அதன்பிறகு அருள்மொழி பதிலுக்கு எந்த செய்தியும் அனுப்பவில்லை. அவனும் அடுத்ததாக எந்த செய்தியும் அனுப்பவுமில்லை. சாதாரணமாக விளையாடி பார்க்கவே தான் இப்படியெல்லாம் அவன் குறுஞ்செய்தி அனுப்பியது. மற்றப்படி அவன் வீட்டுக்கெல்லாம் வரமாட்டான் என்று தான் சொல்லிக் கொண்டனர்.
அப்படியே அவன் வீட்டுக்கு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை தான், இருந்தாலும் இதுவரை அப்படி எந்த ஆடவனையும், ஏன் பெண் தோழிகளையே அவ்வளவாக அழைத்து வந்ததில்லை. கலையை பொறுத்தவரை நட்பு கூட குறிப்பிட்ட எல்லையோடு இருக்க வேண்டும் என்பது தான், அதனால் அருள்மொழி அதையெல்லாம் கடைப்பிடிப்பாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
கலையே இப்படியென்றால் இலக்கியாவின் தந்தை மாணிக்கத்தைப் பற்றி சொல்லவா வேண்டும், அவரும் கிட்டத்தட்ட அப்படித்தான் கூறுவார். சார்லஸை போய் சந்திக்கலாம் என்று இலக்கியா சொன்னது கூட அருளை சீண்டுவதற்காக தான், அதனால் இரு தோழிகளும் சொன்னது போல் அமுதன் இன்று வீட்டுக்கு வந்துவிடுவானோ என்று சிறு தவிப்போடு இருக்க, அவன் அதேபோல் வந்து நின்றால் பின்னே மயக்கம் வருவது நடக்கும் தானே,
ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை, இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன மச்சி சொன்னது போல வந்துட்டான்..” இலக்கியா அருள்மொழியின் காதில் கிசுகிசுக்க,
அவன் தனியாக வந்திருந்தால் கூட பரவாயில்லை, சுடரோடு வந்திருக்கிறானே என்று அருள் அவனை யோசனையோடு பார்த்தாள்.
சுடரொளியோ அவனை, “அத்தை, மாமா இது என்னோட ப்ரண்ட் சார்லி, லண்டன்ல இருந்து வந்திருக்கிறான்..” என்று புகழேந்தி பூங்கொடிக்கு அறிமுகப்படுத்தினாள்.
“என்ன மச்சி.. இவன் தான் சுடர் சொல்ற சார்லியா.. இது என்னடி புது ட்விஸ்ட்.. நீ அவனை தூர நிக்க வைக்க பார்த்தா, அவன் உன்னை நெருங்கிட்டானே..” என்று இலக்கியா மீண்டும் அவன் காதில் கிசுகிசுக்க, அருள் அவளை முறைத்தாள்.
சுடரொளியின் நண்பன் மட்டுமல்லாமல், அவன் கதிரவனின் தோழி ஆனந்தியின் மகன் என்பதால், வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் அவனை வரவேற்று உபசரிக்க, “என்ன மொழி, இலக்கியா ரெண்டுப்பேரும் திகைச்சு பார்க்கிறீங்க.. என்னை நீங்க இங்க எதிர்பார்க்கல இல்ல..” என்று அவன் இருவரையும் பார்த்து கேட்கவும், சுடர் உடபட அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.
“சார்லி உனக்கு ரெண்டுப்பேரையும் ஏற்கனவே தெரியுமா?” என்று சுடரொளி கேட்கவும்,
“தெரியும்.. ரெண்டுப்பேரும் என்னோட ஆஃபிஸ்ல தான் இண்டர்ன்ஷிப் செஞ்சாங்க.. போன முறை இங்க இருந்த இருபது நாளும் நான் தான் அவங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்தேன்..” என்றான்.
“ஓ அப்போ அன்னைக்கு இவங்களை பத்தி சொன்னப்பவே உனக்கு தெரிஞ்சுடுச்சா..” என்று அவள் மறுபடியும் கேட்க,
“ஆமாம்..” என்று அவன் கூறினான்.
“ஓ அப்போ தெரிஞ்சுக்கிட்டே தான் இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்பினியா?” என்று அருள்மொழி மனதில் நினைத்துக் கொண்டே அவனை முறைக்க, யாரும் பார்க்காத சமயம் அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.