(Reading time: 15 - 29 minutes)

எனவே அவன் பெரியப்பாவை அய்யாவிடம் எப்படியாவது அவர் மகனாகிய மிஸ்டர் தீரமிகுந்தனுடன் இணைந்து சி.என்.ஜி எதிர்ப்பு திட்டத்தை செய்ய ஒத்துகொள்ள வைங்கப்பா  . கண்முன்னால் பார்க்க முடிந்த எதிரிகளுடன் வேண்டுமானால் நம்மால் நேர்மையாக மோதி ஜெயிக்க முடியும். உலகில் ஓர் மூலையில் இருந்துகொண்டு பணம் மற்றும் தந்திரத்தின் மூலம் இங்குள்ளவர்களையே நமக்கு எதிராக ஏவிவிடும் கார்பரேட்காரர்களை போன்ற தந்திரக்கார நரிகளுடன் மோத அவர்களை போன்றே யோசிக்கும் அவர்களுக்கு நிகரான மிஸ்டர் தீரமிகுந்தனுடன் சேர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்றான்.

சத்தியமூர்த்திக்கு மிதுணனை பார்த்து உனக்கு இள ரத்தமில்லையா! அதனால்தான் இப்படியெல்லாம் உன்னால் நினைக்க முடிகிறது. இதுபோன்ற வழிகளில் இறங்கிவிட்டால் திரும்ப நார்மல் வாழ்க்கைக்குள் நம்மால் திரும்ப முடியாது. சட்டபடியும் நேர்மையாகவும் ஒளிவு மறைவில்லாத அனுகுமுறையை கடை பிடிப்பவர்களால் தான் போராட்டம், வாழ்க்கை இரண்டையும் இயல்பாக ஈடுபட்டு  வாழமுடியும் அய்யாவோடு கலந்து பேசியபிறகு என்னசெய்யலாம் என்று முடிவெடுக்கலாம் என்றபடி அவனிடம் விடை பெற்று வெளியேறியவரின் பின்னேயே யாழிசையும் கைபிடித்து தன்னுடன் அழைத்துவந்தவன் மாதவனிடம் சென்று சத்தியமூர்த்தியை சாப்பிடவைத்து அவரை அவரின் வீட்டில் விட்டுவிடுமாறு கூறியவன் தன்னுடைய அறைக்கு யாழிசையுடன் சென்றான்.

என்னவோ இதுவரை அவனின் அருகாமை தராத படபடப்பு இப்பொழுது யாழிசைக்கு எழுந்தது. இன்று காலையில் கூட அவளின் கையோடு கைகோர்ந்து தோளோடு தோளுரசத்தான் இருவரும் கல்யாண நிகழ்ச்சிக்காக காட்சியளித்தனர் காலைமுழுவதும் அப்பொழுது அவளுக்கு இக்கல்யானம் தேவையா? என்ற குழப்பமும் அக்ரீமன்ட் கல்யாணத்திற்கு சம்மதித்தது சரிதானோ? என்ற கேள்வியும் அத்துடன் அவனின் சீண்டளுக்கான கோபமே அவளிடம் நிறைந்திருந்ததால் அவனுடன் இணைந்துநின்றாலும் அவளுக்கு கடுகடுப்பே நிறைந்திருந்தது.

ஆனால் தன்னவனின் திறனும், தன்மையும் உணர்ந்தவளுக்கு இப்பொழுது அவனின் அருகாமை படபடபை உண்டுபண்ணியது. அவனின் ஹீரோயிசத்தின் மீது அவளுக்கு அளவுகடந்த பிரமிப்பு உண்டானது அப்படிபட்டவனுடன் ஜோடியாக கைகோர்த்து நடப்பது பரவசத்தை கொடுத்தது.

அக்ரீமன்ட் கல்யாணத்தை உண்மையாக ஆகிவிடுவோமா...! என்ற ஆவல் உண்டானது முதலில் அவனின் அதிரடியில் ஏற்பட்ட பயம் அவனின் நெருக்கத்தில் விலக ஆரம்பித்தது அக்ரீமன்ட் கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோதே அக்ரீமன்ட் கல்யாணமோ நிஜ கல்யாணமோ எதுவென்றாலும் தனது வாழ்கையில் கல்யாணம் என்பது ஒருமுறைதான் என்ற முடிவெடுத்திருந்தாள்.

இந்நிலையில் தன்னவன் நல்லவன் நாட்டிற்கு நலம்புரியவந்தவன் என்று கேட்டதன்பின் அவனின் மீது தன் கணவன் என்ற மயக்கம் உண்டானது. தன மனம் போகும் பாதையை கண்டவள் திடுக்கிட்டாள்.

அச்சோ... அச்சோ... அக்ரீமன்ட் கல்யாணம் என்பதற்கு சம்மதித்துவிட்டு இப்போ போய் அவனிடம் நான் மயங்கி ஜொள்ளு விட்டு  திரிவதை அவன் கவனித்துவிட்டால் தன்னை பற்றி என்ன நினைப்பான் ஏற்கனவே ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு இருப்பவன் கிட்ட தமிழ் சீரியல் ஆக்டர் மாதிரி பொருத்தமே இல்லாமல் நான் இருந்துகிட்டு நான் ஜொள்ளுவேற விடுவதை அவன் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். கெத்தா இருந்துக்கோ யாழி... அவன் உன்னை கட்டாயத்தில் நிற்கவைத்து கடத்திக் கொண்டுவந்து கல்யாணம் செய்திருக்கிறான் அதனால் நீ அவனின் மேல் கோவமாக இருக்கிற அந்த கோபத்தை பறக்கவிடாமல் பிடிச்சு நிறுத்திகோ டீ... என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.

அவளை தன அறைக்குள் கூட்டிகொண்டுவந்தவன் கதவடைத்து தன்னருகில் நின்றுகொண்டு  அறையின் அழங்காரத்தைகண்டு கண்கள்  சாசர்போல் விரிந்த நிலையில் நிறைவளைக் கண்டவன் உதட்டில் புன்னகை விரிந்தது.

ஆம்... அந்த அரை முழுவதும் ஒருவிதரோஜாவின் வாசம் மிதந்தது. வெள்ளைப்படுக்கையில் இதயவடிவில் சிகப்பு ரோஜா இதழ்களால் அலங்கரிகப்படிருந்தது. கதவிலிருந்து கட்டில் அருகில்வரை கார்பட் விரிப்புபோல் பூக்களால் நடந்துசெல்ல பூப்பாதைபோடப்பட்டிருந்தது .

தன்னைமறந்து நின்றவளை கைகளில் தீரன் ஏந்தியவுடனே தன்னிலை அடைந்து என்ன பண்றீங்க விடுங்க... என்னை என்று துல்லியவளை சிறுகுழந்தயைபோல் அடக்கி கட்டிலில் விட்டவன்.

பேபி ஹனிமூன் காட்டேஜ் செமையா இருக்குள்ள என்று அவளிடம் வம்புக்கிழுக்க கூறினான்.

என்னது... ஹனிமூனா? என்று அவனை முறைத்தபடி அவள்கேட்டதும் ஹஹஹா பயந்துட்டா? அக்ரீமன்ட் கல்யாணம் என்பது உனக்கும் எனக்கும்தான் தெரியும். மற்ற யாருக்கும் தெரியாது இல்லையா! அதனால்தான் என் friends இந்த ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஐ ஆம் சோ டையர்ட் நான் சவர் செய்திட்டு வந்துடுறேன் பேபி என்றவன் அந்த ரூமிற்கு சைடில் இருந்த வழியில் சென்று மறைந்தான்.

அவன் அருகில் இருந்தவரை தன்னுடைய படபடப்பை மறைத்துக்கொண்டு இருந்தவள் அவன் விலகிச்சென்றதும் அப்பாடா என்று மூச்சு விட்டாள்.

அச்சோ இவனோடு எப்படி ஒரே அறையில் தங்குவது அவனுக்கு நான் அருகில் இருப்பது எந்த சலனத்தையும் தரள போல எனக்குத்தான் அவன் கிட்ட விளையாட்டா நெருங்கினால்கூட என்னவோ மாதிரி இருக்கு. கெத்த விட்டுட கூடாது யாழி... பி ஸ்டாங். என்று அவளுக்கு அவளே சொல்லியபடி அமர்ந்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.