(Reading time: 14 - 28 minutes)

“அது என் பிரச்சனை அதைபத்தி நீ கவலைபட வேண்டாம்..நா கேட்டதுக்கு ஒத்துக்க முடியுமா முடியாதா?சே எஸ் ஆர் நோ..”

“நா உயிரோட இருக்குற வரை அது நடக்காது உங்களால ஆனத பாத்துக்கோங்க..”,என்றவள் விறுவிறுவென சென்றுவிட திவா யாருடனோ மொபைலில் பேசுவது காதில் விழுந்தது.

“நா நல்லவிதமா சொல்லி பாத்துட்டேன் அவ காதுல வாங்கிகுற மாதிரி தெரில..இதுக்கு மேல நீங்க என்ன பண்ணணுமோ பாத்துகோங்க..”

“……”

“ம்ம் கரெக்ட் தான் ஆனா இதுக்காக தான் நான் என் சுய விருப்பத்துல இந்த ஒரு மாசமா அலைஞ்சுட்டு இருக்கேன்.இதுக்கான முடிவு தெரியாம நிச்சயமா நா அமைதி ஆகுறதாயில்ல.நா அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்துருக்கேன்.அதை காப்பாத்தாம விட முடியாது.நீங்க நடக்க வேண்டியதை பாருங்க ஆனா எக்காரணத்தை கொண்டும் என் நேமோ அந்த பொண்ணோட பேரோ வெளில வர கூடாது..

பிரச்சனைக்காக பயப்படல ஆனா இது எனக்கு மட்டுமே தெரிஞ்சதா இருக்கட்டும்னு நினைக்குறேன்..ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்..”

“….”

“தேங்க்ஸ் இன்னும் நாலு நாள்குள்ள எல்லாம் முடிஞ்சுரும்..பை..”

அவன் தன்னை பார்த்துவிடாமலிருக்க மறுபடியும் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்து கொண்டவளுக்கு மனம் அடித்துச் சொன்னது அவளது திவா ஏதோ தவறு செய்கிறான் என.

கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய முகத்தை நீரீல் அடித்து அடித்து சமன் செய்ய முயன்றாள்.அவள் சென்று நேரமானதை உணர்ந்து சுலோச்சனா அங்கே வர அவளின் நிலை கண்டு பயந்துவிட்டார்.

“ஹே வெண்பா என்ன கோலம் இது?என்னாச்சு நல்லாதான இருந்த?”

“ம்மா”,என்றவளுக்கு அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அவர் தோள் சாய்ந்து அழுது தீர்த்திருந்தாள்.

என்னவென புரியாத போதும் மகளை சமாதானப்படுத்த வேண்டும் என உணர்ந்தவர் ஒருவாறு அவளை சமாளித்து டேபிளுக்கு அழைத்துச் சென்று இரண்டொரு வாய் உணவு உண்ண வைத்து அங்கிருந்து வேகமாய் தன் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“இப்போ சொல்லு வெண்பா என்னாச்சு?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ம்மா..திவா ஏதோ தப்பு பண்றாரோனு தோணுது..”,என்றவளுக்கு மீண்டும் அழுகை கண்களை நிறைக்க சுலோச்சனா அவளை அதட்டினார்.

“சும்மா சும்மா அழாம விஷயத்தை சொல்லு வெண்பா..எதைவச்சு இப்படி சொல்ற?”

அன்றைய கல்லூரி நிகழ்வையும் இன்று ஹோட்டலில் அவன் பேச்சுவார்த்தையையும் தாயிடம் அப்படியே கூறினாள்.

அதுதான் வெண்பா செய்த மிகப் பெரிய தவறு என்று தான் கூறவேண்டும்.நேரே சென்று திவாவிடமே கேட்காமல் அலைபாய்ந்த மனதிற்கான பற்றுகோலாய் தன் தாயை நாடியிருந்தாள்.ஆனால் அதுதான் அவளை இன்னுமாய் குழப்பிவிடும் என்பதை பாவம் அறியவில்லை.

“அன்னைக்கு உன்கிட்ட ஏன் அப்படி சொன்னாருனு நீ கேக்கலையா?”

“இல்லம்மா எப்டியும் வீட்டுக்கு வந்து அவரே சொல்லுவாருனு நினைச்சேன் ஆனா அப்பவும் அவர் அதே பொய்யை சொல்லவும் எனக்கு என்ன பண்றதுனு தெரில..”

“ம்ம் நல்லா பதிலுக்கு பதில் பேசு புருஷன் எங்க போறான் என்ன பண்றான்னு கூட தெரியாம என்னத்த குடும்பம் நடத்துரியோ..சரி வெயிட் பண்ணு என்ன பண்ணலாம்னு யோசிப்போம்..”,என்றவர் வேகமாய் யோசித்து தன் கணவருக்கு அழைத்து சுருக்கமாய் விஷயத்தை கூறி திவா வேலை செய்யும் காலேஜ் பிரின்சிபாலின் நம்பரை பெற்றுத் தரச் சொன்னார்.

“சுலோ எனக்கென்னவோ இதெல்லாம் சரியா படல..என்ன இருந்தாலும் இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை அதுல நீ தலையிடுறது நல்லாயிருக்கும்னு நினைக்குறியா..நேரா போய் அவர்கிட்டேயே கேக்க சொல்லு அதைவிட்டுட்டு இந்த மாதிரி வேவு பாக்குற வேலை எல்லாம் வேணாம்..

எனக்கு மொதல்ல இருந்தே நீ பண்ற வேலை பிடிக்கல சுலோ..என்ன தான் நாம இல்லாம நடந்துருந்தாலும் அது ஒண்ணும் பொம்மை கல்யாணம் இல்ல..கடவுள் போட்ட முடிச்சை நாம ஏன் பிரிக்க நினைக்கனும்.முடிஞ்சவரை அவளுக்கு நல்ல புத்தி சொல்லி அவங்க மனகசப்பை தீர்த்து வைக்க பாரேன்.”

“முடிச்சுடீங்களா..எல்லாம் எனக்கு தெரியும் நா கேட்டதை மட்டும் பண்ணுங்க..”,என்றவர் அழைப்பை துண்டித்திருந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பிரின்சிபால் நம்பர் கைக்கு கிடைக்க அவரை தொடர்பு கொண்டார்.

சுருக்கமாய் தன்னை அறிமுகப்படுத்தியவர் திவாவின் மாமியார் என்று கூறி அவன் கல்லூரிக்கு வந்த கதையை கேட்டார்.

“ம்ம் அந்த டாக்டர் பெரிய கை போல மேடம்..எதோ பெரிய ரெக்கமண்டேஷன் பிடிச்சு அவராவே தான் இங்க வந்தாரு.வந்த ஒருமாசத்துல கிளாஸ் எடுத்த நேரத்தை விரல் விட்டு எண்ணிரலாம்.யாரோடையும் பேச மாட்டாரு.எப்போ பாத்தாலும் நாலு க்ளேர்ஸோட தான் பேச்சு அவங்களும் ஸ்டண்ட்ஸ்.

என்ன பண்றது நாம சொல்லி ஒண்ணும் எடுபடாது.கண்டும் காணாமையும் தான் இருந்தாகனும்..இல்லனா என் வேலைக்கே ஆப்பு வந்துடும்”,என அவன் மீதான தனிப்பட்ட விரோதத்தை நன்றாகவே தீர்த்துக் கொண்டார் அவர்.

இங்கு ஸ்பீக்கரில் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வெண்பாவோ உச்சகட்ட அதிர்ச்சியில் அப்படியே மயங்கிச் சரிந்திருந்தாள்.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.