(Reading time: 14 - 28 minutes)

“ம்ம் வேற எங்க போய்ருப்பா அந்த புது டாக்டரோட தான் போய் கண்ணீர் வடிச்சுட்டு இருப்பா..

அவரு செம ஹண்ட்சம் டீ ஆனாலும் ஏன் இப்படி ஒரு மட்டமான டேஸ்டோ தெரில..”

“மச்சி உனக்கு அவ மேல ஏற்கனவே காண்டு அதனால தான் இவ்ளோ பீல் பண்ற..”

“ம்ம் என்ன வேணா சொல்லு அந்த டாக்டரோட அவளை பார்த்தாலே எரிச்சலா இருக்கு..வாட் எவர் ஈவ்னிங் ஹாஸ்ட்டலுக்கு தான வரணும் அப்போ பாத்துக்கலாம்..”

வெண்பாவிற்கு தலை சுற்றியது எங்கோ மொழி தெரியா உலகத்தில் சிக்கி கொண்டதாய் ஒரு பிரமை..இருந்தும் சுலோச்சனாமுன் எதையும் காட்ட விரும்பாதவளாய் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளின் தாயோ இதான் சமயம் என வீட்டிற்கு வரும் வரையுமே அவளை உண்டு இல்லை என ஆக்கிக் கொண்டிருந்தார்.

மாலை வருவதாய் கூறியவள் மதியமே வந்ததை கண்டு சிந்தாம்மா என்னவென கேட்க தலைவலியாய் இருப்பதாய் கூறி அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் அழைப்பதாய் கூறியவனிடமிருந்து ஒரு பதிலும் வராமல் போக அது மேலும் மேலும் அழுகையை கொண்டு வந்தது.

முந்தைய நாளை விட சற்று சீக்கிரமாகவே வந்தவன் உடைமாற்றிய வாறே அவளிடம்,

“சாரி கண்ணம்மா இன்னைக்கு டே ரொம்பவே ஹெக்டிக் அதனால தான் திரும்ப கால் பண்ணவே இல்ல.நீ கால் பண்ணும் போது கூட சீனியர் ப்ரோபசர் ஒருத்தரோட முக்கியமான மீட்டிங்ல தான் இருந்தேன்.எதுக்கு டா கால் பண்ணிருந்த..”

வீட்டிற்கு வந்த பின் நிச்சயம் உண்மையை கூறுவான் என்று நினைத்தவளுக்கு அவனின் விளக்கம் பெரும் அடியாக விழுந்தது.ஒன்றுமே கூறாமல் அவள் அமைதியாய் இருப்பதை கண்டவன் அவளருகில் வர சட்டென அங்கிருந்து எழுந்து கொண்டாள்.

“கண்ணம்மா.. அதான் சாரி சொல்லிட்டனே இன்னுமா கோவம்..”

“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல..கொஞ்சம் டயர்டா இருக்கு நா தூங்க போறேன்..”

“ஓ..சரி டா நல்லா தூங்கு.,டேக் கேர்..”,என நெற்றியில் இதழ்பதித்து நகர்ந்தான்.

அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளுக்கோ கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.அவனிடமிருந்து அதை மறைக்க எண்ணியவள் அவன் உறங்கும் வரை கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இரவு முழுவதும் சற்றும் உறங்காமல் இருந்தவளுக்கு மனம் ஏதேதோ எண்ண ஆரம்பித்திருந்தது..யாரிடமும் எதையும் கூறவும் முடியாமல் தனக்குள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவித்துப் போனாள்.

தன்னவனை சந்தேகிக்க கூடாது என ஒரு மனம் வாதம் பண்ண மற்றொரு மனமோ என்னிடம் மறைக்கும் அளவு அப்படியென்ன ரகசியம் என முரண்டு பிடித்தது.

அதிகாலை திவாவிற்கு முன்னதாகவே எழுந்தவள் குளித்து தயாராகி அனைவருக்குமாய் காபி கலந்து சிந்தாம்மாவிற்கு கொடுத்துவிட்டு திவாவிற்கு எடுத்துச் சென்றாள்.

“குட்மார்னிங் கண்ணம்மா என்ன இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட..”

“அம்மாவோட காஞ்சிபுரம் வரை போறேன்..கோவிலுக்கு போலாம்னு சொன்னாங்க..”

“ஓ பட் ரொம்ப அலைச்சல் கண்ணம்மா உடம்பையும் பாத்துக்கணும் டைம்க்கு சாப்டு..அப்பப்போ ஜுஸ் எதாவது சாப்ட்டுக்கோ டீஹைட்ரேட் ஆய்டாம பாத்துக்கணும்.புரியுதா..”

“ம்ம்..”

திவ்யாந்திற்கு ஏதோ வித்தியாசமாய் தோன்றினாலும் என்னவென அவனால் கணிக்க முடியவில்லை.அவன் கிளம்பும்போதே அவளையும் ட்ராப் செய்வதாய் கூற பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.

அதன்பிறகு தாயோடு கிளம்பி காஞ்சிபுரம் நோக்கிய பயணம் முழுவதுமே மனம் பாடாய் பட்டது.அங்கு கோவிலுக்குச் சென்று இறைவனை மனதார வேண்டிவிட்டு திரும்ப மனம் சற்றே சமாதானமடைந்ததாய் உணர்ந்தாள்.

மனதின் கவலையில் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தது என்னவோ செய்ய சென்னையை நெருங்கியிருந்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.

சற்றே அமைதியான அந்த ட்ரைவின் போன்ற ரெஸ்டாரண்டில் வார நாள் என்பதால் அத்தனை கூட்டம் இருக்கவில்லை.சுலோச்சனாவே ஆர்டர் செய்யட்டும் என அமைதியாய் இருந்தவள் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாய் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அங்கிருந்து வெளியே வந்தவளுக்கு அங்கிருந்த செடிகளுக்குப் பின் இருந்த டேபிளில் இருந்து பேச்சுக் குரல் கேட்டது.

“சார் மறுபடியும் சொல்றேன் நீங்க நினைக்குற மாதிரியான ஆள் நா இல்ல..”,ஏதோ ஒரு பெண் குரல்.

“நா எப்படி நினைக்குறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”,நிறுத்தி நிதானமாய் கேட்டது சாட்சாத் அவளின் திவா தான்..

உலகமே தட்டாமாலை சுற்றியது வெண்பாவிற்கு.இதென்ன சோதனை தினமும் ஏதோ ஒரு அதிரிச்சியை தாங்கியாக வேண்டிய கட்டாயம்.இந்தநேரத்தில் இந்த இடத்தில் திவாவிற்கு என்ன வேலை.அதுவும் ஏதோ ஒரு பெண்ணோடு!!

“சார் என் பேக்ரவுண்ட் தெரியாம என்னை உங்க வழிக்கு கொண்டுவர பாக்குறீங்க..உங்களுக்கு இது நல்லதில்ல..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.