(Reading time: 18 - 36 minutes)

நா சொல்றத கேட்டனா நிறைய பணம் கிடைக்கும் நீயும் நிம்மதியா படிக்கலாம்.உன் மேல இரக்கப்பட்டு தான் இதை உன்கிட்ட சொல்றேன்.எத்தனை பேர் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காம இருக்காங்க தெரியுமா..

இதுமாதிரி நிறைய பேருக்கு நா உதவி பண்ணிருக்கேன்.நா கூப்பிடுற அப்போ கூப்பிடுற இடத்துக்கு சத்தமில்லாம வந்துட்டு போனா போதும்.நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி ஜாலியா என்ஜாய் பண்ணலாம் நினைச்ச ட்ரெஸ் வாங்கலாம் நினைச்ச மாதிரி செலவு பண்ணலாம்னு..”,எனும் போதே கண்களில் நீர் கோர்த்திருந்தது.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ தர்ம சங்கடமாய் போய்விட்டது.என்ன கொடுமை இதெல்லாம் சின்ன பெண்களிடம் பேச வேண்டிய பேச்சா அதுவும் ஒரு பெண்ணே இப்படி என்றால்..

“அதுக்கு மேல அவங்க பேசுறத கேக்க முடியாம நா அவங்களை எதிர்த்து பேசினேன்.

என்ன மேம் இப்படியெல்லாம் பேசுறீங்க..இதெல்லாம் எவ்ளோ பெரிய தப்புனு தெரியுமா..காசு இல்லாதவங்கனா என்ன வேணா பேசுவீங்களா..நீங்க நினைக்குற மாதிரியான பொண்ணு நா இல்லனு கத்திவிட்டேன்.

“ஆனா அதுக்கெல்லாம் அவங்க கொஞ்சமும் அசைஞ்ச மாதிரி இல்ல..ரொம்ப கூலா இங்க பாரு உன்னை மாதிரி எத்தனையோ பேரை பாத்துருக்கேன்.இப்படி பேசுனவங்க எல்லாம் அப்பறம் அதே வாயால என்னை வாழ்த்திட்டு தான் போய்ருக்காங்க..சோ பொறுமையா யோசிச்சு முடிவு எடு.அதிர்ஷடம் எப்போவாவது தான் உன்னை தேடி வரும் மிஸ் பண்ணிடாதனு சொன்னாங்க..”,என குலுங்கி அழ ஆரம்பித்திருந்தள்.

“அழாதம்மா..என்னால முடிஞ்ச உதவியை நா கண்டிப்பா பண்றேன்..அதுக்கப்பறம் உன்கிட்ட பேச முயற்சி பண்ணாங்களா?நீ ப்ரின்சிபால்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருக்கலாம் தான?”

கசந்த முறுவலை உதிர்த்தவள்,”அண்ணா அடுத்து ஒரு வாரத்துக்கு அவங்க எதுவும் பேசிக்கல நானும் விட்டா போதும்னு அமைதியாய்ட்டேன்.

அடுத்த இரண்டு நாள்ல மறுபடியும் என்னை கூப்பிட்டவங்க என்ன முடிவு பண்ணிருக்கனு கேட்டாங்க..

எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு என்ன மேம் அன்னைக்கே என் முடிவை சொல்லிட்டேன்.ஏன் மறுபடியும் மறுபடியும் டிஸ்டர்ப் பண்றீங்க..இன்னோரு தடவை இப்படி பண்ணீங்கனா நா ப்ரின்சிபல்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருவேன்னு சொன்னேன்.

ஏளனமா என்னை பர்த்து சிரிச்சாங்க..இப்படி ஒரு காரியத்தை அவருக்கு தெரியாம பண்ண முடியுமா..சொல்ல போனா சில நேரங்களில் அவருக்கு கூட கம்பனி கொடுக்க வேண்டியது இருக்கும்.நானாவது உன்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன்.

அந்த ஆள்கிட்ட போனா உன்னையெல்லாம் ஒரு வழி ஆக்காம விடமாட்டான்னு சொல்லி கேவலமா பாத்தாங்க..”,என்று தலை குனிந்து கொண்டாள்.

“ஷிட்!!!”

“இப்போ வர நா செத்துருவேன் தற்கொலை பண்ணிப்பேன்னு சொல்லி தான் தப்பிச்சுட்டு இருக்கேன் ணா..அவங்க பேசுறத வச்சு பார்த்தா இந்த விஷயம் எங்க கரஸ்பாண்டட்க்கு தெரியாம தான் நடக்குதுனு நினைக்குறேன்.

உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் அவரு ரெண்டு மூணு இன்ஸ்ட்டியூஷன் நடத்திட்டு இருக்காருஅதனால அவருக்கு இங்க நடக்குறதெல்லாம் தெரிய வாய்பில்ல.

அது மட்டுமில்லாம ஏதோ ஒரு கட்டத்துல சில பொண்ணுங்களை சம்மதிக்க வச்சுராங்க இல்லனா சில பணக்கார பொண்ணுங்க அவங்களாவே..

அதனால இப்போ வர இது பெரிய பிரச்சனை ஆகல போல.அப்பறம் எங்க வார்டனோட கான்டாக்ட்ல இருக்குறதுல பாதிக்கு மேல பெரிய புள்ளிங்க போல.அவங்க ஆள் பலம் பணபலம் எல்லாம் கொடுக்குற தைரியத்துல தான் இவங்ளும் இப்படி ஓபனா பொண்ணுங்ககிட்ட பேசுறாங்க..

இப்போதைக்கு எனக்கு இருக்குற டைம் இந்த செமஸ்டர் மட்டும் தான் அண்ணா..எக்ஸாம் முடிச்சுட்டு அவங்க சொல்றத கேக்கணும்னு சொல்லிருக்காங்க இல்ல எக்ஸாம் மார்க்ஸை கம்மி பண்ணி படிப்பை நிறுத்துற மாதிரி பண்ணுவேன்னு சொல்லிடாங்க..

நேத்து தற்செயலா தான் அருணாவை பார்த்தேன்.மனசு பாரம் குறையட்டும்னு அவகிட்ட கொட்டி தீர்த்தேன் ணா..அவ உங்களைபத்தி சொன்னதுனால தான் நா இங்க வந்தேன்.

ஆனா உண்மையை சொல்லணும்னா அவங்க எல்லாம் பெரிய இடம் ணா..நம்மளால எதுவும் பண்ண முடியாது அதுதான் எதார்த்தம்.நானே படிப்பை விட்டுட்டு ஊருக்கே போயிரலாம்னு இருக்கேன் ணா..நமக்கு எதுக்கு இந்த படிப்பெல்லாம்..”,எனும்போதே அவள் குரல் கரகரத்தது.

“இங்க பாரும்மா..அப்படியெல்லாம் தைரியத்தை விட கூடாது.தனியாவே இத்தனை நாள் போராடியிருக்க இப்போ அண்ணா நா இருக்கேன்.இன்னும் தைரியமா இரு..கண்டிப்பா இந்த பிரச்சனையை நா முடிவுக்கு கொண்டு வரேன்.அதுவர நீ எந்த தப்பான முடிவும் எடுக்காம இருந்தா போதும் சரியா?”,என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

அவனுக்குத் தெரியும் இது அத்தனை சுலபமான காரியம் இல்லையென..இருந்தும் அவனுக்கான ஒரே நம்பிக்கை அந்த கல்லூரியின் தாளாளர் தான்.அவரை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.நிச்சயம் நல்ல மனிதர் தான் அவன் பார்த்தவரையில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.