(Reading time: 11 - 21 minutes)

அவளை அறியாமல் கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. தேம்பினாள். தேம்பலுடனே தன்னை அறியாமல் உறங்கிவிட்டாள்.

அறைக்குள் வந்து படுத்த கருப்பையாவிற்கு உறக்கம் வரவில்லை.

தான் நடந்து கொண்டது அதிகம் என்று புரிந்தது.

அவள் விதிர்த்துப்போய் அமர்ந்திருந்த தோற்றமே மனதில் நின்றது.

ஏதோ தெரியாமல் ஒரு தவறு செய்துவிட்டாள். அதையே குத்திக்காட்டிக்கொண்டிருப்பது சரியில்லை.

இன்று காலை அவன் வேலைக்குச் செல்லும்போதே சரியில்லை. இரவு முழுவதும் மனைவியின் நெருக்கம் அவனை என்னவோ செய்தது.

வேலை செய்யும்போது அவள் சாப்பிட்டாளோ? இல்லையோ என்ற சந்தேகத்தில்தான் அவளைக் கூப்பிட்டதே.

ஆனால் அதன் பிறகு அவன் மனநிலையே மாறிவிட்டது.

அவன் வேலை பார்க்கும் கட்டுமானக் கம்பெனியின் முதலாளி மனைவியின் தம்பியோடு அவனு

...
This story is now available on Chillzee KiMo.
...

்டவளை புரியாமல் பார்த்தான்.

“நான் என்ன கேட்டேன்? நீ என்ன புரியாமல் பேசிக்கிட்டிருக்கே?”

“நான் சரியாதான் பேசிக்கிட்டிருக்கேன்.”

“புரியிற மாதிரி சொல்லு.”

“நம்ம நிச்சயத்தன்று நீங்க ஏன் நடுவில் உட்காராம வேற இடத்தில் உட்கார்ந்தீங்க? நான் உங்களைப் பார்க்கவே இல்லையே.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.