(Reading time: 17 - 33 minutes)

அப்போ உன்னை பார்க்க ஏஞ்சல் போல இருக்கணும். இதை என்னிடம் போட்டு காண்பி ! நாளை பங்க்சனுக்கான  உன்னுடைய புல்மேக்கபுக்கும் ஒரு டிரையல் பார்த்திடனும் .

என்றபடி கட்டிலின் மேல் அவன் கையில் இருந்த அனைத்து பிக் ஷாப்பர்களையும் வைத்தவன், ஒன்றைமட்டும் கையில் எடுத்து இதை மட்டும் போட்டுட்டு வா என்று அவளிடம் கொடுத்தான்.

அவன் சொன்ன செய்தி யாழிசையை அச்சமூட்டியது.  எனினும் அவனிடம் தனது முகத்தில் தெரிந்த அச்சத்திற்கு மாறாக உதடுகளை கப்பல்போல் சிரித்தபடி வைத்து  இதோ இப்போவே  என்றவள் அந்த சேரியை உடுத்திக்கொள்ள பாத்ரூமினுள் சென்றாள் .

சிகப்பில் கோல்டன் நிறமுடைய பார்டர் வைத்து, அதுபோலவே டிசைனர் பிளவுஸ் அவளுக்கு அளவெடுத்ததுபோல் இருந்தது.

ஆனால் அதன் அழகு மற்றும் டிசைனில் எல்லாம் யாழிசையின் கவனம் செல்லவில்லை. தான் தீரன் சொன்னதை கேட்டு நடப்பதுபோல் நடிப்பது என்பது எளிதானது கிடையாது என்பதை புரிந்துகொண்டாள்.

ஏனெனில் அவள் தீரனுக்கு இசைந்துபோவது போல் பாவலா காண்பிக்க வேண்டுமானால் நாளை நடக்கவிருக்கும் இருவருக்குமான கல்யாணத்தையும் மறுப்பில்லாமல் ஏற்றுகொள்ள வேண்டும் .

அவ்வாறு தான் ஏற்றுகொள்வதற்கு முன் அவன் கூறியதுபோல் இது அக்ரீமென்ட் கல்யாணம் தான் என்பதை அவனிடம் உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும் என்றும், பலதும் நினைத்தபடி உடை மாற்றியதால் அந்த சேரியின் அழகையோ தனித்தன்மையோ எதுவும் அவளின் கவனத்தில் படவில்லை.

அவள் உடைமாற்றிவிட்டு அந்த ரூமிற்குள் வரும் போது தீரனுடன் இன்னும் ஓருவன் இருந்தான். அவனை பார்க்கும் போதே அவன் இந்தியன் கிடையாது என்பது அவளுக்கு தெரிந்தது .

மேலும் அவன் அங்கிருந்த பெட்டின்மேல் நிறைய பிரஸ் மற்றும் மேக்கப் சாதன்களை கடை பரப்பி வைத்திருந்தான். மேலும் அவனும் பார்க்க பேசன் டிவி சேனலில் வரும் ஆண்களைப்போல் இருந்தான்.

அவனின் பெயர் ஸ்டீபன் . அவனுடைய ஹாபி மற்றும் பார்ட்டைம் ஜாப், மாடலிங் செய்பவர்களுக்கு மேக்கப் போட்டுவிடும் மேக்கப்மேனாக செயல்பட்டு வருபவன்.

ஸ்டீபன்  பார்க்க அழகை ஆராதிப்பவனாக தெரிந்தாலும், அவனின் குடும்பம் ரஷ்யாவின் விவசாய குடும்பம். அவனின் குடும்ப விவசாய நிலம் பெயர் சொல்லக்கூடிய பெரிய கார்பரேட்டர்களின் தேவைக்காக அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது.

அவ்வாறு பிடுங்க அந்த கார்பரேட் நிறுவனம் முயன்றபோது அதை எதிர்த்த அவனின் அப்பாவின் மரணம் அவனை மனதிற்குள் போராளியாக உருவெடுக்க வைத்திருந்தது .

மேலும், இம்மாமிக்கும் அவனுக்கும் இடையில் ஏற்கனவே அறிமுகமிருந்ததால் தீரனால் இங்கு நடத்தப்படும் கார்பரேட்டர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தீரனின் புறம் நிறுத்த இமாமியால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அவன்.

அவனுக்கு யாழிசையை தனது பியான்ஷி என்றுகூறி தீரன் அறிமுகப்படுத்தி வைத்தவன் அவனின் மேக்கப் திறமையை யாழிசையிடம் கூறி அவனை யாழிசைக்கும் அறிமுகபடுத்தினான்.  நாளை அவளது காஸ்ட்யூமுக்கு ஏற்ற மேக்கபிற்கான ஒத்திகையை இன்று அவளுக்கு அவன் இப்பொழுது செய்துவிடப் போவதாக கூறினான்.

யாழிசை தீரனிடம் தங்களது அக்ரீமன்ட் கல்யாணத்தை பற்றி பேசி முடிவெடுத்துவிடவேண்டும் என்று நினைத்திருந்த இந்த நேரத்தில் இன்னொருவனின் முன் அதை பேசமுடியாமல் அமைதியாகிவிட்டாள் .

அடுத்த அரைமணி நேரத்தில் பொம்மையாக நின்ற யாழிசை ஸ்டீபனின் கைவண்ணத்தில் அழகு மெழுகுச் சிலையாகி உருமாறி நின்றாள்.

ஸ்டீபன் அவளுக்கு தான் போட்டுவிட்ட மேக்கப்பில் திருப்தியாகி அவளில் அபிப்ராயத்தை கேட்பதற்காக அவளின் முகம் பார்த்தான்

ஆனால் அவள், அவளையே கண்களால் கபளீகரம் செய்துகொண்டிருந்த தீரனின் பார்வையை எதிர்நோக்கமுடியாமல் அவஸ்த்தையாய் முளித்துகொண்டிருப்பதை பார்த்தவன் சிரித்தபடி தீரனிடம் என்ஜாய் பாஸ் என்றபடி அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறியதும் இதயம் லப்டப் லப்டப் என்று துடிக்க நின்றிருந்த யாழிசையை தீரன் நெருங்க நெருங்க அவள் பின்னால் நகர்ந்துகொண்டே சென்றாள்

அதில் பொறுமை இழந்த தீரன் இருவருக்கும் இடையேயுள்ள இடைவெளியை இரண்டே எட்டில் குறைத்து ஒருகைநீட்டி அவளை தனது கை வளைவிற்குள் கொண்டுவந்தவன். வில் யூ மேரீமீ. என்று கேட்டான்.

தீரனிடம் அக்ரீமன்ட் மேரேஜ் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்த வேலையில் அவன் தன்னை பார்த்த தீவிரமான பார்வையில் கலவரம் அடைந்திருந்த யாழிசை இவனை நம்பி அக்ரீமன்ட் கல்யாணத்திற்குள் இறங்குவது சரிவருமா? என்று கேள்வியை  தொக்கி நின்றவள் அவனின் வார்த்தையில் சுதாரித்தாள்.

எனவே அவனின் கைவளைவிற்குள் நின்றவள் தனது கைகொண்டு அவளை தள்ளி நிறுத்த அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ள முயன்றபடி அவனின் கண்ணை பார்க்காமல் கீழே பார்த்தபடி அக்ரீமன்ட் மேரேஜுக்கு என்றால் சம்மதிக்கிறேன் என்று பதிலளித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.