Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

இரு மனதின் ஒற்றிசைவுதானே அது! ஒரே அலைவரிசையில் செட்டாக வேண்டும்! இதெல்லாம் புவனுக்கும் அவளுக்கும் இடையில் இருக்கிறதா என்ன? வாழ்க்கைபற்றி புரிந்து கொள்ளாத காலகட்டத்தில்கூட அவன்தான் என் கணவன் என்று நம்பியிருந்தாளே… அதுவும் ஒரு கனாக் காலமா? அதே புவன்தானா அல்லது அடிப்படை குணம் மாறிவிட்ட மனிதனா?

அப்போது அவள் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள். சென்னையில்தான் அவளுடைய பள்ளி இறுதி படிப்பு இருந்த்து. அதற்குமுன் சேலம்தான்!

சென்னை பள்ளி வாழ்க்கையின் மிக்ஸட் கலாச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் வடஇந்திய கலாச்சாரம், ஆந்திரா… கர்நாடகா… இத்துடன் தமிழ் பழக்கங்கங்களும் கலந்திருந்தன. குரூப்பிஸம் வேறு… அவர்கள் மொழியிலேயே தனிபட்டு பேசிக் கொள்வார்கள்.

அவளுக்கு ஒரு தோழி கிடைத்தாள். மங்கை! கொஞ்சம் கட்டுப்பெட்டியான குடும்ப பின்னணி உள்ளவள். அமைதியான கீழ்படிதல் உள்ள மாணவி! நல்ல பெண்!. அவளுக்கு பிடித்த லிஸ்ட் கோவில்… பூஜை…. பாடுவது… என்று இருக்கும். அந்த அளவிற்கு சதா இல்லையென்றாலும் அவளுடன் நட்பாக பழகினாள்.

அவளுடன் வெளியே செல்வது… கோவில்களுக்குதான்… அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. ஒரு முறை ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவளையும் பின்னால் ஏற்றிக் கொண்டு கோவிலுக்கு செல்லும்போது… லெஃப்ட் திரும்பும்போது ஒரு கார் உரசி செல்ல… பயத்தில் சதா ஸ்டியரிங்கை பலமாக திருப்ப… இருவரும் வண்டியிலிருந்து விழுந்தனர். சதாவைவிட மங்கைக்குதான் பலத்த அடி! மயக்கத்தில் அவள் விழுந்து கிடக்க, கதறிய சதா அவளை எழுப்ப முயன்றாள். இரத்த வெள்ளத்தில் மிதந்த தோழியின் நிலை அவளை செயலற்றவளாக்கியது.

“போயிடுச்சு போலிருக்கே”

“போலீஸுக்கு கால் பண்ணுங்க”

“பிழைச்சாலும் உபயோகம் இருக்காது. தலைல பலமாக அடிபட்டிருக்கு”

அவர்களை சுற்றி நின்றவர்கள் இப்படி பேசினார்கள். ஒருவரும் அருகில் வரவில்லை. அப்படி ஒரு அடி எடுத்து வைத்தவர்களையும் போலீஸ்… விசாரணை என்று பயமுறுத்தி விட்டார்கள்.

தோழியின் அருகில் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்த சதா ஒரு மோசமான சூழலை எதிர் நோக்கி பயத்துடன் இருந்தாள்.  மங்கையின் மூச்சு குறைய ஆரம்பித்ததை அவளால் உணர முடிந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா” என்று வேண்டுதலுதலுடன் திகிலுடன் காத்திருந்தாள்.

சுற்றிலும் இருந்தவர்களை பரிதவிப்புடன் கலவரம் முகத்தில் தெரிய கெஞ்சுதலுடன் பார்த்தாள்.

“வழி விடுங்க” என்று கனத்த குரலுடன் ஒருவன் அங்கு வந்தான். அவளருகில் வந்து மங்கையின் கையை பிடித்து பல்ஸ் பார்த்தான்.

“ஷி ஈஸ் அலைவ். ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் கூட்டிட்டு போகணும்” என்று சொல்லிபடி அவளை தூக்கினான்,

“சார்… போலீஸ் கேஸ். மாட்டிங்க்காதீங்க” என்று ஒரு குரல் எச்சரிக்க,

“ஒரு உயிரை காப்பாத்தறதுக்கு ஜெயில்லயா போடப் போறாங்க. முதல்ல இந்த மாதிரி பயத்தை விடுத்து ஆக்ஸிடெண்டில் சிக்கியவர்களுக்கு உதவப் பாருங்கள்” என்று கடுமையாக கூறிவிட்டு மங்கையை தூக்கிக் கொண்டு சென்று காரில் ஏற்றினான்.

அவளுடன் சதாவும் ஏறிக் கொள்ள, அதற்குள் அங்கு வந்த ட்ராபிக் போலீஸ் ஒருவரை துணைக்கு அனுப்பினார்.

அருகிலேயே இருந்த மருத்துவமனையில் அவளை விரைவாக சேர்த்தனர். மங்கைக்கு தேவைப்பட்ட ரத்தத்தையும் அவனே தந்தான். அவள் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலை வரும்போதுதான் அவளுக்கு மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.

போலீஸ் கேட்ட விவரங்களை சொல்லிக் கொண்டே அவனை பார்த்தவளுக்கு சட்டென்று நினைவு வந்தது. இவன் அந்த ஜோலார்பேட்டை ஆள்தானே!

கடவுளே… அன்று அவனை அவள் காப்பாற்றியதற்கு இன்று பதில் கைமாறு செய்து விட்டான். நன்றி இறைவா! என்று அவனிடம் பேச ஆரம்பித்தபோது… கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு...

“ட்ரைவிங் லைசென்ஸ் இல்லை. பதினெட்டு இன்னும் ஆகவில்லை. அதற்குள் ஸ்கூட்டியில் ஊர்வலம். டபுள்ஸ் வேற… உங்கலையெல்லாம் யாரும் கண்டிக்கவே மாட்டார்களா? வீட்டில் தண்ணி தெளித்து விட்டார்களா? அவ்வளவு திமிர்! உயிர் போயிருந்தால் நீயா அவங்க அம்மா அப்பாவிற்கு பதில் சொல்வாய்.” என்று திட்ட ஆம்பித்தான்.

திருதிருவென்று சதா முழிக்க,

“உன்னிடம் யார் ஸ்கூட்டியை தந்தது? உங்கப்பா யார்? செல் நம்பர் சொல்லு” என்றபடி செல்போனை கையில் எடுத்து அழைப்பு விடுக்கத் தயாரானான்.

“ஐயோ வீட்டில யாருக்கும் தெரியாது சார். எங்கப்பா போலீஸ் சார். அடி பின்னிடுவார்.” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

“அடி வாங்கணும். அப்போதுதான் அறிவு வரும். நான் சொல்லாட்டியும் வீட்டிற்கு தெரியத்தான் போகுது இனியாவது ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனை ஃபாலோ பண்ணப்பார்” என்று கடிந்து கொண்டு திரும்பினான்.

“விடுங்க தம்பி!. இந்த காலத்து பிள்ளைங்க அடங்கமாட்டாதுங்க.  நம்ம கிட்டயே அப்பா போலீஸ்னு கதை விடுது பாருங்க. என்ன ஒரு காவாலித்தனம் அதிகம். இதெல்லாம் கல்யாணம் பண்ணி…” என்று துணைக்கு வந்த போலீஸ் புலம்ப ஆரம்பித்தார்.

‘காவாலியா!’ கோபம் வர தலை சிலிப்பிக் கொண்டு அவள் திரும்பிக் கொண்டாள். சற்று பொறுத்து அவனை தேடியபோது அவன் கிளம்பி போய் விட்டது தெரிய வந்தது.

ஆபத்து  நேரத்தில் வந்து உதவியவனை பற்றி அவள் தெரிந்து கொள்ள முடியாமல் போயிற்று. ஆனாலும் அவன் முகம் மனதில் பதிந்து போய் விட்டது. குட் ஃபெல்லோ! அவன் சொன்னதுகூட  நூறு சதவிகிதம் சரிதான்!

அவனை மீண்டும் எப்போது சந்தித்தாள்?.  

டியர் ரீடர்ஸ்,

இன்னும் கொஞ்சம் விளக்கம் அடுத்த பகுதியில். இப்போது கடந்த கால வலி மட்டுமே இருவர் மனதிலும் நிறைந்திருக்கிறது. இது மனதை கடினமாக்கி விளையாட்டு காட்டும். ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள இந்த மனநிலை சரியானதல்ல! இன்னும் காத்திருக்க வேண்டும்!

அன்புடன்

சாகம்பரி 

Episode # 13

Episode # 15

தொடரும்

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்saaru 2018-12-06 22:08
Randum randu vitham
Nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-12-05 04:13
Sadha-ku ippadi oru fb ethir parkala.. poi-ye pidikkatha Bhuvan poi solra Sadha.. Enna nadakkum :Q: Oru velai Sadha vera ethavathu justification vachiruppalo :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்SAJU 2018-12-04 21:58
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-12-04 19:53
Irandu perum aduthanga pathi oru secret flashback vachirukkanga. Sasha kandupodichutanga aana Bhuvan? When will it get solved and how :Q: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்AdharvJo 2018-12-04 18:46
:Q: Buvan-k sadha oda indha part of the story theriyadho or like before sadha oda face parkalaiyo illai sadha oda appearance change agivittadha :Q: Anyway rendu perum are locked in the wedding rings so let them slowly sort it out :yes: wow then sadha must be aware of the G.box secret :dance:

Rajan oda ferocious act is nerve wracking facepalm sad of that little girl anyway past is past :sad:

Karan sonna mathiri buvan-um poi sollinaru thane apo avarukku ena thandanai kodupinga….yep as karan said buvan-k avroda state of mind mele avarukke nambikai illadhapodhu wat to do....lets wait and watch! I liked buvan's statement in saving a life :clap: well said!!

Also madam ji poi solla kudadhun prioritize seivadhu super (y)

Thank you for this interesting update Ms Sagampari :clap: :clap: Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-12-04 18:25
சூப்பர் மேம்... :clap: :clap:
காத்திருத்தலும், பொறுமையும் மிகவும் சிறந்தது.. ஆனால் அதை கடைபிடிப்பது மட்டுமே கடினமானது... :yes: :roll: :-)
காதல் கண்ணாம்பூச்சி இருவருக்குள்ளும்.. :lol: :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்Srivi 2018-12-04 17:40
Ada..sis, indha FB yum nalla irukke.. Maari Maari appove help pannirukanga..sema la..naan expect Panna madhiri, Rajan than accident pannirukanumnu ninaichen.. Sadly it became true .. Ada sikram purinchikonga pa.. ..
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 19 Feb 2019 19:13
கண்மூடி உறங்கும் புவனை பார்த்தபடி மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்த சதாக்ஷிக்கும் உறக்கம் வர ஆரம்பித்தது. உறக்கம் போலொரு தொற்று வியாதி உண்டா என்ன?

கண்களை நித்திரா தேவி தழுவிக் கொண்ட கடைசி நொடியில் சதாவிற்கு திடுமென ஒரு நினைவு வந்தது. அவளுடை காதல் கணவன் புவன் துயில் கொள்ளும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த நினைவு வந்த்து.

அவளுடைய குட்டி கிருஷ்ணர் போலவே இவனும் இருக்கிறானே. சிறு வயதில் அவளிடம் ஒரு கிருஷ்ணர் சிலை இருந்தது. மதுராவில் இருந்து அப்பா வாங்கி வந்தது. குழலூதும் கண்ணன் ஒற்றை காலை மடித்து நின்று கள்ள சிரிப்பு சிரிக்கும் நிலை!

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 12 Feb 2019 20:50
ஆயுஸ் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டாலும் இன்னும் கண்விழிக்கவில்லை. அதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறியிருந்தார். மிகவும் சிக்கலான சிகிச்சை என்பதால் இதற்கென மருத்துவ குழு அமைக்கப்பட்டது. க்ளௌட் இணைப்பின் மூலம் வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் புவன் அங்கிருப்பது நல்லது என்று நினைத்தான். அவனுக்கும் சில வெளி நாட்டு மருத்துவர்களை தெரியும். அவர்களிடமும் ஆலோசனை பெற முடியும் என்று எண்ணினான்.

*******************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 06 Feb 2019 06:24
புவன் தேடலுடன்….தொலைதூரத்தில் மரங்களுக்கிடையே தெரிந்த வெளிச்ச குகையை நோக்கி அடியெடுத்து வைத்தான்… திடீரென்று பெரும் சப்தத்துடன் ஒரு புகைவண்டி புகையை கக்கிக் கொண்டு காலதேசவர்தமானங்களை கடந்து வருவதுபோல அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது…

உண்மையில் அது அவனை நோக்கித்தான் வருகிறதா..?

அதன் பாதையில் அவன் நிற்கிறானா?

இல்லை…. அவன் சற்று உயரமான இடத்தில் நின்று கொண்டிருந்தான். நிம்மதியுடன் திரும்பினால்… கோபக்கனல் தெறிக்க சதா நின்றாள்…

**********************

படிக்கத் தவறாதீர்கள்!!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-23
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 30 Jan 2019 03:19
தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தபோதுதான் புவன் அதனை கவனித்தான். அந்த தங்கவண்ண ரோஜா பூத்திருந்தது. சதா ஆசையாக நட்டு வைத்த செடி… இன்று பூத்திருந்தது.

ஒவ்வொருவரும் இப்படித்தான் மனதிற்குள் அழகிய கனவுகளை விதைத்து காத்திருக்கிருக்கின்றனர். அது முளை விட்டு கிளைத்து எழுந்து பூத்து குலுங்கும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஏனோ தெரியவில்லை சில செடிகள் மட்டுமே காலத்தின் கட்டளைக்கு ஏற்ப புவியீர்ப்பு விசையை எதிர்த்து எழுந்து பூத்து குலுங்குகின்றன. சில மண்ணிற்குள்ளேயே புதைந்து போகின்றன.

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-22
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 23 Jan 2019 06:45
கரணை இழுத்துக் கொண்டு புவனின் அறையை விட்டு வெளியே வந்த ஆயுஷ், நேராக ஹாலிற்கு சென்று சோபாவில் அமர்ந்தான்.

“உஸ்…. அப்பாடி… புவன் சார் மரண பயத்தை காட்டிட்டார்… அம்புட்டுதான்… இத்தோட நான் க்ளோஸ்னு நினைச்சேன்” என்று சொல்ல,

“ம்… ஆனால் அவனே எண்ட்ல ஸ்டாப் ஆயிட்டான். ஒருவேளை நம்மை பயமுறுத்த இதை செய்திருப்பானோ… “

“இனிமே நாம் அவர் வழிக்கு போகவே கூடாது. கூடவே இருந்து எல்லாம் தெரிஞ்சிகிட்டு நம்மை கவுத்திட்டார்”

“என்ன ஆயுஷ்… பயந்துட்டியா?”

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-sagambari-kumar-21

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top