(Reading time: 18 - 36 minutes)

இப்படிபட்ட விஷயத்திற்கு நிச்சயம் ஒரு போதும் துணை போக மாட்டார் என்றே தோன்றியது அவரிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் சிந்தனையிலேயே கரைந்தவன் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த தாளாளரை போனில் அழைத்து அப்பாயிண்மெண்ட் வாங்கினான்.

மறுநாள் அவரை சந்திக்கச் சென்றவன் சில நிமிடங்கள் வெளியே காத்திருக்க பின் அவர் உள்ளே அழைத்தார்.

“வாங்க டாக்டர் எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் சார்..நீங்க எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன்..என்ன இவ்ளோ தூரம் சொல்லுங்க என்ன விஷயம்?”,என நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“சார் கொஞ்சம் பர்சனல்..”,என்றவன் அருகிலிருந்த அவர் பீஏ வை பார்த்து தயங்கி நிறுத்த அவரை வெளியே இருக்குமாறு பணித்தார்.

“சொல்லுங்க டாக்டர் ஏன் இவ்ளோ தயங்குறீங்க?”

“சார் நா சொல்ல வர்றதை உணர்ச்சிவசப்படாம கொஞ்சம் பொறுமையா கேளுங்க..இது உங்க மெடிக்கல் காலேஜ் சம்மந்தபட்ட விஷயம்..உங்க கவனத்திற்கு வராத ஒரு பெரிய தப்பை பத்தி தான் பேசனும்..”

“வாட் யூ மீன் மிஸ்டர் திவ்யாந்த்.!!?”

“சார் ப்ளீஸ்..ரிலாக்ஸ்..உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பகையும் கிடையாது அப்படியிருக்க அநாவசியமா உங்க பேரை கெடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல..அந்த பாயிண்ட் ஆப் வியூ ல நா சொல்ல வர்றதை கேட்டீங்கனா உங்களுக்கு புரிஞ்சுக்க முடியும்.”

“சரி சொல்லுங்க..”

“சார் இந்த விஷயம் இரண்டு நாள் முன்னாடி தான் எனக்கு தெரியும்.வேற எங்கேயாவது நடந்துருந்தா என்னால இந்தளவு பேச முடியுமானு தெரில பட் நாம மீட் பண்ணத வச்சு உங்க மேல பெரிய நம்பிக்கை இருக்கு அதனால தான் டேரக்டா உங்ககிட்ட வந்துட்டேன்.

எப்படி ஆரம்பிக்குறதுனு கூட தெரில உங்க காலேஜோட லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் பொண்ணுங்களை தப்பான பாதைக்கு வர சொல்லி வற்புறுத்துறதாகவும் அதுக்கு உங்க பிரின்சிபல் முதற்கொண்டு இன்னும் சிலரின் தலையீடு இருப்பதாவும் சொல்றாங்க..

அதுமட்டுமில்லாம அப்படி அவங்க வழிக்கு வராத பொண்ணுங்களை காலேஜை விட்டு அனுப்பிருவோம்னும் பேரை கெடுத்துருவோம்னும் மிரட்ராங்களாம்.இது ரொம்ப நாளா நடக்குற விஷயம் மாதிரி தான் தெரியுது சார்..”

“என்ன திவ்யாந்த் என்னென்னவோ சொல்றீங்க என் காலேஜ் பேரை கெடுக்க யாரோ இப்படி ஒரு வதந்தியை பரப்பிருக்காங்க..”

“சார் அப்படி யாரோ சொல்லிருந்தா எனக்கு ஏன் வம்புனு நா பாட்டுக்கு போய்ருப்பேன்.விஷயத்தை சொன்னது பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணு அதுவும் ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பம்.அந்த பொண்ணு படிப்பை தொலைச்சுருவோமோனு கண்ல வலியோட என்கிட்ட பேசின ஒவ்வொரு வார்த்தையும் தான் நா இப்போ உங்க முன்னாடி உக்காந்து பேசிட்டு இருக்கிறதுக்கு முக்கிய காரணமே..”

கேட்டவரோ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.சில நொடிகள் அவர் சிந்தனையில் சுழலவிட்டவன் அமைதி காத்தான்.இரண்டு நிமிடத்தில் தலை நிமிர்ந்தவர்,

“இன்னுமும் என்னால நம்ப முடில திவ்யாந்த்.என் மூணு இன்ஸ்டியூஷனும் தான் என் உயிர் அப்படியிருக்க எப்படி இது என் பார்வைக்கு படாம போச்சு..இல்ல மத்த ரெண்டும் என் டேரக்ட் கன்ட்ரோல தான் இருக்கு இந்த காலேஜோட பிரின்சிபலா இருக்குறது என் மனைவிக்கு அண்ணன் முறையில் இருக்குறவரு.

ஓரளவு நெருங்கிய சொந்தம் தான் அந்த நம்பிக்கைல தான் அசால்டா இருந்துட்டேன்னு நினைக்குறேன்.நா எப்பவோ செஞ்ச புண்ணியம் தான் உங்க மூலமா விஷயம் நேரா என் காதுக்கு வந்துருக்கு.மீடியா ப்ரஸ்னு போயிருந்தா..கடவுளே அந்த அவமானத்துலயே நா உயிர் விட்டுருப்பேன் நிச்சயமா..”

“ஐயோ சார் அதான் அப்படி ஒண்ணும் ஆகலயே ஏன் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க..”

“இல்ல திவ்யாந்த் இப்போ என் மனநிலைமை அந்தமாதிரி இருக்கு கூட இருக்குற நம்பிக்கையானவங்கனு நினைச்சவங்களே இப்படி பண்ணிணா இதுக்கு மேல நா யாரை நம்பணும் நம்ப கூடாதுனு யோசிச்சாலே பைத்தியம் பிடிக்குது..ப்ளீஸ் திவ்யாந்த் இந்த ப்ராப்ளம் முடியுற வரை உங்க ஹெல்ப் எனக்கு தேவை கண்டிப்பா..”

“நிச்சயமா என்னால முடிஞ்ச உதவியை பண்றேன் சார்..நீங்க முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க..இன்னைக்கு ஒருநாள் கொஞ்சம் ஃபீரியா விடுங்க அதுகுள்ள என்ன பண்ணலாம்னு நானும் யோசிக்குறேன்.அண்ட் ரொம்ப முக்கியம் இதை யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிடாதீங்க..நீங்க சொல்ற மாதிரி இதுல யாரை நம்புறதுனு எனக்குமே தெரில..”

“ம்ம் சரி டாக்டர்.இந்த உதவிகளை என்னைக்கும் நா மறக்கமாட்டேன்.நீங்க என்ன வேணா திட்டம் சொல்லுங்க..அவங்களை ஆதாரத்தோட கையும் களவுமா பிடிக்கணும்..அதே நேரம் காலேஜ் பேரை முடிஞ்சவரை காப்பாத்த பாக்குறேன் நா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.