(Reading time: 15 - 30 minutes)

முதலில் அவன் கொடுப்பதை குடிக்க மறுக்கத்தான் நினைத்தால் ஆனால் அவளுக்கு அவனிடம் இருந்து நிறைய கேள்விகளுக்கான பதில் தேவைப்பட்டது. எனவே வெடுகென்று அவன் கையில் எடுத்து நீட்டிய டம்ளரை பிடுங்கியவள் அதை குடித்து முடித்து கீழே வைத்தவள் ம்...சொல்லு என்றாள்.

இதுவரை உன்னைத்தவிர உன்னை சார்ந்த யாரையும்  என் கேமிற்குள் நான் இழுக்கவே இல்லை. ஏன் நேற்று உன் வீட்டு வாசலுக்கு வந்த இன்கம்டாக்ஸ் ஆபிசரை கூட உன் செகரட்டரியாக நான் நியமித்திருந்த என் ஆள் சென்று வாசலுடன் திருப்பிவிட்டான் .

எப்படி என்றால் நீ கொடுத்த இந்த லெட்டரால் என்று ஒரு காகிதத்தை அவளிடம் கொடுத்தான்.

அதன் சாரம்சம்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உங்களின் பார்வைக்கு.

வணக்கம் .

கனேசப்பிள்ளையின் மகளாகிய நான் என் குடும்பத்திற்குத் தெரியாமல் எனக்குப் பிடித்த என்னை விரும்பிய வெளிநாட்டு தொழில் அதிபரை என் வருங்கால கணவராக தேர்ந்தெடுத்துள்ளேன். என் வீட்டில் வேறு இனத்தவரை மருமகனாக ஏற்றுகொள்ளமட்டார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்குத் தெரியாமல் நேற்றே நான் வீட்டை விட்டு அவருடன் வெளியேறிவிட்டேன்.

எனது தற்போதைய முகவரி என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு வீட்டின் முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது .

எனக்கு அவர் அந்த வீட்டை என் பெயரில் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் என் பேரில் உள்ள இ.கோல்ட் மற்றும் ஷேர்ஸ் எல்லாம் அவரின் மூலமே எனக்கு கிடைத்தது. நான் அவருடன் வெளியூர் சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளேன். இன்னும் ஒருவாரம் கழித்துதான் நான் ஊருக்குத் திரும்புவேன். அதற்கு பிறகே என் பியான்ஷி பற்றிய செய்தியுடன் அவரின் மனைவியாக அனைவரையும் சந்திப்பேன்.

என்று அவளது கையெழுத்துடன் அச்சிடப்பட்ட காதிதம் அவள் கையில் இருந்தது.

அதை வாசித்துப்பார்த்த யாழிசை இது ஆங்கிலத்தில் உள்ளதே அதனால் இதன் விவரம் தனது தந்தைக்கு புரியாதுதானே, ஒருவேளை இந்த கடிதத்தில் உள்ளதை அவர் அந்த அதிகாரிகளிடம் கேட்டு அறிந்திருந்தால் அவரின் மனம் என்ன பாடுபடும் என்ற நினைவே அவளைக் கொன்றது.

அவளது கலங்கிய முகம் கண்ட தீரன், ஹேய்.. உன் வீட்டிற்கு போன ஆபீசர்ஸ் இந்த லெட்டரை பார்த்தபின் ஒரு பார்மாளிட்டிக்காக ஒரு டென் மினிட்ஸ் உன் வீட்டை சோதனை செய்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். டோன்ட் வொரி வேற எதுவும் பெருசா நீ வருத்தபடுவதுபோல் அங்கு நடக்கவில்லை  என்றான்.

அவனின் வார்த்தையில் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவள், இதுக்கு மேல என்ன நடக்கணும் தன் மகள் ஓடிபோய்விட்டாள் என்று அந்த லெட்டரை படித்தவன் கூறியதை, ஒரு தகப்பன் கேட்டு விட்டார். இதைவிட வேறு என்ன பெருசா வருத்தபடுற நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்றவள் சோர்ந்துவிட்டாள்.

மேலும் யோசனையுடன் என்னை இன்னைக்கு காலையில் தானே நீ இங்க கடத்திட்டுவந்த.  ஆனால் நான் நேற்றே  வீட்டைவிட்டு வந்ததாக அதில் இருந்ததே என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும், நோ பேபி. உன்னை நான் இங்கு கொண்டு வந்து இன்றுடன் டூ டேஸ் ஆகிவிட்டது. நீ மூச்சை அடக்கியிருப்பதை கவனித்தனால் அதிக நேரம் உன் நோசில் அந்த அணிசீசியா ட்ரக்கை நீ சுமல் செய்யும்படி நான் பிடித்ததால் ஓவர் டேஸ் ஆகிவிட்டது. எனவே நீ கண் விழிக்க தர்ட்டிபைவ் அவர்ஸ் ஆகிடுச்சு என்றான்.

என்னது இரண்டுநாள் ஆகிருச்சா? அய்யோ இன்னும் என்னை அய்யா கண்டுபுடித்து உன்னிடம் இருந்து மீட்டு கூப்பிட்டுபோக வரவில்லையா? என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் ரிலாக்ஸ் பேபி. நீ இதுவரை இருந்தது பாஸ்ட் லைப் ,அது எண்டு ஆகிடுச்சு .இனி அந்த லைப்பிற்குள் உன்னால் போக முடியாது. இனி நான் அமைத்துத்தரும் நியூ லைப்பில் ஹேப்பியாக நீ இருப்பதற்கு நான் ஹெல்ப் பண்ணுவேன்.

ஆனால் அதற்கு நீ நான் சொல்வதை கேட்கணும் என்றான்.

இரவு தனது அறையின் படுக்கையில் இருந்த சந்தியாவிற்கு பொட்டு தூக்கம் கூட வரவில்லை. எப்போதடா.... தனது வீட்டினை சுற்றி இருக்கும் ஆட்களின் நடமாட்டம் அடங்கும் என்று காத்திருந்தாள்.

நேற்று காலை அவள் யாழிசையை அவள் வீட்டில் விட்டுவிட்டு காலேஜ் கிளம்பும் அவசரத்தில் வேகவேகமாக உண்டுவிட்டு கைகழுவ வாஸ்பேசனருகில் சென்றவளுக்கு கை இரண்டையும் பின்னால் கட்டப்பட்டு தொய்ந்த நிலையில் தன அப்பாவின் ஆட்கள் சாம்பல்நிற சட்டையும் கருப்புநிற பேண்டும் போட்ட ஒருவனை இழுத்துக்கொண்டு தங்களது வீட்டின் பின்னால் இருந்த கெஸ்ட் ஹவுசிற்கு போவதை ஜன்னல் வழியாக பார்த்த சந்தியாவின் நெஞ்சம் பகீர் என்றது.

ஏனெனில் இன்று காலையில் அவள் தோழியுடன் காரில் ஏறும் போது வந்த மிதுணன் அந்தநிற உடையில் தான் இருந்தான். எனவே உற்று பார்த்தவளுக்கு அது மிதுனன்தானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது எனவே வேகமாக பின் வாசலுக்கு ஓடி வந்தவளின் முன், மேலும் முன்னேற முடியாமல்  முன் வந்து நின்ற அவனின் அண்ணன், எங்க போற? என்று கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.