(Reading time: 14 - 28 minutes)

றுநாள் அவள் விழிக்கும் முன்பே திவா கிளம்பியிருந்தான்.மனம் ஏனோ ஒருவித வெறுமையை உணர்ந்தது.சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தியவள் வழக்கம் போல் தயாராகி அன்னையை காணச் சென்றாள்.

வரும்போதே மகளின் முக வாட்டத்தை கவனித்தவர் மெதுவாய்,

“என்ன வெண்பா முகமே சரியில்ல என்னாச்சு..உடம்புக்கு எதுவும் பண்ணுதா?”

“ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல மா..மனசு தான் ஒருமாதிரி இருக்கு..”

“ஏன் என்னாச்சு திடீர்னு..”

“இல்லம்மா கொஞ்ச நாளாவே இப்படிதான் ஐ அம் மிஸ்ஸிங் திவா அ லாட்..நேத்துகூட மிட் நைட்க்கு மேல தான் வந்தாரு..மார்னிங் சீக்கிரமே கிளம்பிட்டாரு போல..அதான் ஒரு மாதிரி இருக்கு..”

“ம்ம் அப்படி என்ன பெரிய வேலையோ பொண்டாட்டியை விட..முறைக்காத வெண்பா சும்மா..நானும் பாத்துட்டு தானே இருக்கேன்.நீதான் திவா திவானு உருகிட்டு இருக்க அவரு அப்படி ஒண்ணும் இருக்குற மாதிரி தெரில.என்னவோ உன்னை கண்ணால பாத்தா மட்டும் கொஞ்சி கெஞ்சினு சமாளிக்குறாரு..

ஒரு நாள்ல ஒரு போன் இல்ல மெசெஜ் இல்ல..இதுல வீட்லயும் இருபத்தி நாலு மணி நேரமும் உன் மாமியார் இருக்காங்க..உங்களுக்குனு எப்போ தான் டைமோ தெரில.டைம் கிடைக்கலையா இல்ல வேணும்னே அவாய்ட் பண்றாங்களா..”

“ம்மா போதும் நிறுத்துறியா எதோ மனசு கஷ்டமாயிருக்கேனு உன்கிட்ட பொலம்பிட்டேன்.உடனே இதான் சாக்குனு ஆரம்பிச்சுருவியே..உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல..அதுவும் திவாவை சுத்தமா பிடிக்கல அதுக்காக அப்படியே நீயே அளந்து விடாத புரியுதா..

இந்த பேச்சை இத்தோட விடு.நாம எங்கேயாவது போறோமா இல்ல நா கிளம்பவா?”

“சரி சரி கத்தாத என் ப்ரெண்ட் ஒருத்தி இங்க ஒரு கோவில் பத்தி சொன்னா கொஞ்சம் டிஸ்டன்ஸ் தான் பட் இன்னைக்கு கண்டிப்பா போலாம்..”

இருந்த எரிச்சலில் வேறு எதையும் கேட்காமல் அவரோடு கிளம்பிச் சென்றாள்.பாதி வழி போன பின்னர் தான் கவனித்தவள் அது திவா செல்லும் கல்லூரிக்கான வழி என்பது புரிந்தது.

“ம்மா திவா காலேஜ் இங்க தான் இருக்கு ஒரு தடவை பாத்துட்டு போலாமா?”

“இப்போவா?”

“ம்ம் அவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த மாதிரி இருக்கும் ப்ளீஸ் ஒரு டென் மினிட்ஸ் தான்.”

“சரி கோவில் நடை சாத்திட கூடாது அதனால போய்ட்டு ரிடன் வரும்போது வரலாம்..”

“ம்ம்”,என்றவள் கோவிலுக்குச் சென்று திரும்பும் வரையுமே அமைதியாகவே வந்தாள்.அதன்பின் காலேஜ் வாசலில் இறங்கியவள் உள்ளே செல்ல எத்தனிக்க தானும் வருவதாய் கூறி சுலோச்னா உள்ளே சென்றார்.

சற்றுதூரம் நடந்து காலேஜின் மைய பகுதியை அடைந்தவர்கள் கேன்டீனிற்குச் சென்று அங்கிருந்து திவாவை அழைக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

தங்களுக்கான இருக்கை பார்த்து வெண்பா அமர சுலோச்சனா இருவருக்குமாய் குடிப்பதற்கு ஜுஸ் வாங்கி வரச் சென்றார்.

வெண்பா திவாவிற்கு அழைக்க முழு அழைப்பும் சென்று கட்டானது.மறுபடியும் அழைக்க நினைத்தவள் தற்செயலாய் மறுபுறம் திரும்ப சற்று தூரத்தில் திவா எதோ ஓர் பெண்ணோடு பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

பெண் சிறிவளாய் இருக்க மாணவியாய் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் மீண்டும் திவாவை அழைக்க அழைப்பை பார்த்தவன் அட்டெண்ட் செய்து,

“கண்ணம்மா முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்..கொஞ்ச நேரத்துல நானே கூப்டுறேன் டா..”,என்றவன் பதிலை எதிர்பாராது கட் செய்திருந்தான்.

வெண்பாவிற்கு ஒரு நொடி அப்படட்டமான அதிர்ச்சி தாக்க அப்போது தான் அவர்கள் நின்ற இடத்தை கண்டவள் அது ஒதுக்குப்புறமாய் இருப்பதை உணர்ந்தாள்.இவளிருக்கும் இடத்திலிருந்தும் கூட சட்டென யார் கண்ணுக்கும் தெரிந்துவிட மாட்டார்கள் என்றே தோன்றியது.

நிச்சயமாய் திவா மேல் சந்தேகம் என்ற ஒன்று தோன்றவில்லை எனினும் சொல்ல முடியாத ஒருவித சஞ்சலம் மனதை ஆட்கொண்டிருந்தது.

சரியாய் சுலோச்சனா இருவருக்குமான ஜுஸோடு அவளருகில் அமர பிரமை பிடித்தவளாய் எங்கேயோ வெறித்திருந்தவளின் பார்வை சென்ற திசையை கண்டவருக்கு மனதில் சிறு பொரி தட்டியிருந்தது.

அவர் காணும் நேரம் திவா அந்த பெண்ணை சற்றே தன்னோடு சாய்த்தவறு ஏதோ கூறிக் கொண்டிருக்க அந்தபெண் கண்களைத் துடைத்தவாறு அவனைவிட்டு விலகி நின்றாள்.

“இதுதான் உன் புருஷனோடா ஓவர் டைமா?”,என பட்டென கேட்டேவிட்டார்.

“ம்மா வாய் கூசாம இப்படி பேசாதம்மா..”

“ம்ம் என்னை அடக்குறது முக்கியம் இல்ல..உன் வாழ்க்கை கேள்வியாகாம இருந்தா சரி..”

அடுத்து அவள் ஏதோ பேச வருவதற்குள் அவர்களின் பக்கத்து டேபிளில் நவநாகரிகமாய் ஒரு பெண்கள் குழு வந்து அமர்ந்தனர்.

“என்ன மச்சி அந்த கிராமத்து கிளியை ஆளையே காணோம் போன க்ளாஸ்ல..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.