(Reading time: 10 - 20 minutes)

டுத்த நாளோ “இலக்கியா எப்படி இருக்கா? அவளோட நம்பர் மிஸ் பண்ணிட்டேன்.. உங்க ரெண்டுப்பேரையும் மீட் பண்ணனும் போல இருக்கு ப்ளீஸ்..” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

“ நான் சொன்னேன் இல்ல.. சார்லஸ் தப்பானவரா இருக்க மாட்டாரு மச்சி, பாரு நான் சொன்னது போல நம்பரை மிஸ் பண்ணியிருக்காரு.. அதனால ஒருமுறை போயிட்டு வந்துடுவோம்..” என்று சொல்ல,

“ஹே சொன்னா கேக்க மாட்டீயா? உன்னைப்பத்தி விசாரிச்சதும் உனக்கு தலை கால் புரியல.. நமக்கு இது தேவையில்லாத விஷயம் இது.. நாம டெய்லி எத்தனையோ பேரை எதேச்சையா பார்க்க வேண்டியிருக்கு அதுக்காக அவங்க எல்லோரோடவும் ப்ரண்ட்ஷிப் வச்சிக்க முடியுமா?” என்றுக் கேட்டாள்.

இனி இங்கு இருக்கும் வரை அமுதன் இதுபோல குறுஞ்செய்தி தொடர்ந்து அனுப்பக் கூடும், அதனால் அதை தவிர்க்க,

“இங்கப்பாருங்க அமுதன், நான் ஏற்கனவே சொன்னது தான், இப்படி யாரோ வெளியாளுங்கக் கூட வெளிய போக வீட்ல சம்மதிக்க மாட்டாங்க.. இதுக்கும் மேல எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டாள்.

“ஹே நீ ரொம்ப தான் பண்ற மச்சி, சார்லஸ் தப்பானவர் இல்ல, அது அவர் கூட பழகின கொஞ்ச நாளிலேயே தெரிஞ்சுடுச்சு, அப்படியிருந்தும் நீ இப்படி செய்யக் கூடாது, இந்த மெசேஜ் அவரை ஹர்ட் பண்ணலாம் தெரியுமா?” என்று இலக்கியா சொல்லவும்,

“ஹர்ட் ஆனா ஆகட்டும், அதுக்காக நாம நம்மளை மாத்திக்கணும்னு அவசியமில்ல, அமுதன் லண்டன்ல இருந்து வந்திருக்கலாம், ஆனா எல்லாப் பொண்ணுங்களும் அவர் நினைக்கிற மாதிரி இருக்க மாட்டாங்க.. இப்படி அமுதனுக்கு சப்போர்ட் பண்ணாத..” என்று தீர்க்கமாக கூறினாள்.

“க்கூம் எல்லோருக்கும் சார்லஸ், ஆனா மேடம் மட்டும் அடிக்கொருதரம் அமுதன் அமுதன்னு சொல்லுவாங்களாம்.. ஆனா நான் இப்படி தான் சொல்லி ஓவரா சீன் போட்றது..” என்று அருள்மொழிக்கு கேட்காதபடி பேசவும்,

“என்னடி முனுமுனுக்குற..” என்று அவள் கேட்டாள்.

“ஒன்னும் இல்ல மச்சி, சும்மா தான்..” என்று இலக்கியா அதற்கு சமாளித்தாள்.

வரமுடியவில்லை என்று சொன்னதும் விட்டுவிடுவான் என்று இருவரும் நினைத்திருக்க, அவனோ.. “வெளிய வர விருப்பம் இல்லன்னா உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க மீட் பண்ணலாம், எப்படியோ உங்க ஸ்டடீஸ் முடிஞ்சுருக்கும், அதனால அனேகமா இலக்கியா சென்னைல உன்கூட தான் இருக்கா இல்லையா?” என்று திரும்ப ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

“இவன் நம்மல விடாம என்னடி தொந்தரவு கொடுத்துட்டுருக்கான்..” என்று எரிச்சலில் அருள் புலம்ப ஆரம்பித்தாள்.

“ஹே என்ன மச்சி, ரொம்ப பக்கத்துல இருந்து பார்க்கிறது போல கரெக்டா நான் உன்னோட இருக்கறதா சொல்றான்.. சரி நீ டென்ஷன் ஆகாத.. இதுவரைக்கும் மெசேஜ் தான் அனுப்புறானே தவிர போன் பண்ணலல்ல விடு.. ஒருவேளை சும்மா நம்மல சீண்டிப் பார்க்கிறானோ..”  என்று இலக்கியா கூறினாள்.

இதுவரை மரியாதையாக பன்மையில் அவனை பேசியவர்களுக்கு, இப்போது எரிச்சலில் ஒருமையில் தாவியிருந்தார்கள்.

“ஹலோ என்ன விளையாட்றீங்களா? நீங்க அட்ரஸ் கேட்டா உடனே அனுப்பிடுவோமா? ஒழுங்கா வந்த வேலையை முடிச்சிட்டு லண்டன் போய் சேருங்க..” என்ற குறுஞ்செய்தியோடு கோப ஸ்மைலியை அருள் அனுப்பி வைத்திருந்தாள்.

“நீங்க அட்ரஸ் கொடுக்கலன்னா என்ன? எனக்கு உங்க அட்ரஸ் கண்டுப்பிடிக்க  தெரியாதா? நான் கண்டுப்பிடுச்சிட்டேன், நாளைக்கு சண்டே இல்லையா.. நான் வருவேன், வெய்ட் பண்ணுங்க..” என்று அவன் பதிலுக்கு செய்தி அனுப்பவும்,

“என்னடி அட்ரஸ் கண்டுப்பிடிச்சிட்டேன்னு சொல்றான்.. ஒருவேளை சிம் வச்சு நம்ம அட்ரஸ் கண்டுப்பிடிச்சிருப்பானோ..” என்று இலக்கியா கேட்க,

“அப்படியெல்லாம் இல்ல மச்சி.. நீ சொன்னமாதிரி அவன் நம்மக்கிட்ட விளையாடி பார்க்கிறான்.. “ என்று அருள்மொழி கூறினாள்.

“ஒருவேளை இண்டர்ண்ஷிப்க்காக நாம ஆஃபிஸ்ல கொடுத்த டீடெயில்ஸ்ல அட்ரஸ் கண்டுப்பிடிச்சிருப்பானோ.. அப்போ சண்டே வருவானா?” மீண்டும் இலக்கியா சந்தேகத்தோடு கேட்க,

“அப்படி வந்தா தான் வரட்டுமே, அதுக்கு நாம ஏண்டி பயப்படணும்.. நாம என்ன ஏதாவது தப்பா செஞ்சிருக்கோம், தப்பு செஞ்சா தானே பயப்படணும்..”

“எனக்கென்ன பயம் மச்சி.. நீதான் எதுக்கு மீட் பண்ணனும்னு சீன்ல்லாம் போட்ட, அதான் சார்லஸ் வீட்டுக்கு வர்றதுல உனக்கு ஏதாச்சும் பிரச்சனையோன்னு நினைச்சேன்..”

“இப்பவும் அமுதன் கிண்டல் செய்றதா தான் தோனுது.. அப்படி நிஜமா வீட்டுக்கு வந்தாலும் எனக்கு பயமுமில்ல, ஆனா அவனுக்கு நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்தியே, பார்த்தியா அவன் நம்மல எப்படி டென்ஷன் படுத்துறான்னு..” என்றதற்கு இலக்கியாவும் அதை ஆமோதிப்பதாக தலையசைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.