Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

“அது சரி, உன் அம்மா எதையாவது செய்து இதை தடுத்திருக்க வேண்டியதுதானே?”

“கரெக்ட்… அவர்களுக்குத் தோன்றியதை செய்தார்கள்.  இதை செய்யலாமா வேண்டாமா என்றுகூட பெரியவர்களிடம் ஆலோசிக்காமல் தன் குடும்ப விசயம் வெளியே தெரியக் கூடாது என்று ஒரு காரியம் செய்தார்.”

“என்னது?”

“ம்… ஒரு பொய் சொன்னார். அப்பாவைபோலவே அவருக்கும் ஒரு பழைய காதல் இருப்பதாகவும் அதை தேடி அவர் செல்லப் போவதாகவும் சொல்லிவிட்டார்”

“அச்சோ… தன் வலியை புரிய வைப்பதற்காக சொல்லியிருப்பார். ஆனால், ஆண் மனம் வேறு மாதிரி எடுத்துக் கொள்ளுமே.”

“இந்த டிட் ஃபார் டாட் என்பதெல்லாம் இங்கே செல்லவில்லை,”

“-----“

“அப்போதைக்கு திருந்தி விட்டதுபோல நடித்தார். எங்களிடம் பழைய மாதிரியே நடந்து கொண்டார். அந்த ஷில்பாவிடம் இருந்து விலகியும் விட்டார். ஆனால்..”

“ஆனால்…”

“அவர் மனதில் என்ன இருந்த்து என்பது பிறகுதான் புரிந்தது. ஒரு ஃபேமிலி டூருக்கு சென்றோம். காரில்  நான்கு பேரும் சிரித்து கலாட்டா செய்தபடி சென்றோம். அப்போது இடியுடன் மழைகூட பெய்து கொண்டிருந்த்.து. மலை சாலை வேறு… கார் விரைவாக சென்றது. மிதிலா பயத்துடன் அன் கையை பிடித்து கொண்டிருந்தாள்” சொல்லிக் கொண்டிருந்த புவன் அந்த காட்சிக்குள்ளேயே போய் விட்டான்….

……“கொஞ்சம் மெதுவாக காரை ஓட்டுங்கள் குழந்தை பயப்படுகிறாள்” என்று சந்தோஷி சொல்ல,

அதை காதில் வாங்காமல் ராஜன் காரை ஓட்டினார்.

“டாட், கொஞ்சம் மெதுவாக போங்கள். மலைப் பாதை… மழை வேறு பெய்கிறது. எதாவது ஆகி விடப் போகிறது” இது புவன்.

“என்னவாகி விடும்” என்று கேட்ட ராஜனின் குரல் கடினமாக இருந்தது. அவருடைய முகம்கூட கொடூரமாக தெரிகிறதே… அவன் தவறாக யூகிக்கிறானா…. புவன் யோசிக்கும்போதே…

“என்னவாகி விடும்? நாம் அனைவரும் செத்துப் போய்விடுவோம்” என்று சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தார். காரின் வேகமும் கூடியது வளைவுகளில் அதீதமாக குலுங்கி திரும்பியது. தூக்கத்திலிருந்த குட்டி மிதிலா பயத்துடன் விழித்தாள்.

“ஹனி…. உங்களுக்கு என்ன ஆச்சு?”  சந்தோஷியின் குரல் நடுங்கியது.

“பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு பார்க்கிறியா? நான் இப்போதுதான் தெளிவாக இருக்கேன். இது என் குடும்பம்னு  என் குடும்பம்னு…  நான் இத்தனை நாளாகத்தான் பைத்தியமாக இருந்தேன். இப்போதுதான் புரிந்த்து இது என் குடும்பம் இல்லை.”

“டாட், அமைதியாக இருங்கள்” பின் இருக்கையில் இருந்த புவன் கெஞ்சினான். பயத்தில் நடுங்கிய மிதிலாவின் கையை இறுக பற்றியபடி நிலைமையை சமாளிக்கப் பார்த்தான்.

“அப்படி இருக்க முடியும் புவன்? உன் அம்மாவின் ரகசிய வாழ்க்கை பற்றி தெரிந்தபின் எப்படி அமைதியாக இருக்க முடியும். என் ரத்தம் என்று நான் நினைத்தது பொய்யாகி விட்டது.  நீங்கள் யாரும் என்னை சேர்ந்தவர்கள் இல்லை.” அவர் கத்தினார்.

ராஜன் தன் கட்டுபாட்டில் இல்லை என்பது புவனுக்கு புரிந்து விட்டது. அம்மா சொன்ன பொய்…! இப்படி பயங்கரமாக உருவெடுத்து நிற்கிறது. இப்போது அவரை ஏதாவது சொல்லி திசை திருப்ப வேண்டுமே!

“டாட், அது பொய்….”

“நான் நம்ப மாட்டேன். ஏனெனில் காதல் என்பது ஒருபோதும் மறையாது எப்போதாவது தன்னை வெளிக்காட்டும்”

“அந்த தவறை நீங்கள்தான் செய்தீர்கள்” சந்தோஷி கத்த,

“அதனால்தான் அந்த உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் ஷில்பாவை நினைத்துக் கொண்டு உன்னுடன் வாழ்ந்ததுபோல் நீ எவனையோ நினத்துக்”

“போதும் நிறுத்துங்கள்” சந்தோஷி காதுகளை கையால் பொத்திக் கொண்டு கதற ஆரம்பிக்க,

“இந்த நடிப்பை எல்லாம் நான் நம்ப மாட்டேன்.   என்னை ஏமாற்றி  நீ உருவாக்கிய குடும்பம் மொத்தமாக அழிந்துபோகட்டும்” அவர் கடுமையாக பேச,

“இவ்வளவு காலமாக என்னை புரிந்து கொள்ளவில்லை. நீ ஒரு முட்டாள் ராஜன்” என்று சந்தோஷி கத்த,

அவர் வெறிபிடித்தாற்போல வேகத்தை அதிகரித்தார்,

அம்மா அப்பாவின் கோபத்தை அதிகரித்து விட்டதை புரிந்து கொண்ட புவன்,

“டாட், ப்ளீஸ் இதையெல்லாம் பேசி சரி செய்து கொள்ளலா. மிதிலா ரொம்பவும் பயந்து போயிருக்கிறாள். இதுபோல செய்வது உங்களுக்கு ஆபத்துதானே” என்றான்.

“நானும் செத்துபோக ரெடியாகவே இருக்கிறேன். ஒரு முட்டாளாக இருந்ததற்கு எனக்கு தண்டனை வேண்டாமா?”

“செத்துபோக நானும் பயப்படவில்லை… எப்போது என்னுடைய நேர்மையை சந்தேகித்தீர்களோ அப்போதே நானும் இறந்து விட்டேன்” சந்தோஷியும் வெறி கொண்டு கத்த,

“மா… ப்ளீஸ்” என்று புவன் கெஞ்சியபோது, கார் சாலை விட்டிறங்கி சரிவில் தடதடவென்று ஓட ஆரம்பித்தது.

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்saaru 2018-12-06 22:08
Randum randu vitham
Nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-12-05 04:13
Sadha-ku ippadi oru fb ethir parkala.. poi-ye pidikkatha Bhuvan poi solra Sadha.. Enna nadakkum :Q: Oru velai Sadha vera ethavathu justification vachiruppalo :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்SAJU 2018-12-04 21:58
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-12-04 19:53
Irandu perum aduthanga pathi oru secret flashback vachirukkanga. Sasha kandupodichutanga aana Bhuvan? When will it get solved and how :Q: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்AdharvJo 2018-12-04 18:46
:Q: Buvan-k sadha oda indha part of the story theriyadho or like before sadha oda face parkalaiyo illai sadha oda appearance change agivittadha :Q: Anyway rendu perum are locked in the wedding rings so let them slowly sort it out :yes: wow then sadha must be aware of the G.box secret :dance:

Rajan oda ferocious act is nerve wracking facepalm sad of that little girl anyway past is past :sad:

Karan sonna mathiri buvan-um poi sollinaru thane apo avarukku ena thandanai kodupinga….yep as karan said buvan-k avroda state of mind mele avarukke nambikai illadhapodhu wat to do....lets wait and watch! I liked buvan's statement in saving a life :clap: well said!!

Also madam ji poi solla kudadhun prioritize seivadhu super (y)

Thank you for this interesting update Ms Sagampari :clap: :clap: Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-12-04 18:25
சூப்பர் மேம்... :clap: :clap:
காத்திருத்தலும், பொறுமையும் மிகவும் சிறந்தது.. ஆனால் அதை கடைபிடிப்பது மட்டுமே கடினமானது... :yes: :roll: :-)
காதல் கண்ணாம்பூச்சி இருவருக்குள்ளும்.. :lol: :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்Srivi 2018-12-04 17:40
Ada..sis, indha FB yum nalla irukke.. Maari Maari appove help pannirukanga..sema la..naan expect Panna madhiri, Rajan than accident pannirukanumnu ninaichen.. Sadly it became true .. Ada sikram purinchikonga pa.. ..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top