(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 17 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

ன்னை பின்னிழுத்த கை மிருதுவாக இருப்பினும் அதில் உறுதியை ஆகாஷ் உணர்ந்தான். அந்த கை மிகச்சரியாக அவன் நாசியை அல்லாமல் வாயை மட்டுமே மூடியிருந்தது. அவனுக்கு சீராக மூச்சுவிட ஏதுவாக இருந்தது. அந்த கையில் மண் மற்றும் மூலிகை வாசம் வீசியது.

இவ்விருவரும் ஆசிரமத்தை நோக்கிய பாதையில் செல்லும்வரை சும்மா இருந்த ஆகாஷ் பின்னர் வலது கையால் சட்டென அந்த மனிதனை முன்னே இழுத்துவிட்டான். அவன் முன்னே இரண்டடி போய் விழுந்தான். அவன் சுதாரிக்கும் முன் கைகளையும்  கழுத்தை பிடித்துக் கொண்ட ஆகாஷ் “யார் நீ?” எனக் கேட்டான்.

“லீவ் மீ.. .லீவ் மீ . .நான் உனக்கு ஹெல்ப் பண்ணதான் வந்திருக்கேன்” என கரகரத்த குரலில் பேசினான் அவன். ஐம்பது வயதை எட்டிப் பிடித்திருந்தான். முன்தலை சொட்டை . . நாய்க்கு கட்டப்படுவது போல மூக்கு கண்ணாடி செயினுடன் இணைந்திருந்தது. தற்பொழுது மூக்கு கண்ணாடி ஒய்யாரமா ஊஞ்சலாடியபடி இருந்தது.

முழுக்கை சட்டை பேண்ட்டுக்குள் தஞ்சம் புகுந்திருந்தது. பழைய பட ரங்கா ராவ் ஸ்டைலில் வார் வைத்த பேண்ட் அணிந்திருந்தார். இருபக்க தோள்களிலும் வார் சட்டையை இருக பிடித்திருந்தது.

சந்தேகம் இருந்தாலும் வயதினை பொருட்டு தன் பிடியை தளர்த்தினான் ஆகாஷ். மெல்ல எழுந்து நின்றவர் “என் பேரு பத்ரிநாத் . . ஐம் எ பாடனிஸ்ட்” என சொல்லியபடி ஆகாஷிடம் யையை நீட்டினார்.

ஆனால் அவனோ சந்தேகமாக தலையசைத்தபடி “இங்க என்ன செய்யறீங்க?” என்றான்

“பொக்கிஷத காப்பாத்த முயற்சி பண்றேன்” என்றார்.

“பொக்கிஷமா? எங்க இருக்கு?” என்றான் ஆச்சரியமும் சந்தேகமும் தொனியில் விலகாமல்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இதோ என் கண் முன்னால இருக்கிற எல்லாமே விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள்தான்” என சுற்றி உள்ள மரம் செடி கொடிகளை பார்த்தபடி அழுத்தமாக மூச்சை சுவாசித்தார்.

“ஐய்ய்யோ . .  கீழ விழுந்த்துல என்னமோ ஆயிடுச்சா” என தனக்குள் கேட்டுக் கொண்டவன்.

“சாரி நான் உங்கள தவறா நினைச்சி தள்ளிட்டேன் .  . வாங்க போலாம்” என அவர் அருகில் சென்றான்.

இத்தனை நேரம் பிடிக்காத கிரிக்கெட் டீம்மை பார்ப்பதுப் போல பார்த்தவன் சட்டென மாறியதை புரிந்துக் கொண்டு புன்னகைத்தார்.

“ஐம் ஆல்ரெய்ட் மை பாய்” என்றார்

ஏனோ அவரை விரோதமாக நினைக்க முடியவில்லை. இப்பொழுது தன் முறை என கையை நீட்டி “ஆகாஷ் . . அட்வகேட்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரும் கைக் குலிக்கிக் கொண்டனர்.

“பொக்கிஷம்னு சொன்னீங்களே” என தனக்கு அவர் வாக்கியத்தின் சரியான புரிதல் இல்லை என்பதால் மீண்டும் கேட்டான்

“பிரிட்டிஷ் டச்சு பிரெஞ்ச் முகல்ஸ் . . இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் . .நம்ம நாட்டு புதையல் பொக்கிஷங்கள கொள்ளை அடிச்சாங்க . .அதே மாதிரி இப்பவும் நடக்குது சிலர் இந்த மலைல இருக்கிற பொக்கிஷங்கள கடத்துறாங்க” என நிறுத்தி கூர்மையாக அவனை பார்க்க

“இங்க எதுவும் தங்கம் வைரம் அது மாதிரி எதாவது இருக்கா?

“இல்ல ஆகாஷ்” நிறுத்தி சிரித்தவர் “இது தங்கம் வைரத்தவிட மேன்மையான அரிய  பொருள்”

“ரியலி . . யூ மீன் பிளாடினம்”

புன்னகையோடு “நோ” அழுத்தமாக வந்தது.

“ஸாரி இங்க கூகுள் வராது . . நீங்களே சொல்லிடுங்க”

“இந்த மரம் செடி கொடி இது எல்லாமே பொக்கிஷம்தான் . . இதோட வேல்யூ தெரியுமா உனக்கு?” என்றவர் சுற்றி அவைகளை ஆசையாக பார்த்தார்.

“ நிச்சயமா நட்டு கழுண்டுடிச்சி” என நினைத்தவன் “ இவரை தனியே விடக் கூடாது . . துரிதமாக ஆசிரமத்திற்க்கு இவரை அழைத்து செல்ல வேண்டும்” என அவன் எண்ணங்கள் ஓடின.

“நம்ம நாட்டு பொக்கிஷங்கள நாம பாதுகாக்கணும் . .” என பேசிக் கொண்டே போனவரை  “ சரி பாதுகாக்கலாம் . . வாங்க இங்க ஒரு ஆசிரமம் இருக்கு முதல்ல அங்க போகலாம்” என அழைத்தான்

“தேங்க்ஸ் ஆகாஷ் நீங்க போங்க” என சொன்னவர் கூடையை எடுத்துச் சென்றவர்கள் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்

என்ன செய்வதென்று தெரியாமல் அவரை தனியே விட மனமும் இல்லாமல் பின்தொடர்ந்தவன் “எங்க போறீங்க?” என்றான்

“இன்னிக்கு ராத்திரி கடத்தபோற மூலிகைகளை தடுக்க போறேன்”

“அந்த சாதாரண இலைதான . . இதுல என்ன இருக்கு வாங்க” என அவர் கையை பிடித்து நிறுத்த முயல

“ஸ்டாப் இட் ஆகாஷ் . . அது சாதாரண இலை இல்ல . . எத்தன மெடிக்கல் வேல்யூ நிறைந்தது தெரியுமா? அது என் நாட்டுக்கு சொந்தமானது” என கோப்பட்டவரை என்ன சொல்லி சமாதானம் செய்ய என குழம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.