(Reading time: 13 - 25 minutes)

“எண்ணைக்கு. மீன் எண்ணையில் மருத்துவ குணங்கள் இருக்குன்னு அதற்கு பயன்படுத்துறாங்க. திமிங்கலமோட எலும்பில் நிறைய பொருட்களை செய்யறாங்க. அதன் மாமிசத்தை சாப்பாட்டுக்கு பயன்படுத்துறாங்க. ஆனா இவை எல்லாமே சுயநலத்திற்காக தான். திமிங்கலம் எல்லாம் நிறைய அழிஞ்சு போச்சு. திமிங்கலம் அழிஞ்சா உலகமே அழிஞ்சிடும்னு யாருக்கும் தெரியல”

தேன்மொழி சொல்லவும் திகைத்தார்கள்.

“திமிங்கலம் கடலுக்கு உள்ள வாழ்ந்தாலும் சுவாசிக்க கடலோட மேற்பரப்புக்கு வரும். அப்படி வரும் போது அதன் கழிவுகள் கடல் தாவரங்களுக்கு உணவா உரமா இருக்கு. நிலத்தில் இருக்கும் கார்பன் டைஆக்சைட்டை இந்த கடல் தாவரங்கள் பெருமளவு உட்கொண்டு மாசை கட்டுப்படுத்துது. இந்த தாவரங்களை உண்ணும் மீன்களை திமிங்கலம் தின்று உயிர் சங்கிலியை பாலன்ஸ் செய்யுது. அதனால நம்ம நிலத்தில் இருக்கும் தட்பவெட்பம் எல்லாம் சீராக இருக்கு” மகள் சொல்லும் கயல்விழி பிரமித்தார்.

முறையாக பள்ளிக்குச் சென்று கல்வி பயிலவில்லை எனும் போதும் நிறைந்த அறிவைப் பெற்றிருந்த பிள்ளையைக் கண்டு பூரித்தார்.

“இதை யாரும் தடுக்கலையா பாப்பா” எனக் கேட்ட இளையத் தமையனுக்கு பதில் கூறினாள்.

“பூமியில வாழும் பிராணிகளை காப்பாற்ற எல்லோரும் ரொம்ப முனைப்பா செயல்படுறாங்க, ஆனால் கடலில் வாழும் பிராணிகள் பத்தி யாருக்கும் அவ்வளவாக தெரியவும் இல்ல. இருந்தாலும் நிறைய அமைப்புகள் இருக்கு. சமுத்திரப் பாதுக்காப்பு திட்டங்கள் எல்லாம் இருக்கு. முக்கியமான பிரச்சனை என்னன்னா நிலத்திற்கு எல்லைகள் உண்டு. நாடுகளாக இருக்கு. கடல் ஒரு பகுதிக்கு மேல யாருக்கும் பொதுவாக தான் இருக்கு. அதுவே வேட்டைகாரங்களுக்கு வசதியா இருக்கு”

“ஒண்ணுமே செய்ய முடியாதா பாப்பா” தந்தை கேட்கவும் அவரிடம் தன் கோரிக்கையை முன் வைத்தாள்.

“மக்கள் எல்லோருக்கும் தெரியணும்னா அது பத்தி சினிமா எடுங்கப்பா”

தேன்மொழி சொல்லவும் இளங்கோவிடம் ஆலோசித்தார்.

“சரி பாப்பா. அப்படி ஒரு படம் செய்திடலாம். கதை எல்லாம் ரெடி செய்துட்டு அது பத்தி ஆலோசிப்போம். நீ நல்லா எக்ஸாமுக்குப் படிக்கணும்” மகளுக்கு உறுதி கூறினார்.

கயல்விழி பாரீஸ் பேஷன் ஷோ போட்டியில் கலந்து கொள்ள தயார் செய்து கொண்டிருந்தார்.

வடிவமைக்கும் ஒவ்வொரு ஆடையையும் மகளுக்குப் போட்டுப் பார்த்து திருப்தி கொண்ட பின் அதை போட்டிக்கு எடுத்து வைத்தார்.

“ஷோ டாப்பர் யாருன்னு முடிவு செய்தீங்களா” மாடலிங் ஏஜன்சியிலிருந்து வந்திருந்தவர்கள் கயல்விழி மற்றும் வானதியிடம் ஆலோசிக்க அச்சமயம் பாடத்தில் சந்தேகம் கேட்க தேன்மொழி அங்கே வந்தாள்.

அவள் சாதரணமாக உடுத்தும் ஆடைகளை கூட விசேஷமாக வடிவமைத்திருந்தார் கயல்விழி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எந்நேரமும் டைவிங் சூட்ல தான் இருக்கா. வீட்டில இருக்கும் போதாவது அழகா உடுத்திக்கட்டும்” என்றே மிகச் சிறந்த வகையில் ஆடைகளை தயாரித்து மகளின் பீரோவை நிறைத்திருந்தார்.

தேன்மொழியைக் கண்ட மாடலிங் நிறுவனத்தினர் அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடலில் நீந்துவதால் ஒல்லியான உடல்வாகு பெற்றிருந்த தேன்மொழி நல்ல உயரமாகவும் இருந்தாள். அவளது முகத்தின் பொலிவு மற்றும் அவள் அணிந்திருந்த ஆடையின் அழகு அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

“வீட்டிலேயே சிறந்த மாடலை வைத்துக் கொண்டு வெளியில் தேடுவானேன். உங்க மகளையே ஷோ டாப்பரா போடுங்க” ஆலோசனை கூறிவிட்டு சென்றனர்.

கணவரும் மகன்களும் சம்மதம் கூற தனது தந்தை மறுப்பு சொல்லவும் துணுக்குற்றார் கயல்விழி.

“ஏன்ப்பா வேண்டாம்னு சொல்றீங்க. கண்டிப்பா இதில வெற்றி பெற்றா பாப்பாக்கு நிறைய பேரும் புகழும் கிடைக்கும்” தன் வெற்றியை பிரதானமாக சொல்லாமல் மகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று நினைத்த தாயுள்ளத்தின் பாசம் புரியாமல் இல்லை இருப்பினும் பேத்தியின் கனவுகள் தனித்துவமானவை என்று அறிந்திருந்தவர் மறுத்துச் சொன்னார்.

“உனக்கும் வானதிக்கும் எப்படி இந்த துறையில் ஈடுபாடு இருக்கோ சாதிக்கணும்னு விருப்பம் இருக்கோ, எப்படி மாறனுக்கு இசையில் ஆர்வம் இருக்கோ, இளங்கோ, முத்துக்கு படம் தயாரிக்க ஆசை இருக்கோ அது போல பாப்பாவிற்கும் கனவு லட்சியம் இருக்கு. முத்து சினிமா எடுக்க ஆர்வம் கொண்ட போது குடும்பம் மொத்தமும் துணையா இருந்தோம். இப்போ பாப்பாவுக்கு எல்லோரும் அப்படி இருக்கணும்” தாத்தா சொல்லவும் என்ன கனவு என்ன லட்சியம் என்று புரியாமல் குழம்பினர்.

“சர்வதேச புகைப்பட போட்டியில் பாப்பா கலந்துக்க போறா. மரைன் பிரிவிற்கு தனியா பரிசு உண்டு. அதுக்கு மறுபடியும் நானும் பாப்பாவும் கடல் கடலா போகணும்”

“பாப்பாவை பிரிந்து ரொம்ப வருஷம் இருந்தாச்சு. இனி நீங்க போகும் இடங்களை அனுசரித்து நாங்களும் அங்கே ஷூட்டிங் இருக்க ஏற்பாடு செய்றோம். பாப்பா கடல் சம்பந்தமான படம் எடுக்க சொன்னாளே. அதை செய்வோம்” முத்துக்குமரன் சொல்ல அனைவரும் சந்தோஷமாக சம்மதித்தனர்.

எங்கிருந்தும் ஆடை வடிவமைப்பை மேற்கொள்ளலாம் என்பதால் கயல்விழியும் வானதியும் சரி என்று சொல்ல தேன்மொழியிடம் தங்கள் யோசனையைக் கூறினர்.

“அல்டாப்ரா அடோல் போகணும். அங்க தான் நான் என்னோட போட்டோகிராபி ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்”

“அது எங்க பாப்பா இருக்கு” இளமாறன் கேட்க உலக வரைபடத்தில் காண்பித்தாள் தேன்மொழி.

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் புகைப்படத்தின் நிஜம் இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்ட தேன்மொழிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அவள் வாழ்வையும் புரட்டிபோடும் தருணம் அங்கே தான் காத்துக் கொண்டிருக்கிறது என.

தொடரும்

Episode # 06

Episode # 08

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.