“பாருங்க தருணம்மா.. இப்பத் தெரியுதா பிரச்சனை யார் பக்கம்ன்னு.. உங்க பையன்.. ச்சே.. ச்சே.. பொண்ணு.. அதுக்கிட்டத்தான் பிரச்சனை.. முதல்ல அதை சரி பண்ணுங்க.. அப்புறம் என் பையனைக் கண்டிக்கலாம்..”, சுற்றியிருக்கும் அனைவருக்கும் கேட்கும்படி..
நிதினின் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் அனைவரும் வந்துவிட்டனர்..
அவமானமாகிப்போனது கீதாஞ்சலிக்கு..!!
குனிந்த தலை நிமிராது அங்கிருந்து ஓடியிருந்தார் அவர்..!!
அவர் செல்லும் திசையைப் பார்த்திருந்த நிதினின் முகத்தினில் வஞ்சப்புன்னகை..!!
நிதினுக்கு கீதாஞ்சலியை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை..!! ஜஸ்ட் அவர் தனது தங்கையின் வீட்டிலிருந்து வரும்பொழுது உதித்த இன்ஸ்டண்ட் யோசனை..!!
அழகாக அதை யூஸ் செய்துகொண்டான் அவன்..!!
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
நிலவுமகள் அன்று மேகங்களுக்குப் பின்னால் மறைந்துகிடந்தாள்..!! அன்று தனது மடியில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் காணக்கூடாது என்பதற்காகவே..!!
அவள் மேகங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்ட பொழுதும் தள்ளாடித் தள்ளாடி இலக்கில்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்த தரணைக் கண்டு மனம் தாளவே முடியவில்லை அவளது..!!
அவளது சோகத்தைப் பார்த்து அவளது மேகம் கூட ஒரு துளி கண்ணீர் விட்டது..!!
தாய் தன்னைத் திட்டி அடங்கியதும் அவனை ஒதுக்குவிட்டு தன்னுள் மூழ்கிப்போக.. வாழும் ஆசை முழுவதுமாக விட்டுப்போயிருந்தது தரணுக்கு..!!
வீட்டைவிட்டு உணர்ச்சிவசப்பட்டு வெளியேறி இருந்தான் அவன்..!!
கால்கள் இரெண்டும் தள்ளாடி சோர்ந்துபோய் தரையில் விழும் வரை அவன் தன் நடையை நிறுத்திடவில்லை..!!
மூச்சுவாங்க சக்தியெல்லாம் வடிந்துபோக அதே இடத்தில் அமர்ந்துவிட்டான் அவன்..!!
எங்கோ தூரத்தில் நாயொன்று குறைக்க.. மெதுவாக எழுந்தவது கண்களுக்கு விருந்தாய் ரெயில்வே ட்ராக்..!!
அவன் இருந்த நிலையில் தற்கொலை எண்ணம் மட்டுமே முகாமிட்டுக்கொண்டிருந்ததால்.. எதைப்பற்றியும் யோசிக்கவில்லை அவன்..!!
விறுவிறுவென நடந்து ட்ராக்குகளின் கோடியில் ட்ரெயினிற்காக காத்து நிற்க..!!
அவனுக்கே அவனுக்காய் சிறிது நேரத்தில் கேட்டது ரயிலின் சத்தம்..!!
தயாராகியிருந்தான் அவன்..!!
உடலில் உரசிச் செல்லும் வாடைக்காற்று அவனது உடலையும் மனதையும் நடுக்கம்கொள்ளச் செய்ததுதான்..!!
இருந்தும் பின் வாங்கவில்லை அவன்..!!
அவனைப் பொருத்தவரையில் யாரின் பேச்சையும் அவனால் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாது..!!
தன்னைப் பெற்றவளே ஏன் என்னைப் பெற்றோம் என்று நினைக்கும்பொழுது மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்..??
ஏன் நானே அன்று முகம் தெரியா ஒருவரிடம் அப்படித்தானே நடந்துகொண்டேன்.. நான் அவரை நடத்தியது போலத்தானே அனைவரும் என்னை நடத்துவார்கள்..
கண்டிப்பாக என்னால் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளவே முடியாது..!!
இதற்கு ஒரே தீர்வு தற்கொலைதான்..!!
தீவிரமாக அவன் முடிவெடுக்கவும் ட்ரெயின் அவனை நெறுங்கவும் சரியாக இருந்தது..!!
கண்களை இறுக மூடி பாய்ந்திருந்தான் தரண்யன்..!!
இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனைக் கதையாகும்..
உருவெடுப்பாள்..
{kunena_discuss:1168}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.