(Reading time: 15 - 30 minutes)

அது தரணைப்போலவே உருவம் கொண்ட பெண்ணின் உருவம்..!! அவ்வளவு அழகாய் வரையப்பட்டிருந்தது அந்தப்படம்..!!

பிக்காசோ வரைந்த ஓவியமாய்.. தத்ரூபமாக..

கோபமாக அந்தப் படத்தை ஒருநொடி பார்த்த கதிர்.. டஸ்ட்டரை எடுத்து அந்தப் படத்தை சுத்தமாக அழித்திருந்தான்..

அதன் சுவடே யாரின் கண்களுக்கும் தெரியாமல்..!!

“தரண்.. போய் உன் ப்ளேஸ்ல உட்காரு..”, இறுகியே ஒலித்தது அவனது குரல்..

கதிரை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை தரணால்..!! கதிரை மட்டுமல்ல யாரையும் அவனால் துளிகூட நிமிர்ந்தே பார்த்திடமுடியவில்லை..

“போடா..”, திரும்பவும் அவன் சொல்ல..

ஏதோ நடைபினமாக தனது பென்சில் சென்று அமர்ந்துகொண்டான் அவன்..!!

கதிரின் கண்கள் எல்லாம் அவனைச் சுற்றியே..

தரணின் ஒவ்வொரு அசைவையும் படித்துக்கொண்டிருந்தான் அவன்..!!

அடிபட்டுக்கிடக்கும் தரணின் மனது நன்றாகவே புரிந்தது கதிருக்கு.. தரணின் மீது என்னதான் அவன் குற்றங்கள் கண்டுபிடித்தாலும்.. அவனது அசைவுகள் எல்லாம் அத்துப்படி அல்லவா..??

புரிந்துகொள்ளமுடிந்தது அவனால்..!! தரணின் வலி புரிந்தது அவனுக்கு..!!

தரணிடம் சென்று அவனை ஆருதல் படுத்தும் எண்ணமானது மனம் முழுவதிலும் வியாபித்து இருந்தபோதிலும் அவனை நெறுங்கிட முடியவில்லை..!! நெறுங்கிட முடியாமல் தடுத்தது கிளாசில் இருந்த மாணவர் கூட்டம்..!!

இன்னும் சில முணுமுணுப்புக்கள் அந்த அறை முழுவதிலும் வியாபித்திருக்க.. கதிர் சத்தமாக, “கிளாஸ்.. சைலென்ட் ப்ளீஸ்.. எத்தனை தடவைதான் சொல்றது உங்களுக்கெல்லாம்.. பேசாம இருங்க..”, உச்சஸ்த்தானத்தில்..

பின் ட்ராப் சைலென்ஸ் அங்கே..!!

கதிரின் கண்கள் தரணின் அந்த நிலமையைப் பார்த்ததும் தேடியது லாவண்யாவைத்தான்..!!

அவனை ஏமாற்றும் விதமாய் விடையாய் காலியாகக் காட்சிதந்தது லாவண்யாவின் இருப்பிடம்..!!

ச்சே.. கால்களால் தரையை ஓங்கி வலிவரும்வரை உதைத்திட மட்டும்தான் முடிந்தது கதிரால்..

அந்தப்படத்தை வரைந்தவர்களை நினைத்து அத்தனை கோபம்..!! கொன்றுவிடும் அளவிற்கு கோபம்..!! சான்ஸ் கிடைத்திருந்தாள் அப்பொழுதே அந்நிமிடமே அந்த நபரை கொன்றிருப்பான் அவன்..!!

கதிருக்கும் வலியெடுத்தது தரணின் நிலையைக்கண்டு..!!

இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிதினின் மனதிற்குள் சொல்லமுடியாத சந்தோஷம்..!!

தரணின் அதிர்ச்சி.. பயம்.. நடுக்கம் என அனைத்தும் அவன் கண்களுக்கு விருந்தாய்.. அப்படி ஒரு அல்ப சந்தோஷம் அவனுக்கு..!!

இதற்குத்தானே ஆசைப்பட்டான் நிதின்..!!

தரண் பலவீணப்படவேண்டும்.. தன்னம்பிக்கையை குறையவேண்டும்.. பலப்பல ஆசைகள் அவனுக்குள்..!!

அவன் நினைத்தபடி திட்டமிட்டபடி அனைத்துமே அரங்கேறிக்கொண்டிருக்கிறது அங்கே..!!

அமர்ந்த இடத்தைவிட்டு தரண் எழவேயில்லை..!!

தடுமாற்றத்திலேயே சூழ்ந்திருந்தது அவனது மனது..!!

கதிர் பலமுறை தரணை சமாதானப்படுத்த முயன்றான்..!! ஆனால் அவன் செயல்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது..!!

மதியம் உணவு அருந்தக்கூட தரண் எழுந்திருக்கவில்லை..!!

கிளாசில் இருக்கும் மற்றவர்களும் அவனிடம் மன்னிப்பு கேட்டிட.. அவர்களிடம் அவன் நான் மன்னித்துவிட்டேன் என்றோ.. மன்னித்துவிடவில்லை என்றோ எதுவும் சொல்லவில்லை..

ஒரு ப்ளான்க் எக்ஸ்ப்ரெஷன்..!! அது மட்டுமே அவனிடம்..!!

அவனை தன்னிலைக்கு அழைத்துவர என்றே அடித்தது கடைசி பெல்..!!

அனைவருக்கும் முன்னால் கிளம்ப எண்ணி தனது பையைத் தோளில் அவன் போட்டுக்கொண்டு திரும்ப.. அவனைக் கேலியாகப் பார்த்தபடி நிதின்..!!

அவனது கேலிச் சிரிப்பு மீண்டும் நிலைக்குலையச் செய்திட.. சட்டென தலையைத் திருப்பியிருந்தான் அவன்..!!

தன்னிடம் இருந்த மொத்த நிமிர்வையும் நிதினின் கேலிப்பார்வை மொத்தமும் சாய்த்திருந்தது..!!

எங்கும் யாரையும் எதையும் பார்க்கவில்லை அவன்..!!

சீக்கிரம் பள்ளிக்கூடத்தைவிட்டுப் போனால் போதும் என்பது மட்டுமே பிரமாதமாய்..!!

கதிரின் அழைப்புக்கள் காதில் விழுந்தபோதிலும் அதையெல்லாம் காதில் விழாதவன் போலவே இருந்தது அவன் செய்கைகள் யாவிலும்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.