(Reading time: 15 - 30 minutes)

தனது சைக்கிளை எடுத்து அவன் விரைந்து செல்ல.. கதிருக்கு மனது தாளவேயில்லை..!! தரணின் பின்னேயே சென்றது கதிருன் சைக்கிள்..!!

திர் தன்னைப் பிந்தொடர்ந்து தனது வீட்டு கேட்டிற்கு முன் வந்து நிற்பது தெரிந்தபொழுதும் அவனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை அவன்..!!

அலட்சியம் செய்திருந்தான் அவனை.. ஏனோ தனக்கு ஒருவருமே வேண்டாம் என்ற உணர்வு..!!

கேட்டை சத்தம் வரும்வாறு அறைந்து சாத்தியவன்.. காலிங்க் பெல்லை அடிக்க.. பதில் இல்லாமல் போனது அவனுக்கு..

பரத்வாஜ் ஏதோ உரம் வாங்கவேண்டும் என்று முதல் நாளே சேலம் சென்றிருந்தார்..!! கீதாஞ்சலி காலையிலேயே தங்கையின் வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்லியிருந்தார் அவர்..!!

சட்டென நினைவில் வரவில்லை அவர் சொல்லிச் சென்றது.. அவ்வளவு மன அழுத்தம் காலையிருந்து..!!

இரெண்டு மூன்று முறை கதவைத் தட்டியவனுக்கு திடீரெனத்தான் நியாபகம் வந்தது காலையில் தாய் சொன்ன விஷயம்..!!

ஏதோ சொல்லமுடியா நிம்மதி அவன் மனதிற்குள் பரவுவதுபோல்..!!

தனிமை வெகுவாய் அப்பொழுது அவனுக்குத் தேவைப்பட்டது என்றே சொல்லவேண்டும்..!!

“அப்பாடா..!!”, வாய்விட்டே சொன்னான் தரண்..

எப்பொழுதும் கதவின் சாவியை கீதாஞ்சலி ஜன்னலில் இடுக்கில் வைத்துவிட்டுத்தான் செல்வார்.. இன்றும் அப்படியே.. அதைக் கைப்பற்றிக்கொண்டவன் கதவைத் திறந்து உள்ளே சென்று கதவை அறைந்து சாத்த.. வீடு அதிர்ந்துதான் போனது.. அவன் சாத்திய ஃபோர்சில்..!!

தனது அறையை அடைந்தவன் தனது பேக் சாக்ஸ் என அனைத்து பொருட்களையும் சிதறவிட்டு.. கைக்குக் கிடைத்த அனைத்தையும் தூக்கியெறியத்துவங்கினான்..

அனைத்துப்பொருட்களையும் கலைத்துப்போட்டுக்கூட அவனது மனதில் இருந்த உணர்வுகள் எதுவும் வடியவில்லை..!!

தனது இயாலமையை மொத்ததையும் பொருட்களின் மீதும் காட்டியிருந்தான்..!!

பத்தாதற்கு அழுகை வேறு..!! கட்டுப்படுத்தவே முடியவில்லை அவனுக்கு..!!

குழந்தையாய் தேம்பித் தேம்பி அழுதான் அவன்..

கண்கள் எல்லாம் சிவந்து.. முகமெல்லாம் வீங்கிப்போயிருந்தது தரணுக்கு..!!

கட்டுப்படுத்த முடியாத அளவு கண்ணீர்.. தாரை தாரையாக வழிந்தபடியிருந்தது.. கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை அவனுக்கு..!!

அசிங்கமாக இருந்தது.. அத்தனை அசிங்கமாக இருந்தது அவனுக்கு.. தன்னை நினைத்தே அத்தனை அசிங்கம்..!!

தனது கிளாஸ்மேட்ஸ் அனைவருக்கம் தன்னைப் பற்றி தெரிந்திருக்காதுதான்.. அது நிச்சயம்.. ஆனால் உண்மை தெரியாமலே வெஏஉம் ஒரு ஓவியத்திற்காக தன்னைக் கேலி செய்து பேசுபவர்கள்.. நாளை உண்மை மட்டும் தெரிந்தால்..??

நினைக்கவே பயமாக இருந்தது அவனுக்கு..

தனது தாய் தந்தை.. எப்படி அவர்களை ஏறெடுத்துப் பார்ப்பது நான்..??

தன்னை மற்றவர்கள் கிண்டல் செய்வதை எப்படித் தாங்குவார்கள் அவர்கள்..??

கேள்விகள் வரிசையாக எழ.. பயம் மட்டுமே அவனுக்குள்.. வெளிப்படையாக நடுக்கம் தரணுக்கு..

யோசிக்க யோசிக்க தலை வலிப்பதுபோல்.. அதற்குமேல் அவனால் சிறிதும் யோசிக்கவே முடியவில்லை..!!

சுருண்டு படுத்தவன் எப்படியே உறங்கிவிட.. தன்னைச் சுற்றி நடப்பது ஒன்றும் தெரிந்திருக்கவில்லை..!!

“தரண்யா.. தரண்யா..”, அவ்வளவு சத்தமாக ஒலித்தது கீதாலட்சுமியின் குரல்..

கண்கள் எல்லாம் எரிந்திட தாயின் குரலில் விழிக்கமுடியாமல் விழித்தான் தரண்.. அழுததால் அப்படியொரு எரிச்சல் அவனுக்கு..!!

காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்த சோர்வு வேறு..!!

“தரண்யா.. தரண்யா..”, கதவைத்திறடா முதல்ல.. காது கிழியும் அளவு தரணின் அறைக்கதவைத் தட்டினார் கீதாஞ்சலி..!!

“இருங்கம்மா.. எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க.. வாரேன் நானு..”, நடந்ததெல்லாம் தற்காலிகமாக மறந்துவிட்டது அவனுக்கு..

நிதானமாக வந்து அவன் கதவைத் திறந்திட.. உக்கிரப்பார்வையுடன் கீதாஞ்சலி..!!

வெறுப்புக்கூட மறைந்திருந்தது அவர் பார்வையில்..!! காரணம்தான் புரிபடவில்லை அவனுக்கு..!!

“எ..ன்ன..ம்மா..??”, அவன் கேட்பதற்குள் அவனை ஓங்கி அறைந்திருந்தார் கிதாஞ்சலி..

“ம்..மா..”, கன்னத்தில் எரிச்சல்.. ஏற்கனவே வீங்கியிருந்தவனது கன்னம் இன்னும் வீங்கப்போக.. தாயை ஏக அதிர்ச்சியில் அசையாமல் பார்த்திருந்தான் அவன்..

“என்னடா அம்மா..??”, எரிச்சலாக மொழிந்தவர், “புதுசா என்னவோ கெட்டப்பழக்கம் பழகியிருக்கீங்க போல..??”, உக்கிரம் மட்டுமே ஊஞ்சலாடியது அவரது குரலில்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.