்தியா என்ற பெயர் அவனின் உணர்வை உந்தியது எனவே நன்றாக கண்விழித்து பார்த்தவன் ஏதோ சொல்லப்பார்த்தான்.

ஸ்...முதல்ல இங்கிருந்து நீங்க தப்பிச்சு போகிற வழியை பார்போம் என்றவள், அவள் மறைத்து கொண்டுவந்த கத்தியின் மூலம் அவனை கட்டியிருந்த கயிற்றை அறுத்து எறிந்தாள் .

அவளில் செயலையும் அவளின் முகத்தில் தன்னை பார்த்து தாரைதாரையாய் வடிந்த கண்ணீரையும் கண்டவன் மனம் தனக்காக அவள் அழுகிறாள் என்றும் தன்னை தன தந்தையிடம் இருந்து காக்க துணிந்த அவளின் செயலில் தெரிந்த தனது மீதான அவளின் அன்பிற்கு முன் அவன் அடிமையாகிப் போனான்.

நேற்று காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் ஒரே மாதிரி நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே கட்டிபோடப் போடபட்டிருந்ததால் எழுந்ததும் நிற்க முடியாமல் தடுமாரியவனை அணைத்து பிடித்து நிறுத்தினாள் சந்தியா.

அந்த நேரம் அவள் அவனை அணைத்ததில் ஒரு தாய் தன் சேயை அனைத்து பிடிக்கும் வாஞ்சையை உணர்ந்தான் மிதுணன்.

அவன், அவளின் செயலில் புதிதாய் ஒருநிமிடம் முன் உணர்ந்த அவளின் அன்பினால் விழைந்த உணர்வின் உரிமையால், அவளின் அணைப்பை அவன் ஏற்று நின்றதுடன் அவனின் கரமும் அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தது.

அவ்வாறு அணைக்கையில் அவனின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் எரிச்சலையும் வலியையும் கொடுத்தது. ஆனால் அதுவும் சுகமாகவே அவனுக்கு பட்டது .

ஒருநிமிடத்திலேயே தன்னை நிலைபடுத்திக் கொண்டவன் நிமிர்ந்து நின்றான். பின் அவளிடம் தாங்க்ஸ் சந்தியா  என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.