(Reading time: 14 - 27 minutes)

“உனக்கு சின்ன வயசுலே இருந்த அந்த லேர்னிங் டிசேபிளுக்கும் இப்போ நான் கேட்ட எந்த கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்போதில் இருந்தே உன்னை ஸ்பெஷல் கேர் எடுத்துப் பார்த்ததால், அந்தப் பிரச்சினைய சமாளிக்கிற அளவிற்கு உன் மூளை பழகி இருக்கும்னு சொல்றாங்க. இதுவே உனக்கு கல்யாணம் வெளி இடத்தில் நடந்து இருந்தால், அங்கே உள்ள பழக்கங்கள் பழக உனக்கு நாளாகி இருக்கும். அதுவரை மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? உன்னை மட்டம் தட்டி , உன்னுடைய இயலாமையைக் குத்தி காண்பித்து, இயல்பான உன்னை முடக்கி இருப்பார்கள் என்றார். ஆனால் உன்னை நன்கு அறிந்தவர்களே உனக்கு இப்போ குடும்பமாக மாறி இருப்பதால், உன்னோட இயல்பு எந்த விதத்திலும் பாதிக்காது. அப்படின்னு சொன்னார்”

“இதை எல்லாம் ஏன் என்கிட்டே நீங்க சொல்லலை?

“உனக்கு சொல்லத்தான் நினைச்சேன். ஆனால் அதற்குள் அன்னிக்கு ஆபீஸ்லே சரவணன் வந்து பேசவும், எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அதைப் பற்றி நீ சொல்லவில்லை என்றாலும், அவனையும், என்னையும் ஒன்று போல் நினைப்பாயோ என்று தோன்றியது. அதுவும் தவிர, இது நான் எப்படி நடந்துக்க வேண்டும் என்று கேட்கத்தானே. அதைப் பற்றி உன்னிடம் சொல்லவேண்டுமா என்ற யோசனையும் தான் இருந்தது.”

“சரி. எங்கிட்ட என்ன கோபம்?

“அது.. நீ அஷ்வின் கிட்டே பேசினதும், அவன் எங்கிட்ட பேசினான். அக்காவிற்கு என்ன பிரச்சினை? ஏன் டெஸ்ட் எல்லாம் எடுக்கறீங்கன்னு கேட்டான்? நான் அது எல்லாம் ஒன்னும் இல்லை. நான் பார்த்துக்கறேன்னு சொன்னான். அதுக்குப் பதில் அவன் உனக்கு அரைகுறையா விஷயம் புரிஞ்சு , நான் உன்னை டிவோர்ஸ் பண்ணப் போறேன்னு நினைசுகிட்டு இருக்கிறதா சொன்னான். எனக்கு அப்போ ரொம்ப கோபம் வந்துடுச்சு. டிவோர்ஸ் எவ்ளோ பெரிய விஷயம் . என்னைப் பற்றி அவ்ளோதான் நீ புரிஞ்சு வச்சுருக்கியான்னு ரொம்ப வருத்தமா இருந்தது. அந்தக் கோபத்தில் தான் கொஞ்ச நாளா உன்கிட்ட பேசாமல் இருந்தேன்”

“ஐயோ. என்னை அந்த சரவணன் நல்லா குழப்பி விட்டு இருந்தான். அதான் அஷ்வின் கிட்டே அப்படிப் பேசினேன்”

“ஹ்ம்ம். இன்னைக்கு அது எனக்கும் புரிஞ்சது. அதோட எங்கிட்ட என்னன்னு நீயே கேட்டு இருக்கலாமே. ஏன் அஷ்வின் கிட்டே சொன்னன்னும் ஒரு கோபம்”

“உங்களுக்குக் கோபம் வந்துடுமோநு ஒரு பயம்”

“ஹ்ம்ம்.. டாக்டர் கிட்டே பேசினப்போ, இயல்பா உன்னோட எல்லா உணர்ச்சிகளும் , எங்கிட்ட நீ காண்பிக்க ஆரம்பிச்சா, நான் உன்னை நெருங்குவதும் இயல்பா இருக்கும்னு சொன்னார். அதான் இத்தனை நாளா நான் கோபம் இருக்கிற மாதிரி நடிச்சேன்”

“ஹா.. நடிச்சீங்களா? நேத்திக்குக் கூடவா?

“நேத்திக்கு உன்னைப் பற்றிதான் யோசிச்சுட்டு இருந்தேன். இவ்ளோ தூரம் பேசமால் இருந்தும் எங்கிட்ட எதுவும் கேட்காமல், சண்டை போடாமல் இருக்கியேன்னு வருத்தமா இருந்தது. அப்போதான் சுமிய திட்டினேன். நீ எங்கிட்ட சுமிக்கு சப்போர்ட் பண்ணிப் பேசவும், நானும் திருப்பி உன்கிட்ட கத்திட்டேன். பிறகு யோசிச்சப்போ தான் இதுவரைக்கும் நாந்தான் உன்கிட்ட கோபப்பட்டு இருக்கேன். நீயா கோபப்பட்டது இப்போத்தான். சோ இதை எப்படி ஹான்டில் பண்றன்னு பார்க்க வெயிட் பண்ணினேன்”

“சரி. சுமிய சமாதனம் பண்ணினப்போ, என்னையும் சமாதனாம் பண்ணிருக்கலாமே. அப்போவும் எங்கிட்ட கோபப்பட்டீங்க?

“அதுக்குக் காரணம் உன் ரூல்ஸ் மாமானார் தான்” என,

அவனின் கையில் ஒரு தட்டு தட்டி,

“ராம் மாமாவ அப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்றாள்.

“க்கும். உங்க மாமா நேத்திக்கு என்னைக் கூப்பிட்டு ஒரே திட்டு. அந்த ஓட்ட வாய் சுமி, ரிபோர்ட் பற்றி அப்பா கிட்டே சொல்லிட்டாப் போலே. அது ஏன் எதுக்குன்னு ஒரே நொச்சு. எல்லாம் நான் பார்த்துக்கறேன்னு சொன்னதும், நீ கிழிச்ச கிழிய இன்னிக்கு காலையில் பார்த்தேனேன்னு அதுக்கும் திட்டு. அப்புறம் அவரை சமாதானப் படுத்தி உள்ளே வந்தா, நீ என்னவோ கேட்க வந்தியா? மொத்தக் கோபமும் சேர்ந்து உன்னை ஒரு கடி கடிச்சுட்டேன்”

“ஏன் மாமா கிட்டே விஷயம் என்னன்னு சொல்ல வேண்டியது தானே?

“நம்ம விஷயம் நமக்குள்ளதான் ரித்து. இது வேறே யாருக்குத் தெரிஞ்சாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லிக் காட்ட வாய்ப்பு உண்டு. என் அப்பா, அம்மாவா இருந்தாலும், நமக்குள்ளே இண்டர்பியர் ஆக விடமாட்டேன்”

இப்போது மித்ரா ஷ்யாமைத் தாவி அனைத்து இருந்தாள்.

இதுவரை மித்ராவாக ஷ்யாமை அணைத்தது இல்லை என்பதால், ஷ்யாமிற்கு இது இனிய அதிர்ச்சியே. மேலும் அவளை இறுக்கிக் கொண்டு,

“என்ன என் கண்ணம்மாவிற்கு அப்படி ஒரு சந்தோஷம்?” என்று கேட்டான்.

“என்னைப் பற்றி எல்லாம் தெரிந்த நம் குடும்பதினரிடத்தில் கூட நீங்க என்னை விட்டுக் கொடுக்க மாட்டீங்கன்னு சொன்னீங்களே . அதான். எல்லோருமே எனக்கு ஆதரவா , என்னைப் பரிதாபமா தான் பார்ப்பாங்க. என் அம்மா கூட. நீங்க தான் எல்லோருக்கும் உள்ள உணர்வுகள் எனக்கும் உண்டுன்னு புரிஞ்சு வச்சுருக்கீங்க ஷ்யாம். இப்படி ஒரு அன்பு கிடைக்க நான் புண்ணியம் பண்ணிருக்கணும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.