(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 39 - தேவி

Kaathalana nesamo

மித்ராவின் கேள்வியில் ஷ்யாம் பதறியவனாக அணைத்த படி

“என்ன கேள்விடா.. ரித்து? உன்னைப் பிடிக்காதுன்னு உனக்கு ஏன் தோனுச்சு?” என்று கேட்டான்.

“நம்ம கல்யாணம் நடந்த சூழ்நிலை தான் . ரெண்டு பேருமே எதிர்பார்க்காத நேரத்தில் நடந்தது.”

“அப்படிப் பார்த்தா உனக்கும் என்னைப் பிடிக்காதுன்னு நான் நினைக்கட்டுமா?

“அப்படி இல்லை அத்தான். என்னோட நிலைமையில் எதிர்பார்ப்பு எதுவும் இருக்க நியாயமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லையே. உங்களுக்கு வரப் போற மனைவி பற்றின கற்பனை இருந்து இருக்கும் தானே. “

“உனக்கு என்ன குறைச்சல்? எல்லா எதிர்பார்ப்பும் உனக்கும் இருக்கலாம். அப்படிப் பார்த்தால் உன் எதிர்பார்பிற்கு நான் இல்லையோன்னு எனக்குத் தோணுது.”

வேகமாக அவன் வாயைப் பொத்தி “உங்களை விட என்னைப் புரிஞ்சிகிட்டவங்க யாரும் இருக்க மாட்டாங்க அத்தான். நீங்க கிடைச்சது அந்தக் கடவுள் கொடுத்த வரம் தான்” என தழுதழுத்தக் குரலில் மித்ரா கூற,

“ஹேய்.. கண்ணம்மா. நானும் சாதாரண மனுஷன் தான். அப்படிப் பார்த்தால் நீ கிடைச்சதும் எனக்கு வரம் தான். நாம அந்த அளவிற்கு எல்லாம் போக வேண்டாம். சாதாரண மனுஷங்களாவே இருப்போம்.” என்று கூறியவன்,

“நீ மேலே சொல்லு. “ என்றான்.

“நான் என்ன சொல்ல? ஹ்ம். அஷ்வின் அண்ணா அப்படிச் சொல்லவும், நானும் கொஞ்சம் சாதரணமா தான் இருந்தேன். ஆனால் கொஞ்ச நாளா நீங்க எங்கிட்ட பேசறதில்லை. என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலை. இது எல்லாம் யோசிச்சுட்டு இருந்தப்போ, நேற்றைக்கு சுமித்ரா கிட்டே கோபமா பேசினீங்க. இதுவரைக்கும் வீட்டில் யார்கிட்டேயும் கோபப்பட்டுப் பார்த்ததில்லையா? நான் சுமிக்கு சப்போர்ட் பண்ணவும் எங்கிட்டயும் கோபப்பட்டீங்க. ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்கன்னு யோசிச்சேன். அப்போ தான் இந்த ரிபோர்ட் நியாபகம் வந்தது. ஒருவேளை இதுதான் காரணமா இருக்குமோனு தான் அண்ணா சொன்ன மாதிரி இன்னைக்கு டாக்டரப் பார்க்கப் போனேன்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சரி. அதுக்கு ஏன் அம்மா கிட்டே அத்தை வீட்டிற்குப் போறதா சொல்லிட்டுப் போனே?

“க்கும். நேத்திக்கு சுமிய சமாதனப் படுத்த என்ன எல்லாம் செஞ்சீங்க? என்னை மட்டும் என்னன்னு கூட கேட்கலை. சரி அதுதான் போகுதுன்னுப் பார்த்தா, எங்கிட்ட வந்து என்னவெல்லாமோ பேசினீங்க. எனக்கு செம கோபம். அதோட அத்தை கிட்டே தனியா டாக்டர் கிட்டே போறேன்னு சொன்னால், அவங்களும் வரேன்னு சொல்லுவாங்கனு தான் அப்படிச் சொன்னேன்”

அவளின் பாவனைகளைப் பார்த்துச் சிரித்தவன்,

“நீ இன்னும் அதே மித்துக் குட்டிதாண்டா ரித்து. கோபம் வந்தால் ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து இறங்காம படுத்தற குட்டிப் பொண்ணுதான்” என்று அவளின் தலையில் முட்டினான்.

“இந்தக் கொஞ்சல் எல்லாம் வேண்டாம். நீங்க எதுவுமே சொல்லலை. என்னை மட்டும் பேக்கு மாதிரி பேச வச்சுக்கிட்டு இருக்கீங்க” என்று கோபத்துடன் மித்ரா சொல்ல,

“ஹ.ஹ. பேக்கு.. இது கூட நல்லா இருக்கு. “ என்று ஷ்யாம் பதில் அளிக்க, மித்ரா அவனை முறைத்தாள்.

“ஓகே . ஓகே. டியர். இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிடீங்கன்னா, நான் உனக்குப் பதில் சொல்றேன். ஓகேவா”

மித்ரா சரி என தலையசைக்கவும்,

“உனக்கு என்னை எப்போலேர்ந்து உன் கணவனா பிடிச்சது? “ என்று கேட்டான்.

“எப்போவுமே நீங்க எனக்கு ஸ்பெஷல் தான். நம்ம கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கு சாயந்தரம் நாம பர்ஸ்ட் அம்மா வீட்டிற்குப் போனோம் இல்லியா? அப்போ நீங்க அம்மா கிட்டே நல்லா அரட்டை அடிச்சுட்டு இருந்தீங்க. அதைப் பார்த்தப்போ, அந்த சரவணனக் கல்யாணம் பண்ணிருந்தா அவன் இப்படி எல்லாம் நடந்து இருப்பானான்னு தோணிச்சு. அதே மாதிரி நாம இங்கே வந்தப்போ , வின்னிய எனக்காக எடுத்துட்டு வரச் சொல்லிருந்தது, ஆனால் வின்னிக்கு நம்ம பெட்டில் இடம் கிடையாதுன்னு நீங்க சொன்ன விதம் எனக்கு ரொம்ப இம்ப்ரெஸ்சிவ்வா இருந்துது. என்னைக் கொஞ்சம் கொஞ்சமா வெளி உலகம் பார்க்க வைச்சது, அத்தைக் கூட அவங்க ஆபீஸ்க்கு அனுப்பினது, கார் டிரைவ் கத்துக் கொடுத்தது இது எல்லாம் உங்களை மாதிரி வேறு யாரும் என்னைப் பொறுமையா ஹான்டில் பண்ணிருப்பாங்காளா அப்படின்னு அடிக்கடி யோசிச்சு இருக்கேன். உங்களுக்கு அடிப்பட்டப்போ ரொம்ப தவிச்சுப் போயிட்டேன். இது எல்லோருக்கும் எப்போதும் நேரக் கூடிய சாதாரண விபத்துதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை உங்களோட துணை இல்லைனா என்னால எதுவுமே செய்ய முடியாது. உங்களோட ஆலோசனை அப்படின்னுக் கூட சொல்லமுடியாது. எனக்கு என்ன வேணும் என்பது என்னை விட உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். அந்த விபத்து அப்போ உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தால் நான் என்னவாகி இருப்பேன் யோசிச்சப்போ தான் நீங்க எனக்கு எவ்ளோ முக்கியம்ன்னுத் தெரிஞ்சுது. அந்த சரவணன் வந்து நீங்க எனக்கு டிவோர்ஸ் கொடுக்கத்தான் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிருக்கீங்கன்னு சொன்ன போதுதான், என்னாலே நீங்க இல்லாம இருக்கவே முடியாதுன்னு புரிஞ்சு, அஷ்வின் கிட்டே பேசினேன். அதுக்கப்புறம் நடந்ததுதான் ஏற்கனவே சொன்னேனே” என்று முடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.