அவளிடம் பேசியவாறே தாங்கள் நின்றிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்து தங்களுக்கு தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்தவன் அவளை அங்கே அழைத்துச் சென்றான்.
“அதோ அங்கே இருக்கு பாத்ரூம். நான் கொஞ்சம் வெளியில் போய் விட்டு வர்றேன். கதவைச் சாத்திக்கோ.”
அவளும் தலையாட்டினாள்.
சிறிது நேரத்திலேயே வந்துவிட்டான்.
அவன் கையில் அன்றைய தினசரியும், குளிப்பதற்கு சோப்பு மற்றும் மற்ற இத்யாதிகளும் இருந்தன. அவளிடம் சோப்பு, பேஸ்ட்டையும், பிரஸ்ஸையும் நீட்டினான்.
அவள் குளித்துவிட்டு வெளியில் வந்து தயாரானாள்.
அவனும் குளியல் அறைக்குள் நுழைந்தான்.
அவன் வந்து தயாரானதும் சாப்பிட அழைத்துச் சென்றான்.
அதன் பிறகு அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டார்கள். அவள் பரிட்சை எழுத வேண்டிய இடம் பற்றி விசாரித்தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
தன்னிடம் மனம் விட்டு அதுவும் நீண்ட நேரம் பேசியது இதுவாகத்தான் இருக்கும். அவள் ஆச்சர்யம் விலகாமலே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய பார்வை அவனை என்னவோ செய்தது.
“இப்படியே பார்த்துக்கிட்டிருந்தா நேரம் ஆயிடும். சீக்கிரம் குளிச்சுட்டுக் கிளம்பு.”
“ஊருக்குப் போறோமா?”