(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 12 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

எப்போதும் உன் மேல் நியாபகம்

என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்

அன்றாடம் உன்னை பார்க்கனும்

என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்

அருகில் வா

என அழைக்கவா

விரல் கோர்க்கனும்

தோள்சாய்க்கனும்

 

அந்தி வெயில் அடங்கையில்

நானும் நீயும் பேசனும்

சத்தமிடும் வளையலை

சங்கம் வைத்து தீர்க்கனும்

பக்கத்துல வந்து

வெட்கத்தையும் தந்து

சொக்க வைத்தாய் அன்று

சேலைப் போல நானும்

தோளில் சரியனும்

திகாலை நான்கு மணி திவ்யாந்தின் கையணைப்பிலேயே இருந்தவள் துளியும் உறங்கியிருக்கவில்லை.அத்தனை நாட்களின் மன பாரத்தையும் பேசித் தீர்த்திருந்தனர்.

“கண்ணம்மா கொஞ்சமாவது தூங்கு..ரொம்ப டயர்டா தெரியுற..”

“இல்ல திவா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.ஆனா நீ சீக்கிரமே கிளம்பனுமே உன் தூக்கத்தை தான் கெடுத்துட்டேன்.நா இன்னும் ஒரு டென் டேஸ் லீவ் எடுக்கலாம்னு இருக்கேன்.கொஞ்சம் மைண்ட் சேஞ்ச் கிடைக்கும்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“உனக்கு எத்தனை நாள் எடுக்கனுமோ எடுத்துக்கோ டா..சரி இப்போ நீ ஒழுங்கா தூங்கு..அம்மாவோட வெளில போறனு சொன்னல..நீ சொன்ன அதே பத்து நாள் நானும் எல்லா பொறுப்பையும் முடிச்சுட்டு கொஞ்சம் ரிலீவ் ஆய்டுவேன்..”

அவளை ஒருவழியாய் உறங்க வைத்தவன் தானும் சற்று கண்ணயர்ந்தான்.அடுத்த மூன்று மணி நேரத்தில் எழுந்தவன் குளித்து தயாராக அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள் வெண்பா.

அவளை எழுப்பாமல் கிளம்பிச் சென்றவன் அவளுக்காக ஒரு பேப்பரில் ஏதோ எழுதி வைத்துவிட்டுச் சென்றான்.

பத்து மணியளவில் எழுந்தவள் கண்களை கசக்கிவாறே தன் மொபைலைத் தேடி எடுக்க அதன் மேல் ஒட்டியிருந்த பேப்பரைப் பார்த்தவளுக்கு இதழ்களில் புன்னகை அதுவாய் வந்து ஒட்டிக் கொண்டது.

“அழகு கண்ணாமாவிற்கு அழகிய காலை வணக்கம்..-திவா..”

அதையெடுத்து தன் தலையணைக்கு அடியில் வைத்தவளுக்கு அன்றைய விடியல் நிஜமாகவே அழகானதாய் தோன்றியது.

அதன்பிறகு பொறுமையாய் குளித்து தயாரானவள் தன் அன்னையை காணச் சென்றாள்.இருவருமாய் மால் ஷாப்பிங் என்று அன்றைய நாள் இனிமையாகவே கழிந்தது.சுலோச்னாவும் அவளோடு இயல்பாக இருப்பதாகவே காட்டிக் கொண்டார்.

தேவையின்றி திவாவை பற்றியோ அவள் திருமணத்தை பற்றியோ வாய் திறக்கவில்லை.அதற்கு முக்கிய காரணம் அன்றைய நாளின் அத்தனை நேரத்திலும் வெண்பா தனக்கென ஒரு பொருள்கூட வாங்கிக் கொள்ளவில்லை.

சுலோச்னா எவ்வளவோ கேட்டும் அவரிடம் வாங்க மறுத்துவிட்டாள்.ஒரு கடையில் அவளுக்கு பிடித்த மாடலில் இருந்த ஹேண்ட்பேக்கை எடுத்தவள் அதற்கும் தானே தான் பணம் செலுத்தினாள்.

அதுவே சுலோச்சனாவிற்கு பல விஷயங்களை புரிய வைத்தது.என்ன தான் தாய் என சிரித்து மகிழ்ந்து செல்லம் கொஞ்சினாலும் மனதளவில் திவாவின் மனைவியாகத் தான் இருக்கிறாள் என்பதை குறித்துக் கொண்டார்.

மாலை நேரமாய் வீட்டிற்கு வந்தவள் மிகுந்த களைப்பின் காரணமாய் சீக்கிரமே உறங்கிவிட்டாள்.தற்செயலாய் விழிப்பு வந்தவள் கையை நீட்ட அருகில் திவா இல்லை.மணி என்னவென பார்க்க இரவு 1:30 என்று காட்டியது.போனை எடுத்து அவனுக்கு அழைக்கச் சென்ற நேரம் மெதுவாய் அறைக் கதவை திறந்து திவா வந்தான்.

“கண்ணம்மா இன்னும் தூங்காம என்ன பண்ற?”

“இல்ல திவா இப்போ தான் எழுந்தேன் உன்னை காணுமேனு கால் பண்ண வந்தேன்.என்ன இவ்ளோ லேட்..”,என தூக்க கலக்கத்தில் அவன் தோளில் சாய்ந்து கொண்டவளை கட்டிலில் படுக்க வைத்தவன்.

“ஒரு ரெண்டு மூணு நாள் அப்படி தான் இருக்கும் டா..நீ தூங்கு மார்னிங் பேசிக்கலாம்..”,என்றவாறே தலையை வருடிக் கொடுக்க அப்படியே உறங்கிப் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.