Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசு

handsTogether

லை தீபாவளிக்காக சிவரஞ்சனியின் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தனர் சிவரஞ்சனியும், கருப்பையாவும்.

அவர்கள் வரிசை கொண்டு வரும்போதே அவர்களுக்கென்று எடுத்துவந்த ஆடைகளை தன் தந்தையின் மூலம் கொடுத்திருந்தான் கருப்பையா.

அவர்களுக்கு மட்டுமல்ல. தீபாவளிக்கு அழைத்திருந்த நண்பர்களுக்கும் எடுத்து வைத்திருந்தான்.

எப்போதும் நடப்பதுதான். அவர்கள் குடும்பத்திலும் இவனுக்கு எடுத்துக்கொடுப்பார்கள்.

சீதாலெட்சுமி அவர்களுக்கு சீர் கொடுப்பதற்காக தீபாவளி பலகாரங்களை செய்ய ஆரம்பித்தாள்.

“அத்தை. நீங்க தப்பு பண்ணிட்டீங்க அத்தை. வரப்போற மாப்பிள்ளைங்களையாவது கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.”

திடீரென்று அவன் அப்படிக் கேட்டதும் அவள் புரியாமல் பார்த்தாள்.

“அத்தை. நீங்க எத்தனை சுவையா சமைக்கறீங்க. அதை ஏன் உங்க பொண்ணுக்கு சொல்லித் தரலை?”

அதைக் கேட்டதும் அவள் சிரித்தாள்.

சந்திரசேகர் வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்துவிட்டு ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார்.

சீதாலெட்சுமிக்குத் தன் மகளின் மனமாற்றத்தை நினைத்து மிகவும் ஆச்சர்யம். மாப்பிள்ளையை நினைத்தும்தான்.

திருமணமே வேண்டாம் என்று சிவரஞ்சனி மறுத்ததும், அதை நேரிலேயே கருப்பையா கேட்க நேர்ந்ததும் அவள் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது.

இப்போது சிவரஞ்சனி ‘மாமா... மாமா’ என்று உருகுவதும், அவனும் அவளிடம் பிரியமாக இருப்பதைக் கண்டதும் அவளுக்கு மகிழ்ச்சி.

சந்திரசேகர் மதிய உணவிற்கு வந்துவிட்டு மீண்டும் சென்றுவிட்டார்.

“மாமா. நீங்க எடுத்துட்டு வந்த டிரஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”

என்றவாறே அந்த உடையுடன் வந்தாள் மனோரஞ்சனி.

அவளுக்கு அத்தனை சந்தோசம். இதுவரைக்கும் அவளது பெற்றோர் எடுத்து தந்தது மட்டும்தான். இப்போது தன்னைக் கவனித்துக்கொள்ள இன்னொரு சொந்தம் உருவாகியிருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சீதாலெட்சுமி வேலை எல்லாம் முடித்துவிட்டு வரும்வரை காத்திருந்த கருப்பையா அவள் வந்ததும் தான் பேசுவதற்காக காத்திருந்த விசயத்தை ஆரம்பித்தான்.

மனைவியின் மனதில் உள்ள தவறான அபிப்ராயத்தை போக்கியே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வலுத்தது.

“அத்தை. மாமா எங்க போனாலும் வீட்டுக்கு சாப்பிட வந்துடுவாரா?”

“ஆமா மாப்பிள்ளை. எங்க கல்யாணம் ஆனதிலிருந்தே அப்படித்தான்.”

“உங்களுக்கு ஏதாவது சிரமம் கொடுத்திருக்காரா?”

“என்ன மாப்பிள்ளை இப்படிக் கேட்டுட்டீங்க? இந்த வீட்டில் நான் ஒரு மகாராணி மாதிரி வளைய வந்துக்கிட்டிருக்கேன்.”

“நீங்க இப்படி சொல்றீங்க? ஆனால் உங்க பொண்ணு வேற மாதிரி நினைச்சுக்கிட்டிருக்காளே.”

தனக்கு எதையோ புரிய வைக்க கணவன் முயற்சி செய்கிறான் என்று அவளுக்கும் புரிய ஆரம்பிக்க அவளும் அவர்களுக்கு அருகில் வந்தமர்ந்தாள்.

“மனோ. நீயும் வா.”

கருப்பையா மனோரஞ்சனியையும் அழைத்தான்.

அவள் வந்து அமர்ந்ததும் தன் பேச்சை ஆரம்பித்தான்.

“அத்தை. மாமா ஆரம்பத்திலேருந்தே நல்ல வசதியா இருந்தாங்களா?”

“இல்லை மாப்பிள்ளை.”

என்றவள் சொல்ல ஆரம்பித்தாள்.

ந்திரசேகர் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம்.

அவன் கூட பிறந்தது மூன்று பெண்கள்.

சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட அவனது தாய் சாவித்திரிதான் குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தி வந்தாள்.

சந்திரசேகருக்கு விவரம் தெரிய வந்த பிறகு தாயின் சிரமத்தைக் குறைக்க விரும்பினான். படிக்கப் பள்ளிக்குப் போக வேண்டிய வயதில் பாரம் சுமக்க ஆரம்பித்தான்.

அவனது தாய்க்கு நல்ல கைப்பக்குவம். அதனால் அவள் ஊறுகாய், வத்தல் வடாம் போட்டுத் தருவாள்.

அதைத் தெருத் தெருவாய் கொண்டு போய் விற்று வருவான்.

ஆனால் அதைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அவனது தாய் சாவித்திரிக்கு அடுப்புப்புகை ஒத்துக்கொள்ளாமல் தொந்தரவு செய்தது.

கொஞ்சம் வளர்ந்ததும் வீட்டில் பெண்கள் மாவு அரைத்துத் தர, அதைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று வடையாகத் தட்டி விற்றான். கொஞ்சம் கொஞ்சமாய் பஜ்ஜி, வடை என்று விற்றவன் ஒரு டீக்கடையை ஆரம்பித்தான். அவனுக்கு நல்ல கைப்பக்குவம். அதனால் கடையில் நல்ல ஓட்டம் இருந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுsaaru 2018-12-27 10:32
Nice update Raji...
Gowtham ku seekrama marriage fix pannunga..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுmahinagaraj 2018-12-25 16:49
ரொம்ப கியூட்டா போச்சு.. மேம்.. :clap: :clap:
ஏன் இப்படி ஒரு ஷாக் கொடுக்கரீங்க... :sad: :eek:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுRaasu 2018-12-25 19:00
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுAdharvJo 2018-12-24 22:32
Interesting update Rasu ma'am :clap: :clap: Mr BB sema Ranjimavaaaaaaaaa :D how sweet ninga kalakuringal wow
Uncle sema humble and karuthukararu :hatsoff: avara poi MM ippadi ninaichitiyema facepalm I thought etho manga va irukkumn rasu ma'am :P apt one ;-)
Gaja effect ala ivanga pirinjiduvangalo? :sad: please yarukkum ethuvum agamal parthukolungal. and correct aga sonninga even after alerts ppl don't take complete precautions...Inga ena agumn therindhukola waiting. thank you ma'am.

Happy Christmas and Year End :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுRaasu 2018-12-24 23:48
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுSrivi 2018-12-24 20:58
Nice..ranjimma VA sema .. aana please sis, gaja vala innum makkal padara kashtam kana mudiyala..indha storylayuma..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுRaasu 2018-12-24 23:47
Thank you Srivi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுmadhumathi9 2018-12-24 20:57
:clap: nice epi mam.gaja puyal kora thandavathai aarambithathu endru solli irukkeengale romba baathikkaatha maathiri kathai ezhuthungal. :thnkx: 4 this epi.waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுRaasu 2018-12-24 23:44
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுrspreethi 2018-12-24 18:34
Nice update... Siva appa patthi purinjukittanga idhupola niraya appakal irukanga... Gaja puyal nala story la yarukachum badhippu varuma :sad: vendam pls facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசுRaasu 2018-12-24 19:46
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top