(Reading time: 18 - 36 minutes)

வழக்கத்தை விடவும் மிகவும் மோசமான விதத்தில் அவளிடம் அவர் பேசிக் கொண்டிருக்க அத்தனை அழுகை அவமானத்தையும் உள்ளடக்கி இதில் சம்மந்தப்பட்ட இரு பேராசிரியர்கள் மற்றும் பிரின்சிபாலின் பெயரை அவர் வாயிலேயே வாக்கு மூலமாக பெற்றுக் கொண்டாள்.

எப்போதுமே கல்லூரியில் அவளை சந்திப்பதை முடிந்தவரை தவிர்க்கும் திவ்யாந்தை மறுநாள் பார்த்தே தீர வேண்டும் எனக் கூறி மறைவாய் ஓரிடத்தில் சந்தித்தவள் அவன் கொடுத்த கேமராவை அவனிடம் ஒப்படைத்து நடந்தை மேலோட்டமாய் கூறி அழ ஆரம்பித்திருந்தாள்.

“ரொம்ப அவமானமா இருக்குண்ணா..அவங்க பேசுறதை எல்லாம் காது கொடுத்து கேக்க முடில..செத்துரலாம் போல இருக்கு..”

“என்னம்மா உனக்காக தான நா இவ்ளோ ரிஸ்க் எடுத்து இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்.இப்படியெல்லாம் பேசலாமா?மிஞ்சி போனா நாலு நாள் எல்லா பிரச்சனையும் முடிஞ்சுரும் தைரியமா இருக்கணும்”,என சமாதானம் கூறி அனுப்பி வைத்தான்.

அன்றே தாளாளரை சந்தித்து மொத்த ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து அவரிடம் கொடுத்தான்.எக்காரணம் கொண்டும் அந்த வீடியோவும் மற்ற பெண்கள் கொடுத்த தகவலும் மீடியாவின் கையில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்திக் கூறினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எதற்கும் கடைசியாய் ஒருமுறை அந்த வார்டனிடம் பேசிப் பார்ப்பதாய் கூறியவன் மறுநாள் அந்த டிரைவின் ரெஸ்டாரண்டில் அவளை சந்தித்து முடிந்த அளவு வழிக்கு வர வைக்க பார்த்தான் ஆனால் அவளோ எதற்கும் பணியும்படி தெரியாத காரணத்தால் அவருக்கு அழைத்து தன் பேரும் சீதாவின் பேரும் முக்கியமாய் வெளியில் வராதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.

இதற்கிடையில் திவ்யாந்தின் மேல் சந்தேகம் எழுந்திருந்த நிலையில் தான் பிரின்சிபலை சுலோச்சனா அழைத்தது.இருந்த கடுப்பில் அவரால் முடிந்தவரை அவனைப் பற்றி அவதூறு பரப்பியிருந்தார்.

அனைத்து குளறுபடிகளையும் தாண்டி கல்லூரி தாளாளர் மூலம் கமிஷ்னரிடம் அனைத்து ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டது.தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி உண்மையை ரகசியமாகவே வைத்திருந்து ஆதாரங்களை வெளியாடாமல் சம்மந்தபட்டவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே கைது செய்யப்பட்டிருந்தனர்.

என்னதான் மறைத்தாலும் மீடியா தங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் போட்டு கல்லூரி புகைப்படத்தையும் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு தான் இருந்தனர்.

திவ்யாந்திற்கோ எடுத்த பொறுப்பை ஒரு வழியாய் முடித்தோம் என்ற திருப்தி ஒருபுறம் இருந்தாலும் தனக்கும் வெண்பாக்குமான பிணக்குகளை இன்றே சரி செய்ய வேண்டும் என்பது தான் பிரதானமாய் இருந்தது.அந்த நினைவுகளிலேயே வீட்டிற்கு வந்தவனிடம் தான் தன் உணர்வுகளை கொட்டித் தீர்த்திருந்தாள் வெண்பா.

அனைத்தையும் கூறி முடித்துவிட்டு அவன் அவள் முகம் பார்த்திருக்க அவளோ கண்களின் கண்ணீர் கன்னத்தில் நழுவ அதை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அந்த இரவு நேர நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அலறியது வெண்பாவின் அலைப்பேசி.

தன்னருகில் இருந்ததை எடுத்தவன் அழைத்தது அவளின் தந்தை என்றவுடன் அவளிடம் நீட்ட சற்றே தன்னை மட்டுப்படுத்தியவள் அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தாள்.

“வெண்பா மா அப்பா பேசுறேன் டா..நியூஸ் எல்லாம் பாத்தேன்.நேத்து உங்கம்மா விசாரிச்சப்போவே எனக்கு தெரிஞ்சவங்களை வச்சு விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன்.மாப்பிள்ளை மேல எந்த தப்பும் இல்ல டா..உங்கம்மா என்ன சொன்னாலும் நம்பாத..என்னால எதையும் வெளிப்படையா சொல்ல முடியாத சூழ்நிலைல இருக்கேன்.உங்கம்மா அங்க வந்த நோக்கம் நிச்சயமா நல்லதுக்காக இல்ல டா..நீ தெளிவான பொண்ணு புரிஞ்சுப்பனு நம்புறேன்.

உன் வாழ்க்கை உன் கையில பாத்து நடந்துக்கோ டா..அம்மா இன்னைக்கு நைட் கிளம்பிருவா..சோ நீ நிம்மதியா இரு..மாப்பிள்ளையை விசாரிச்சதா சொல்லு டா”,என்று அவரே அனைத்தையும் பேசிவிட்டு பதில்கூட எதிர்பார்க்காமல் வைத்து விட்டிருந்தார்.

மொபைலை கட்டிலில் எறிந்தவள் முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தாள்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப் பெறும்!

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.