(Reading time: 18 - 36 minutes)

நாம அடிக்கடி இங்க மீட் பண்ண வேணாம் டாக்டர் நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்னு உங்களுக்கு எஸ் எம் எஸ் பண்றேன்.கொஞ்சம் சிரமம் பார்க்காம வந்துருங்க ப்ளீஸ்..”

“சார் என்ன சார் ப்ளீஸ் எல்லாம் சொல்லிகிட்டு கண்டிப்பா வரேன் நீங்க டென்ஷன் ஆகாம இருங்க வரேன் சார்.”

அதன்பிறகு வெகுவாய் யோசித்தவன் மேலோட்டமாய் ஒரு திட்டத்தை வகுத்திருந்தான்.மறுநாள் அவர் கூறியது போலவே சந்திக்க வேண்டிய இடத்தையும் நேரத்தையும் திவ்யாந்திற்கு  மெசேஜ் அனுப்பியிருந்தார்.

அதன்படி அந்த கெஸ்ட் கவுஸை அடைந்தவன் அவரிடம் தன் யோசனையை விவரிக்க ஆரம்பித்தான்.

“சார் இது ஜஸ்ட் என் ஐடியா தான்.இதை விட பெட்டரா எதாவது வேணும்னாலும் பண்ணலாம்..எனக்கு இந்த விஷயம் யார் மூலமா தெரிய வந்ததோ அந்த பொண்ணை வச்சே ஆதாரங்களை தயார் பண்ணுவோம்..ஆடியோவோ இல்ல வீடியோவோ அது அந்த நேரத்துல பாத்துக்கலாம்.

இந்த ஆதாரங்கள் நம்ம கைக்கு வர்ற வர உங்களுக்கு நம்பிக்கையான ஒண்ணு ரெண்டு ப்ரொபசர்ஸை வச்சு அந்த பொண்ணை கான்டாக்ட் பண்ணலாம்.என்ன சார் சொல்றீங்க?”

“ம்ம் நல்லா தான் இருக்கு தம்பி ஆனாலும் நேத்தே சொன்ன மாதிரி யாரை நம்பணும் யாரை நம்பக் கூடாதுனு எனக்கு தெரில..ம்ம்ம் வேணா ஒண்ணு பண்ணலாம் ஒரு மாசத்துக்கு ஸ்பெஷல் டியூட்டரா நீங்களே அங்க போனா என்ன?

அந்த பொண்ணும் உங்களை அங்க பார்த்தா கொஞ்சம் தைரியமா இந்த விஷயத்துல உதவ வாய்ப்பு இருக்கு இல்லையா?”

“நீங்க சொல்றதும் சரிதான் சார் ஆனா யாருக்கும் சந்தேகம் வந்துராதா?”

“இல்ல திவ்யாந்த் அப்படி ஒண்ணும் ஆகாது எப்போவாவது இந்த மாதிரி ஸ்பெஷல் க்ளாஸஸ் அரேண்ஞ் பண்ணுவோம் என்ன மினிமம் 6-7 மாசம் ஒத்துக்குவோம்..உங்களுக்கு ஒரு மாசம் ஆனா அதனால ஒண்ணும் யாருக்கும் பெரிய சந்தேகம் வராதுனு தான் தோணுது.

நாம பண்ண போற ஒரே விஷயம் நீங்க என் ரெக்கமண்டேஷன்ல உள்ளே வந்தமாதிரி தெரியாம வேற ஏற்பாடு பண்ணணும்..”

“தட் சவுண்ட்ஸ் குட் சார்..அப்போ அப்படியே பண்ணிருவோம்.நா அந்த பொண்ணையும் அலார்ட் பண்றேன்.நீங்க வேற யார் மூலமாவது எனக்கான ரெக்கமண்டேஷன் லெட்டர் மட்டும் ரெடி பண்ணுங்க சார்.கவலபடாதீங்க எல்லாம் நல்லபடியா முடியும்.”

அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடந்தது.தாளாளர் கூறியபடியே திவ்யாந்திற்கான லெட்டரை தயார் செய்து அதை அவன் தன்னிடம் காட்டிவிட்டதாக கல்லூரி பிரின்சிபலிற்கு தகவல் அனுப்பிவிட்டார்.

அதற்கு நடுவில் தனக்கு தெரிந்தவர் மூலம் கமிஷ்னரை தொடர்பு கொண்டு பிரச்சனையையும் அதற்கு தான் எடுக்க போகும் முயற்சியையும் கூறினார்.கல்லூரியின் பெயர் பொதுவாய் கெட்டு போய்விடாமலிருக்கவே இந்த ஏற்பாடு என்றும் கூறினார்.

முதலில் மிகவுமே தயங்கியவர் பின் ஒருவழியாய் ஒத்துக் கொண்டார்.வெளியில் அனைத்தையும் திடமாக திட்டமிட்டபின் கல்லூரிக்குள் நுழைந்தான் திவ்யாந்த்.

ஏனோ அவனை பார்த்த முதல் சந்திப்பிலேயே பிரின்சிபலிற்கு அவனை பிடிக்காமல் போனது.அதுவும் அவன் குறிப்பாய் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தான் வகுப்பெடுக்க போவதாய் கூறியது இன்னமும் கடுப்பேற்றியது.

அவன் உள் நுழைந்த இரண்டு நாட்கள் சாதாரணமாய் தான் சென்றது.மூன்றாவது நாளிலிருந்து தான் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.சீதாவின் மூலம் தெரிந்த பெண்களிடமிருந்து வாக்குமூலமாய் விஷயத்தை பெறுவதற்காக அவர்களிடம் கிடைத்த நேரத்தில் சுருக்கமாய் விஷயத்தை கூறி ஒரு மொபைல் நம்பரை பகிர்ந்து ஆடியோ மெசெஜாக அனுப்புமாறு கூறினான்.

மதிய வேளையில் ஹாஸ்ட்டல் காவலாளியிடம் பேச்சு கொடுத்தவன் விஷயத்தை வாங்க பார்க்க அவனோ ஒன்றும் தெரியாது என அடித்துக் கூறினான்.

ஐந்நூறு ஆயிரம் என கொடுத்து அவனை வழிக்குக் கொண்டு வந்து அவனிடமும் தேவையான தகவலைப் பெற்றான்.அனைத்து தரப்பிடமும் பெறப்பட்ட ஆதாரங்களில் முக்கியமாய் அவன் காட்ட வேண்டியிருந்தது,இந்த தவறுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பதையே.

ஓரளவு அனைத்துமே சரியாய் இருப்பதாய் எண்ணி நிம்மதி அடைந்த நேரம் ஒரு பெண்ணிடம் இருந்து அவர்களுக்கு கிடைத்த தகவல் ஒரு பேராசிரியர் அவளை அழைத்து இந்த விஷயம் குறித்து மிரட்டியதாய் கூறியது.

திவ்யாந்திற்கு தலையே சுற்றியது இன்னும் எத்தனை பேர் தான் இதில் சம்மந்தப்பட்டவர்கள்?யார் யாரென சந்தேகப்படுவது ஒன்றும் புரியவில்லை.

பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தாளாளரிடம் பேசிவிட்டு தன் திட்டத்தை செயல்படுத்த எண்ணி சீதாவிடம் விஷயத்தை விவரித்து அனுப்பினான்.

அதன்படி அடுத்த பத்து நாட்களில் அவளை அழைத்த ஹாஸ்ட்டல் வார்டன் மறுபடியும் அதே விஷயத்தை பத்தி பேச ஆரம்பிக்க அனைத்தையும் தன் டிரஸில் பொருத்தியிருந்த பட்டன் கேமராவில் படமாக்கினாள் சீதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.