(Reading time: 15 - 30 minutes)

“என்ன..ம்மா சொல்..றீங்க..?? ஒன்னு..மே புரி..யல.. எ..னக்கு..”, காலையிலிருந்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவனை ஒருநிலையாத நிலைக்குத் தள்ளியிருக்க.. இப்பொழுது தாயின் சொற்கள் மேலும் அவனை வீழ்ந்திடச்செய்தது..!!

“ஒன்னும் புரியாதுடா உனக்கு.. அறஞ்சேன்னு வெய்யு..”

“ம்..மா..??”

“ச்சே.. அப்படிக்கூப்பிடாதே என்ன.. எனக்கு அசிங்கமா இருக்கு.. இப்படி ஒரு **********யா பெத்தெடுத்தேன் நான்..??”, அவர் பாட்டுக்குப் புலம்ப.. மொத்தமாக செத்திருந்தான் அவன்.. தாயிடமிருந்து கேட்கக்கூடாத வார்த்தைகள்..!!

அவர் அறிந்துகொண்ட விஷயங்கள் புத்தியை மழுங்கடித்து அவனைப் பார்த்து அப்படிப் பேசவைத்திருந்தது.. அவனைப் பார்த்து அப்படிக் கேள்விக் கேட்டு கஷ்ட்டபட வைக்கவேண்டுமென்றெல்லாம் இல்லை அவருக்கு.. இருந்தும்.. நடந்த சம்பவம் அவரை அப்படி யோசிக்காமல் பேச வைத்திருந்தது..!!

மீண்டும் எல்லாம் நிதினின் உபயங்கள்..!!

தனது தங்கை வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தார் கீதாஞ்சலி..

“டேய் செந்தில்.. இந்த தரண்யன் இருக்கான்ல.. அவன் பையனே இல்லடா.. அவன் ஒரு ******டா..”, கிண்டலடித்து சிரித்துக்கொண்டிருந்தான் நிதின்..

“என்ன மச்சி சொல்ற..?? நிஜமாலுமா..??”, மற்றவன் கேட்க..

“ஆமா மாப்பிள்ளை.. அவன் நடக்கற நடையும்.. பேசற பேச்சும்.. அப்படியே புள்ளைமாதிரி..”

“ஹோ.. அதுனாலதான் எவனோ அவனை அப்படி போர்ட்ல படம் வரைஞ்சு வெச்சிருந்தான்னா..??”, அச்சர்யமாக..

“ஆமாடா.. அப்படித்தான் இருக்கும்.. அவனை பொண்ணுங்களோட ட்ரெஸ்ல கற்பனை பண்ணிப்பாறேன்..”, கலகலவென சிரித்தான் நிதின்..

எதர்ச்சையாக இருவரின் பேச்சையின் கேட்ட கீதாஞ்சலிக்கு தூக்கிவாரிப்போட்டது.. கூடவே அந்த இருவர் மீது கோபமும்.. எப்படி இவர்கள் தன் பையனைப் பற்றி எப்படிப் பேசலாம் என்று..

நெராக இருவர் முன்னும் சென்று நின்றவர் இருவரையும் பார்த்து முறைக்க.. நழுவப்பார்த்தனர் இருவரும்..

“என்னங்கடா என் பையனைப் பத்தி இப்படியொரு பேச்சு.. ஒன்னு போட்டென்னு வெய்யுங்க..”, கோபமாகவே..

“நாங்க ஒன்னும் பொய் சொல்லல.. நெஜமாலும் உங்க பையன் ஒரு ************தான்..”, என்றான் நிதின் அவர் கண்களைப் பார்த்தவாறு..

அப்படியொரு கோபம் அவருக்கு.. நிதினை நோக்கி அவரது கைகள் உயர்ந்திருந்தது..

அதை எதிர்பார்த்தவனாக, “அம்மா.. இங்க பாருங்கம்மா.. என்னை இவங்க அடிக்கறாங்க..”, பயத்தை குரலில் சேர்த்து நிதின் கத்த..

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனை அடித்திருந்தார் கீதாஞ்சலி..

நிதினின் தாய் வரும்பொழுது பார்த்தது ஒங்கியிருந்த கீதாஞ்சலியின் விரல்களும்.. பயந்த நிதினையுமே..

அவருக்கும் கோபமே..!!

“எதுக்கு இப்ப என் பையனை அடிக்கறீங்க..?? உங்களுக்கு யாரு அந்த உரிமையைக் கொடுத்தது..??”, நிதினை கீதாவிடமிருந்து விலக்கியிருந்தார் நிதினின் தாயார் அவ்வளவு கோபமாக.. என் பையனை அடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது என்று.. நிதின் முன்பு செய்ததெல்லாம் நியாபகத்திற்கு இருக்கிறதுதான்.. ஆனால்.. அதெல்லாம் வயசுக் கோளாறுதானே..?? எல்லாம் முடிந்துவிட்டது அல்லவா..?? இப்பொழுதும் அவனை அப்படியே இருப்பான் என்று எண்ணினால் என்ன அர்த்தமாம்..??  

“உங்க பையன் என் பையன்ன என்னென்னு தெரியாம பேசாதீங்க நீங்க..”

“என்ன சொன்னான் அவன்..?? என்னடா சொன்ன அவங்க பையனைப் பத்தி..??”, நிதானமென்பதே இல்லை அவரிடத்தில்..

“ம்மா.. அவன் ஒரு ********ம்மா.. எல்லாத்தையும் பொண்ணு மாதிரியே பண்றான்.. பொண்ணு மாதிரி நடக்கறது பேசறது எல்லாம்.. அதான் இவன்க்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்..”, நிஜமிருந்தது அவனிடம்.. அதை அவனது குரல் நங்கு உணர்த்தியது..

“ஏன்ன சொல்ற நிதின்.. நீ சொல்றது எல்லாம் நிஜம்தானா..??”

“ஆமாம்மா.. வேணும்னா நீங்க இவங்கிட்ட கேட்டுப்பாருங்க.. தரணைப் பொண்ணு வேஷத்துல படமெல்லாம் வரஞ்சிருந்தாங்க..”, தன்னருகில் இருந்த செந்திலை அவன் சுட்டிக்காட்ட..

“நிதின் சொல்றதெல்லாம் உண்மையா..??”, கேட்டிருந்தார் நிதினின் தாயார்..

“ஆமா ஆண்ட்டி.. அவன் சொல்றதெல்லாம் உண்மைதான்.. தரணைப் பொண்ணு மாதிரி படம் எல்லாம் வரைஞ்சிருந்தாங்க யாரோ..”, நிதினின் கடைசி கேள்வி மட்டுமே விழிந்திருந்தது செந்திலுக்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.