(Reading time: 15 - 29 minutes)

ஆனால் அவனை தான் வெறுத்ததற்கான காரணம் இப்போ ஆட்டம் கண்டுவிட்டதை கண்டவள் உள்ளம் அவனின் மேல் காதல் வயப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கொண்டது. என்னதான் அவன்  செய்கின்ற காரியத்திற்கு விளக்கம் கொடுத்தாலும் அதை செய்வதற்கு அவன் மேற்கொண்டுள்ள நெட் பேங்கிங் திருட்டு. சட்டத்துக்கு புறம்பான ஆயுதமேந்திய அன்னிய தேசத்தவருடனான கூட்டத்தின் பாஸ் என்ற தோரணை. களங்கமில்லாத தனது வாழ்வை புயலாக சுழற்றி  மிரட்டி கல்யாணம் செய்துகொண்ட செயல், முதலியன அவளுக்கு அவனின் மேல் அச்சத்தை கொடுத்தது. அவனை சுற்றியும் ஆபத்து சூழலை  அவன் நிலைமையை அவள் அறவே வெறுத்தாள்.

அவனின் மேல் வெறுப்போடு இருந்தபோது அவர்களுக்கு இடையே நடந்த கல்யாணத்தை அக்ரீமன்ட் மேராஜாக நினைத்து அவனை தள்ளிவைக்க முடிவெடுத்த அவளால் அவன் மனித வடிவில் வாழும் கார்பரேட் அசுரர்களுக்கு  எதிரான  வீரமிக்க போராளியாக கண்டதால் அவனின் ஹீரோ இமேஜின் மேல் காதல் உண்டானது 

இப்படி பூகம்பமாய் உள்ளவனுடன் தனது வாழ்க்கையை இணைந்துவிட்டதை நினைத்தவளுக்கு தன்னால் அவனின் இந்த அதிரடியான சூழலில் தாக்குபிடிக்க முடியுமா? என்ற ஐயம் எழுந்தது. ஒவ்வொருதடவை அவன் வெளியில் போய்விட்டு வரும்போது உருப்படியாக வந்து சேருவானோ மாட்டானோ என்று பயத்தில் தவித்துக்கொண்டு தன்னால் இருக்கமுடியுமா? என்ற பயம் உண்டானது.

அவன் கூறுவதை பார்த்தால் அவனின் வாழ்கையில் தென்றலின் இதம் தீண்டவே போவதில்லை என்ற உண்மை புரிந்த அவளால் அதை ஏற்றுகொல்லவே இயலவில்லை. காதலுக்கும் காதலனின் இயல்பிற்குமிடையே அவளின் பூப்போன்ற உள்ளம் உழன்று வாடி வதங்கியது.

பேபி.... யாழி பேபி... என்று தன்னை பிடித்து தீரன் அசைத்தபோதுதான் தன்னிலையடைந்தாள் யாழிசை.

மிஸ்டர் சத்தியமூர்த்தி உன்னிடம் போய்வருகிறேனு சொல்கிறார் பார் என்று தீரன் கூறியதை கேட்டபின்பே  தனக்குள்ளேயே குழப்பத்தில் மூழ்கி சுற்றி நடக்கும் விசயங்களை கூட கருத்தில் பதியாமல் தான் இருப்பதை உணர்ந்து மலங்க மலங்க முழித்தால் யாழிசை.

சத்திய மூர்த்திக்கு யாழிசையை பார்த்து பாவமாக இருந்தது. அவளை அவர் வானவராயர் வீட்டிற்கு செல்லும் சிலநேரங்களில் பார்த்ததுண்டு ஆழமாக அவளை கவனித்து பார்க்கவில்லை என்றாலும் பிருந்தாவுடன் சிறுபிள்ளையாக தோட்டத்தில் வீட்டிலும் அவள் சிறுபிள்ளையோடு சிறுபிள்ளையாக விளையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில்தான் பார்த்திருந்தார். முயல்குட்டி போன்ற யாழிசைக்கு சிங்கம்போன்ற தீரன் புருசனாய் அமைந்துவிட்டதை நினைத்து இந்தப்புள்ள இப்படிபோய் மாட்டிகிடுச்சே.... என்று தான் அவருக்கு எண்ணத்தோன்றியது .

இருந்தாலும் அதை கூறாமல் பயப்படாம இரும்மா. நான் உன் அப்பாவிடம் வானவராயர் அய்யாவின் மகனுடன்தான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது என்றதை சொல்லி அய்யாவோடு உன் அப்பாப்வையும் கூட்டிகொண்டுவந்து உன்னை பார்கிறேன் தம்பி சொல்பேச்சு கேட்டு கவனமா நடந்துக்கோ என்று கூறிய மறுநொடி.

நோ மிஸ்டர் சத்தியமூர்த்தி இப்போதைக்கு நான் வானவராயர் சன் என்ற விஷயம் வானவராயருக்கு தவிர வேற யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள். நான் இப்போ என்னை என் டாடிடம் வெளிபடுத்த நினைப்பதே சி.என்.ஜிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்கு என் அப்பாவாகிய வானவராயருக்கு உள்ளது என்பது தெரிந்ததால் என் ஆலோசனைப்படி அவர் இந்த விஷயத்தை அணுகனும் என்பதற்காகவும் என் மாம் அவரிடம் ஒப்படைக்க சொன்ன நகைக்காகவும்தான். என்னை அவரின் மகன் என்று அவரிடம் கூட வெளிபடுத்தி கொள்கிறேன் என்றான்.

சி.என்.ஜி அலை தமிழ்நாட்டில் ஓய்ந்தது என்ற நிச்சயத்திற்கு பிறகு என்னை அவரின் மகன் என்று வெளிபடுத்தவே நினைக்கிறேன் அதுவே அவர்களின் பாதுகாப்பு என்றும் கூறினான் தீரன்.

அவன் அவ்வாறு கூறியதும் தீரமிகுந்தன்  உன் அப்பாவை பற்றி உனக்கு தெரியாது நீ மகன் என்ற காரணத்திற்காக நீ சொல்வதற்கெல்லாம் சரி என்று அவர் சொல்வார் என்று நினைக்காதே. அவர் என்றுமே எதையும் சட்டபடியும் நேர்வழியிலுமே எதிர்கொள்வார் உன்னுடைய இந்த பதுங்கி பணத்தாலும் ஆயுதத்தாலும் தாக்கும் கொள்கையோடு அவர் ஒத்துபோவார் என்று எனக்கு தோன்றவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்பதை அவரை சந்தித்தபின்பே முடிவு செய்யலாம் என்று கூறியவர் மிதுனனிடம் திரும்பி, இப்போ மிஸ்டர் தீரன் சொல்வதுபோல் உனக்கு வெளியில் ஆபத்து நிறைய இருப்பதால் இங்கேயே விட்டுச்செல்கிறேன் மிதுனா என்றார் .

மிதுனன் தீரனின் பேச்சையும் அவனின் அதிரடி நடவடிக்கையை சைண்டிஸ்ட் தன்வந்திரியுடன் கூறியதை பார்த்ததும் அவனின் ஹீரோயிசத்தில் ஈரக்கப்பட்டான். அவனுக்கு கீழே இணைந்து பணிபுரிய அவனுக்கு உள்ளத்தில் அவ்வளவு ஆசை பெருகியது .கார்பரேட் போன்ற மிகச்சக்திவாய்ந்த எதிரிகளை வீழ்த்த தீரமிகுந்தன் போன்ற ஒரு பெர்சனால்தான் முடியும் என்ற நிதர்சனம் அவனுக்கு உரைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.